சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வியாழனன்று (டிச. 3) புதிதாக 10 நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர்.சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 10 நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி வியாழனன்று(டிச.3) பதவியேற்பு செய்து வைத்தார்.
ஜி.சந்திரசேகரன்:
1962 மே 31 இல் பிறந்தவர். 1991 ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வானவர். சேலம், ஸ்ரீவில்லிப்புத்தூர், கோவை, முசிறி, காரைக்குடி, திருச்சி, நாமக்கல், சென்னை, பொள்ளாச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய நீதிமன்றங்களில் நீதிபதியாகவும், தமிழ்நாடு நீதித்துறை பயிற்சி மைய இயக்குநராகவும் இருந்தவர்.
ஏ.ஏ.நக்கீரன்
1963 மே 10 இல் பிறந்தவர். 1991 ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வானவர். பொன்னேரி, திருச்சி, அம்பத் தூர், நாங்குனேரி, உளுந்தூர் பேட்டை, செய்யாறு, சென்னை, திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், உதகமண்டலம் ஆகிய நீதிமன்றங்களில் நீதிபதியாக பணிபுரிந்தார்.
வி.சிவஞானம்
1963 ஜனவரி 1 இல் மயிலாடுதுறையில் பிறந்தவர். 1991 ஜூலையில் நீதித் துறைக்கு தேர்வானவர். மயிலாடுதுறை, கும்பகோணம், ஈரோடு, நாமக் கல், பவானி, துறையூர், அரியலூர், கடலூர், பண்ருட்டி, பெரம்பலூர், சென்னை, திருவாரூர், கடலூர் ஆகிய நீதிமன்றங்களிலும் தீர்ப்பாயங்களிலும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
ஜி.இளங்கோவன்
1963 ஜூன் 6 இல் பிறந்தவர். 1991 ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வானவர். கோவை, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, திருமங்கலம், மதுரை, உத்தமபாளையம், குளித்தலை, கரூர், திண்டுக்கல் ஆகிய நீதிமன்றங்களில் நீதிபதியாக பணிபுரிந்தார்.
எஸ்.ஆனந்தி
1960 ஜூலை 31 இல் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பிறந்தவர். 1991 ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வானவர். செங்கல்பட்டு, மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, சிவகங்கை, நாமக்கல், திண்டுக்கல், சென்னை, திருச்சி ஆகிய நீதிமன்றங்களில் நீதிபதியாக பணிபுரிந்தார்.இவரது தந்தையும் மாவட்ட நீதிபதியாக இருந்தவர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக் கப்பட்ட நிலையில் காலமானார்.
எஸ்.கண்ணம்மாள்
1960 ஜூலை 20 இல் பிறந்தவர். 1991 ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வானவர். கிருஷ்ணகிரி, உடுமலைப் பேட்டை, சங்ககிரி, கோவில்பட்டி, திருநெல்வேலி, மேலூர், தஞ்சாவூர், திருச்சி, திருச்செங்கோடு ஆகிய நீதிமன்றங்களில் நீதிபதியாக பணிபுரிந்தார்.இவரது சகோதரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றவர்.
எஸ்.சதிக்குமார்
1963 ஜூலை 18 இல் பிறந்தவர். 1994 நவம்பரில் நீதித்துறைக்கு தேர்வானவர். சிவகங்கை, திருவொற்றியூர், சேலம், கள்ளக்குறிச்சி, பொன்னேரி, செஞ்சி, பவானி, சென்னை, அரூர் ஆகிய நீதிமன்றங்களில் நீதிபதியாக பணிபுரிந்தார்.நிதிநிறுவன மோசடிகளை விசாரிக்கும் டான்பிட் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்.
கே.முரளி சங்கர்
1968 மே 31 இல் பிறந்தவர். 1995 நவம்பரில் நீதித்துறைக்கு தேர்வானவர். கும்பகோணம், கோவை, சேலம், சங்ககிரி, பாபநாசம், கொடுமுடி, தாராபுரம், நாமக்கல் ஆகிய நீதிமன்றங்களில் நீதிபதியாக பணிபுரிந்தார்.
ஆர்.என்.மஞ்சுளா
1964 பிப்ரவரி 16 இல் பிறந்தவர். 1995 நவம்பரில் நீதித்துறைக்கு தேர்வானவர். திருச்சி, திண்டுக்கல், மதுரை, நாங்குனேரி, கோவில்பட்டி, சென்னை ஆகிய நீதிமன்றங்களில் நீதிபதியாக பணிபுரிந்தார்.சென்னையில் உள்ள போக்ஸோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தவர்.
டி.வி.தமிழ்ச்செல்வி
1968 ஜூன் 19 இல் ஈரோட்டில் பிறந்தவர். 1995 நவம்பரில் நீதித்துறைக்கு தேர்வானவர். ஈரோடு, கோவை, தஞ்சாவூர், கரூர், சேலம் ஆகிய நீதிமன்றங்களில் பணிபுரிந்தார்.இவர்கள் 10 பேரும் டிசம்பர் 3 முதல் தங்களது நீதிபதி பணியை, அமர்வு நீதிபதிகளுடன் இணைந்து மேற் கொண்டனர்.