மதுரை மார்ச் 31- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் சேந்தமங்கலம் கிளையைச் சேர்ந்த மூத்ததோழர் கே. பழனிச்சாமி ( வயது 82) அவர்கள் வெள்ளியன்று காலமனார். 50 ஆண்டுகளாக கட்சி நடத்தக்கூடிய போராட்டங்கள் மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகள் நடத்திய போராட்டங்களில் பங்கேற்றவர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டவர். அன்னாரது மறைவு செய்தி அறிந்து கட்சியின்புறநகர் மாவட்ட செயலாளர் கே. ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பா.ரவி, வி. உமாமகேஸ்வரன், பி. ஜீவானந்தம், அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் எஸ். ஆண்டிச்சாமி மற்றும் கிராம பொதுமக்கள் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்வில் அவரது உடலில் செங்கொடி போர்த்தி நல்லடக்கம் செய்யப்பட்டது. விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் ஏ. லாசர் இரங்கலை தெரிவித்தார்.