சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சட்டப்பிரிவு 44 பிரிவின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு, சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியின்றி அமலாக்கத்துறை குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்ய முடியாது என்ற முக்கிய தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. மேலும், குற்றம்சாட்டப்பட்டவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தக்கல் செய்து சரியான காரணங்களை தெரிவிக்க வேண்டும்; நீதிமன்றம் அனுமதிக்கும் பட்சத்தில் அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.