court

img

மீண்டும் பணிக்குத் திரும்பிய தலைமை நீதிபதி...

சென்னை:
கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டு குணமடைந்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி 25 நாட்களுக்கு பிறகு டிசம்பர் 1ஆம் தேதி முதல் மீண்டும் வழக்குகளை விசாரிக்க துவங்கினார்.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இதன் காரணமாக நீதிமன்ற விசாரணைகள் 150 நாட்களுக்கும் மேலாக வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவே நடத்தப்பட்டு வந்தது.தொடர்ந்து, வைரஸ் பரவல் குறைந்ததும் கடந்த இரண்டு மாதங்களாக நீதிமன்ற அறைகளில் குறிப்பிட்ட விதிமுறைகளுடன் வழக்கு விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நவம்பர் 4ஆம் தேதி சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதி, கடந்த சில தினங்களுக்கு முன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனது வீட்டிலேயே தன்னை தனிமைபடுத்திக் கொண்டார்.தற்போது, தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்த நிலையில், 25 நாட்களுக்கு பிறகு செவ்வாயன்று (டிச.1) முதல் நீதிமன்றத்தில் இருந்து வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்.டிசம்பர் 31ஆம் தேதியுடன் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி ஓய்வுபெறவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

;