court

img

உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மறுஆய்வு மனு: கேரளம் வரவேற்பு

புதுதில்லி, செப்.9- பாதுகாக்கப்பட்ட காடுகளைச் சுற்றி யுள்ள ஒரு கிலோமீட்டரை சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகும் (பப்பர் ஜோன்) பகுதி யாக அறிவிக்கும் முடிவை எதிர்த்து ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு கேரளம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதேபோன்ற மனுவை கேரளா ஏற்கனவே தாக்கல் செய்தது. ஒன்றிய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தற்போது தாக்கல் செய்த மறுஆய்வு மனுவில், மேற்கு தொடர்ச்சி மலை பாது காப்பு தொடர்பான இறுதி அறிவிப்பு ஆறு  மாதங்களுக்குள் வெளியிடப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையிட கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவும், சிறப்பு  சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களி லிருந்து (ESZs) குடியிருப்பு பகுதிகளை விலக்க வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை ஆதரித்தார். அதைத் தொடர்ந்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்தது. கேரளாவின் நிலைப்பாட்டை ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்வதால், நீதிமன்றத்தில் இருந்து சாதகமான உத்தரவு வர வாய்ப்புள்ளது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.  கேரள அரசு ஏற்கனவே மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. குடியிருப்பு பகுதி கள், பண்ணைகள் மற்றும் நிறுவ னங்களை தவிர்க்க வேண்டும் என்பதே கேரளாவின் கோரிக்கை. கேரளாவின் சிறப்பு நிலைமையை உச்ச நீதிமன்றம் புரிந்துகொள்ள ஒன்றிய அரசின் மனு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.

;