districts

திருச்சி விரைவு செய்திகள்

75-வது சுதந்திர தின விழா: இசை கருவி பயிற்சி முகாம்

திருச்சிராப்பள்ளி, ஆக.4 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க திருச்சி மாவட்ட திரைக் கலைஞர்கள் கிளை ஆலோசனை கூட்டம் தில்லை நகரில் உள்ள டுலைட் டான்ஸ் ஸ்டுடியோவில் நடந்தது. கூட்டத்திற்கு கிளைத் தலைவர் பிரதாப் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பிரின்சி வரவேற்றார். கிளைச் செயலாளர் லாரன்ஸ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் சிவ.வெங்கடேஷ் ஆகியோர்  சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் 75 ஆவது சுதந்திர தின அமுத பெரு விழாவையொட்டி பறை, வயலின், கிடார் போன்ற இசைக் கருவி களை வாசிக்க பயிற்சி முகாம் நடத்துவது, சுதந்திர தினத்தை நடன  மாணவர்களுடன் இணைந்து கொண்டாடுவது என முடிவெடுக்கப் பட்டது. முன்னதாக அபிஷேக்கின் தனி நடனம் நடைபெற்றது. கிளை  பொருளாளர் சந்துரு நன்றி கூறினார்.


எலும்பு மூட்டு வார விழா: விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர், ஆக. 4 -  ஆகஸ்ட் 4 ஆம் தேதி தேசிய எலும்பு மூட்டு தினமாக கடைபிடிக்கப் பட்டு வருகிறது. இதையொட்டி ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி  வரை எலும்பு மூட்டு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் சங்கம் பட்டுக் கோட்டை கிளை, தஞ்சை மாவட்ட ஆர்த்தோ கிளப் சார்பில், பட்டுக்கோட்டையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. மாநிலச் செயலாளர் மருத்துவர் ரவி தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில், காவல் ஆய்வாளர் ராஜேஷ் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். மணிக்கூண்டு அறந் தாங்கி முக்கம், பெரிய கடை தெரு வழியாக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் பங்கேற்றோர் எலும்பு மூட்டு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்ற னர். சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோரை காப்பாற்ற வேண்டும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. 


திருச்சி என்ஐடியில் நாளை பட்டமளிப்பு விழா

திருச்சிராப்பள்ளி, ஆக. 4 - திருச்சி என்ஐடி இயக்குநர் அகிலா செய்தியாளர்களிடம் கூறிய தாவது: இந்தியாவில் உள்ள என்ஐடிகளில் திருச்சி என்ஐடி முதலிடத்தில் உள்ளது. திருச்சி என்ஐடியின் 18-வது பட்டமளிப்பு விழா சனிக் கிழமை (ஆக.6) அன்று நடைபெற உள்ளது. கொரோனாவுக்கு பிறகு  நடக்கும் நேரடி பட்டமளிப்பு விழாவில், 881 இளநிலை மற்றும் முதுநிலை  உள்ளிட்ட 1975 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளன. என்.ஐ.டி குழும தலைவர் பாஸ்கர்பட் தலைமையில் நடக்கும் விழா வில், பெடரல் வங்கி தலைமை செயல் அலுவலர் ஷ்யாம் சீனிவாசன் தலைமை வகிக்கிறார். கடந்த 3 ஆண்டுகளில் என்ஐடியில் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.20 கோடி முதலீடு செய்யப் பட்டுள்ளது. என்ஐடி முன்னேற்றத்திற்கு முன்னாள் மாணவர்கள் சங்கத் தின் பணி அளப்பரியது என்றார்.  பேட்டியின் போது என்ஐடி பதிவாளர் தாமரை செல்வன், டீன் ரமேஷ், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் பக்தவச்சலம், ஒருங் கிணைப்பாளர் அசோகன், பேராசிரியர் சிவக்குமரன் ஆகியோர் உட னிருந்தனர்.


கடன் தொல்லை: மூதாட்டி தற்கொலை

அரியலூர், ஆக. 4- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு தென்வடல் தெருவைச் சேர்ந்த நடராஜ்.  இவரது மனைவி ஜெயமணி(60). இவர் களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் வருமானமின்றி இவர்கள் கடன்  வாங்கி செலவு செய்துள்ளனர். இந்நிலையில் நடராஜ் மற்றும் அவரது  மகன்கள் கடனை அடைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனக் கூறப் படுகிறது. இதனால் கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி மற்றும் மிரட்டல் காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்த ஜெயமணி, கடந்த  ஜூலை 27 அன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.  இதில் விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்த ஜெயமணியை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த ஜெயமணி சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ் பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.


குடிநீர் சுத்திகரிப்பு கருவி வழங்கல்

தஞ்சாவூர், ஆக.4 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பள்ளிகொண்டான் லாரல் மேல்நிலைப் பள்ளித் தாளாளர்  வி.பாலசுப்பிரமணியன், தனது பேரன்  பூந்தமிழன் பிறந்த நாளை முன்னிட்டு, பட்டுக்கோட்டை நகராட்சி நடு நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு ரூ.65 ஆயிரம்  மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்புக் கருவியை வழங்கினார். இதற்கான விழாவிற்கு, பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்கத் தலைவர் சிவச்சந்திரன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற சென்னை உதவி  காவல் ஆணையர் சிவபாஸ்கர், திமுக நகரப் பொறுப்பாளர் செந்தில் குமார் முன்னிலை வகித்தனர். 


பயிரில் மஞ்சள் வாடல் நோய்

அய்யம்பேட்டை, ஆக.4 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே வீரமாங்குடி மற்றும்  இதன் சுற்றுவட்டார கிராமங்களில் கரும்பு பயிரை மஞ்சள் வாடல் நோய்  தாக்கியிருந்தது. இது தொடர்பாக கோவை கரும்பு பெருக்க மைய மூத்த  விஞ்ஞானி விஸ்வநாதன், விஞ்ஞானி செல்வகுமார், கரும்பு அலுவலர்  இந்திரஜித் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இப்பகுதியில் உள்ள  கரும்பு பயிர்கள் சுமார் ஐந்து முதல் ஆறு மாத கால வயதுடையவை. மூன்று மாதத்திற்கு உட்பட்ட இளம் கரும்பு பயிரில் நோய் கட்டுப்பாட்டு  முறைகளை மேற்கொண்டால், இந்த மஞ்சள் வாடல் நோயை கட்டுப் படுத்தலாம் என விஞ்ஞானிகள் விவசாயிகளிடம் தெரிவித்தனர். ஆய்வின் போது  வேளாண்மை உதவி இயக்குநர் சுஜாதா மற்றும் அலு வலர்கள் உடனிருந்தனர்.


கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர் மீட்பு

திருச்சிராப்பள்ளி, ஆக.4 - பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரைச் சேர்ந்தவர் நல்லுகவுண்டர் (80). இவர் புதனன்று இரவு  ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடக் கரையோரம் சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். அப்போது திடீ ரென தவறி தண்ணீரில் விழுந்தார். தற்போது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடும் நிலையில், இவர் தண்ணீரில் அடித்து  செல்லப்பட்டார். தண்ணீரில் தத்தளித்தவாறு சென்ற இவர் ஆற்றின்  நடுவில் மின் கோபுரத்திற்காக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கட்டையை பிடித்து அதில் ஏறி அமர்ந்து, காப்பாற்றுமாறு சத்தமிட் டுள்ளார். இவரது சத்தத்தை கேட்டு, அருகிலிருந்தவர்கள் இது குறித்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்த னர். தகவலின்பேரில் ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் 2 மணி  நேர போராட்டத்திற்கு பின் அந்த முதியவரை பத்திரமாக மீட்டனர்.


சுதந்திர தின வாசிப்பு இயக்கம்

கரூர், ஆக.4 - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்ட செயற்குழு கூட்டம்  மாவட்ட தலைவர் தீபம்சங்கர் தலைமையில் சங்க அலுவலக கூட்டரங்கில்  நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஐ.ஜான்பாஷா மாநில முடிவுகளை விளக்கி பேசினார். மாவட்ட இணை செயலாளர்கள் முனைவர் என்.சாகுல் அமீது, பாஸ்கர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 75-வது  சுதந்திர தின வாசிப்பு இயக்கத்தை கரூரில் உள்ள பள்ளிகளில் சிறப்பாக  நடத்திடவும் , அறிவியல் தேசம் புத்தகத்தை சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மாணவர்களுக்கு வழங்கிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட பொருளாளர் ஆ.தமிழரசி நன்றி கூறினார்.


 

;