articles

img

நீட் தேர்வு - ஏ.கே.ராஜன் குழு முன்வைக்கும் உண்மைகள்! - அ.அன்வர் உசேன்

நீட் தேர்வு குறித்து தி.மு.க. அரசாங்கம் அமைத்த நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு தமிழக அரசாங்கத்தி டம் சமர்ப்பித்த அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ கனவு  கொண்ட தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு பெரும் தீங்கு விளைவித்துள்ளது என்பதுதான் பா.ஜ.க. தவிர அனைத்து தமிழக அரசியல் கட்சிகளின் நிலைபாடு. இது வெறும் மருத்துவ கல்வி கற்பதற்கான தகுதி தொடர்புடையது மட்டுமல்ல; ஒப்பீட்டளவில் தமிழ கத்தின் சிறந்து விளங்குகின்ற மருத்துவ கட்டமைப்பு களுக்கே நீட் ஆபத்தை விளைவிக்கும் (குறிப்பாக கிராமப்புறங்களில்) எனும் ஒரு முக்கிய கருத்தை முன் வைத்துள்ளது ஏ.கே.ராஜன் குழு அறிக்கை. இந்த அறிக்கையின் இன்னொரு சிறப்பு அம்சம் என்ன வெனில் வெறும் மதிப்பீடுகள் அல்லது அனுமானங்க ளை அல்ல; மாறாக கடந்த 4 ஆண்டுகளில் நீட் தேர்வு முறை தமிழக மருத்துவக் கல்வி தளத்தில் என்ன அனுபவத்தை நிலை நாட்டியுள்ளது என்பதை ஆய்வு செய்து முக்கியமான முடிவுகளை முன்வைக்கிறது. தமிழக மாணவர்களுக்கும் மாநிலத்துக்கும் பாதகங்க ளையே விளைவித்துள்ளதால் நீட் தேர்வு அகற்றப்பட வேண்டும் என்பதே இந்த அறிக்கையின் வலுவான பரிந்துரை ஆகும்.

மற்ற நாடுகளில்  என்ன நடைமுறை?

இந்த குழுவை அமைக்கும் பொழுது தமிழக அரசாங்கம் கீழ்கண்ட அம்சங்களை ஆய்வு செய்யுமாறு வரையறைகளை முன்வைத்தது.

1. கிராமப்புற, நகர்ப்புற ஏழை மாணவர்கள்/அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள்/தமிழ் மொழியில் பயின்ற மாணவர்கள் ஆகியோர் நீட் தேர்வால் பாதக மாக பாதிக்கப்பட்டுள்ளனரா? சமூக/பொருளா தார/கூட்டாட்சி அரசியல் கோட்பாடுகள் பாதிக்கப் பட்டுள்ளனவா?

2. அவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால் அதனை களை வதற்கான பரிந்துரைகள் என்ன? மாநில உரிமை களையும் சமூக நீதி கோட்பாடுகளையும் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? அரசியல் சட்டம் முன் வைக்கின்ற “மருத்துவ வசதிகள் கிடைப்பதில் சமத்துவ வாய்ப்பு” என்பதை தமிழக மக்கள் அனை வருக்கும் நிலை நாட்டுவது எப்படி? இவற்றுக்கான ஆலோசனைகள்.

3.மருத்துவக் கல்விக்கு மாணவர்களை தேர்வு செய்வதில் நீட் முறை சமத்துவ வழிமுறைகளை கொண்டுள்ளதா?

4. புற்றீசல் போல தோன்றியுள்ள நீட் பயிற்சி மையங்க ளால் தமிழக கல்வி முறையில் உருவாகியுள்ள தாக்கங்கள் என்ன?

மருத்துவம் மற்றும் உயர் கல்விக்கு வேறு நாடுக ளில் இத்தகைய தேசம் முழுமைக்கும் பொருந்தும் தகுதித் தேர்வு உள்ளதா என்பதை குழு ஆய்வு செய்துள்ளது. அமெரிக்கா/ பிரிட்டன்/ சீனா/ஆஸ்திரே லியா/கனடா/தென் ஆப்பிரிக்கா/ரஷ்யா போன்ற பல  தேசங்களின் தகுதித் தேர்வு முறைகளை குழு தொகுத்து வழங்கியுள்ளது. எங்குமே நாடு முழுமைக்கும் அளவு கோலாக ஒரே தகுதி தேர்வு மட்டுமே இல்லை என ராஜன் குழு முடிவுக்கு வருகிறது. இந்த நாடுகளில் தகுதி தேர்வுகள் இருந்தாலும் அது மட்டுமே மாணவர் தேர்வு க்கு அளவு கோல் அல்ல. பல தகுதிகளில் இந்த தகுதித் தேர்வு மதிப்பெண்களும் ஒன்றாக உள்ளன. குறிப்பாக சீனா உட்பட பல நாடுகளில் தேசிய அளவி லான தேர்வுகள் நடத்தப்பட்டாலும் அந்தந்த மாநி லத்தின் தேவைகளுக்கு ஏற்ப சில முக்கிய மாற்றங்க ளும் கைக் கொள்ளப்படுகின்றன. 

அமெரிக்காவில் உள்ள நடைமுறைகளை விரிவா கவே குழு ஆய்வு செய்துள்ளது. கருப்பின மாணவர்க ளும் ஹிஸ்பானிக் மற்றும் லத்தீன் அமெரிக்க இன  மாணவர்களும் இத்தகைய தகுதித் தேர்வுகளால் பாதிக்கப் படுகின்றனர்.  எனவே பல மாநிலங்கள் இந்த தேர்வுக ளை அளவு கோலாக கொள்வது இல்லை எனவும் குழு கூறுகிறது.  முக்கியமாக இத்தகைய தேர்வுகள்  அரசாங்கத்தால் நடத்தப்படுவது இல்லை; தனியார் தான் நடத்துகின்றனர். இந்த தேசங்களைவிட அதிக அளவில் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் நீட் தேர்வுகள் எப்படி நியாயம் வழங்க முடியும்? ஓஇசிடி (OECD) எனப்படும் வளர்ந்த நாடுகளில் இத்தகைய தகுதி நுழைவு தேர்வே இல்லை எனும் உண்மையை யும் ராஜன் குழு முன்வைக்கிறது.

பாதகங்களை  உருவாக்கிய நீட் தேர்வு

பள்ளி கல்வி சேர்க்கை/மாணவர்- ஆசிரியர் விகி தாச்சாரம்/ பாலின சமத்துவ குறியீடு என பல அம்சங்க ளில் தமிழகம் அகில இந்திய சராசரியைவிட கணிச மாக முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை நீதியரசர் கலையரசன் குழு(2020) அறிக்கையிலிருந்து விவரங்க ளை முன்வைக்கிறது ராஜன் குழு. அப்படி இருக்கை யில் மருத்துவ கல்வி தகுதியில் தமிழகத்தின் நடை முறைக்கு மாறாக ஏன் நீட் தேர்வு புகுத்தப்பட வேண்டும் எனும் கேள்வி நியாயமானதே! நீட் தேர்வுக்கு முன்பு 2011 முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான காலகட்டமும் 2017 முதல் 2020/2021 வரையிலான நீட் தேர்வுக்கு பிந்தைய கால கட்டத்தையும் சராசரி அடிப்படையாக கொண்டு பல்வேறு அம்சங்களை ஆழமாக ராஜன் குழு ஆய்வு செய்துள்ளது. அவற்றில் சில முக்கிய அம்சங்கள்:

                                                                                             நீட்டுக்கு              நீட்டுக்கு            மாற்றம்
                                                                                                முன்பு                  பின்பு

+2ல் தமிழ் மூலம் கல்வி பயில்பவர்கள்                         541131                  502566            7% சரிவு
+2ல் ஆங்கிலம் மூலம்            

கல்வி பயில்பவர்கள்                                                          251488                  339749           35% உயர்வு

அரசு பள்ளிகளில் +2 பயில்பவர்கள்                              44.93%                 41.94%           2.99% சரிவு
அரசு உதவி பள்ளிகளில் 

+2 பயில்பவர்கள்                                                                 26.32%                   25.89 %         0.43% சரிவு
தனியார் பள்ளிகளில் 

+2 பயில்பவர்கள்                                                                 28.75%                   32.17 %        3.42% உயர்வு 
அரசு மருத்துவக் கல்லூரிகளில் 
தேர்வு செய்யப்பட்ட மாநில 

கல்வி வாரியத்தில் படித்தவர்கள்                                  70.11%                    46.77%           23.44% சரிவு
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 
தேர்வு செய்யப்பட்ட மாநில 

கல்வி வாரியத்தில் படித்தவர்கள்                                    29.21%                  18.93%           10.28% சரிவு
அரசு மருத்துவ கல்லூரிகளில் 
தேர்வு செய்யப்பட்ட 

சிபிஎஸ்இ வழியாக  படித்தவர்கள்                                  0.11%                    22.66%             22.55%உயர்வு
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 
தேர்வு செய்யப்பட்ட 

சிபிஎஸ்இ வழியாக  படித்தவர்கள்                                 0.23%                      9.25%               9.02% உயர்வு
மருத்துவ கல்வியில்
தேர்வுசெய்யப்பட்ட தமிழ் மொழியில்

                                                                                                  17.83%                     2.10%              15.73% சரிவு
மருத்துவக் கல்வியில் தேர்வு 
செய்யப்பட்ட ஆங்கில மொழியில் 

படித்தவர்கள்                                                                         82.16%                     97.86%           15.69% உயர்வு
அரசு பள்ளிகளில் 
பயின்று மருத்துவக் கல்விக்கு 
விண்ணப்பித்தவர்கள்                                                         1173                            306                 74% சரிவு
மருத்துவக் கல்வியில்
தேர்வு செய்யப்பட்ட 
அரசு பள்ளிகளில் படித்தவர்கள்                                          34                               11               

  மிகக்
            குறைவாக
            இருந்தது
            சொற்பமாக
            குறைவு
அரசு மருத்துவக் கல்லூரிகளில் 
தேர்வு செய்யப்பட்ட 
கிராமப்புற மாணவர்கள்                                                      61.45 %                     50.81 %             10.64% சரிவு
அரசு மருத்துவக் கல்லூரிகளில் 
தேர்வு செய்யப்பட்ட
நகர்புற மாணவர்கள்                                                            38.55%                        49.20 %             10.65%உயர்வு
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 
தேர்வு செய்யப்பட்ட 
கிராமப்புற மாணவர்கள்                                                     53.67 %                        44.22 %              9.45% சரிவு
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 
தேர்வு செய்யப்பட்ட 
நகர்புற மாணவர்கள்                                                           46.33%                           55.78 %           9.45% உயர்வு
மருத்துவக் கல்வியில் 
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் 
பெற்றோர் ஆண்டு வருமானம்
2.5 லட்சத்துக்கு குறைவு                                                          41%                                36%                   5% சரிவு
மருத்துவக் கல்வியில் 
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் 
பெற்றோர் ஆண்டு வருமானம் 
2.5 லட்சத்துக்கு அதிகம்                                                           58%                                62%                  4% உயர்வு
முதல் முறை தேர்வு எழுதுபவர்கள்                                     91.87%                            43.1%              48.77% சரிவு
இரண்டு முறை அல்லது அதற்கு 
மேற்பட்டு தேர்வு எழுதுபவர்கள்                                             8.3%                             56.89%           48.59% உயர்வு
தமிழகத்தை சாராதவர்கள் 
மருத்துவக் கல்விக்கு
விண்ணப்பித்தவர்கள்                                                               703                                 1564               122% உயர்வு
தமிழகத்தை சாராதவர்கள் 
மருத்துவக் கல்விக்கு
தேர்வு செய்யப்பட்டவர்கள்                                                        46                                  298                548% உயர்வு

பயிற்சி மையங்களும் முறைகேடுகளும்

நீட் தேர்வு எத்தகைய பாதகங்களை விளை வித்துள்ளது என்பதை ராஜன் குழு தொகுத்துள்ள விவரங்கள் மிக தெளிவாக வெளிப்படுத்துகின்றன:

l    நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தாய் மொழியான தமிழை புறந்தள்ளி ஆங்கிலத்தை நாட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

l    +2 ல் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைகிறது.

l    மாநில கல்வி வாரியத்தைவிட சிபிஎஸ்இ மாண வர்கள் அதிகமாக மருத்துவக் கல்வியில் சேருகின்ற னர். எனவே சிபிஎஸ்இ நோக்கி படையெடுக்கின்றனர். 

l    மருத்துவக் கல்வியில் கிராமப்புற மாணவர்க ளின் எண்ணிக்கை கவலைப்படும் அளவுக்கு குறைகிறது.

l    அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மிக சொற்பமாகவே தேர்வு பெருகின்றனர்.

l    வசதி படைத்தவர்களின் குழந்தைகள் கூடுதல் வாய்ப்புகளை பெருகின்றனர்.

l    தமிழகத்தை சாராதவர்கள் அதிகமாக மருத்து வக் கல்வியில் சேரும் சூழல் உருவாக்கப்படுகிறது.

இது மட்டுமல்லாது நீட்டுக்கு பிறகு உருவாகி யுள்ள மிக மோசமான சூழல் பயிற்சி மையங்கள் குறித்தானது ஆகும். முதல் முறை தேர்வு எழுதுப வர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவுக்கு சரியும் அதே வேளையில் பயிற்சி மையத்தில் இணைந்து ஒன்றுக்கும் அதிகமான முறை எழுதுப வர்கள் எண்ணிக்கை செங்குத்தாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 400க்கும் அதிகமான பயிற்சி மையங்கள் இருப்பதாகவும் அவற்றின் ஆண்டு வருமானம் ரூ.5750 கோடிக்கும் அதிகம் எனவும் ராஜன் குழு மதிப்பிடுகிறது. சுமார் 2 லட்சம் முதல் 4 லட்சம் வரை ஒரு மாணவருக்கு பயிற்சி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கீழ்மட்ட நடுத்தர குடும்பங்கள் உட்பட பெரும்பாலான உழைப்பாளி மக்களின் குழந்தைகளுக்கு இத்தகைய பயிற்சிகள் எட்டாக்கனி யாகவே உள்ளது என்பதை கூறத்தேவையில்லை.

ஆள்மாறாட்டம்/ கேள்வித்தாள்கள் வெளியிடுதல் ஆகியவையும் தொடர்ந்து நடக்கின்றன. 2018ஆம் ஆண்டு டைம்ஸ் ஆஃப் இண்டியா இதழ் இன்னொரு அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டது. 400 மாணவர்கள் இயற்பியல் மற்றும் இரசாயனம் பிரிவுகளில் ஒற்றை இலக்க மதிப்பெண்கள் பெற்றிருந்தும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அதைவிட கொடுமை என்னவெனில் 100 மாணவர்கள் மைனஸ் மதிப்பெண் கள் பெற்றவர்களும் நீட் தேர்வு விதிகளை பயன் படுத்தி மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இந்த சேர்க்கைகள் தனியார் கல்லூரிகளில் கோடிக்கணக்கான ரூபாய்கள் ஊழல் மூலம் நடை பெற்றன என்பதை கூறத்தேவை இல்லை.

தமிழ்நாடு முன் உள்ள சவால்கள்

நீட் தேர்வால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. ஆனால் கேள்வி என்னவென்றால் நீட் தேர்விலி ருந்து விலக்கு பெறுவதை எப்படி தமிழகம் சாதிக்கப் போகிறது என்பதுதான்! சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதனை ஜனாதிபதி அங்கீகரிக்க வேண்டும். ஆனால் கூட்டாட்சி கோட்பாடை யும் எந்த ஒரு மாநில அரசாங்கத்தின் மாற்று கருத்தை யும் சிறிது கூட மதிக்காத மோடி அரசாங்கம் இதனை அனுமதிக்குமா என்பது மிகப்பெரிய கேள்வி!

இன்னொரு வழி சட்டப்போராட்டம்! சட்டரீதியாக வெல்வதற்கு வாய்ப்பு உள்ளது எனவும் இல்லை எனவும் இரு கருத்துகள் உள்ளன. இதற்கு அப்பால் நீட் தேர்வு பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தின் வினோத மான அணுகுமுறையை நாம் புறந்தள்ள முடியாது. 2013ஆம் ஆண்டு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நீட் தேர்வு குறித்து மருத்துவக் கவுன்சிலின் அறிவிக்கை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என தீர்ப்பு அளிக்கிறது. இரண்டு நீதிபதிகள் பெரும் பான்மை தீர்ப்பு அளிக்க ஒரு நீதிபதி மாற்று கருத்தை அதாவது நீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கு கிறார். நீட்டுக்கு எதிராக தீர்ப்பு அளித்த நீதிபதிகள் பணி  ஓய்வு பெற்றுவிட நீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு எழுதிய நீதிபதி தலைமையில் உள்ள அமர்வு முன்பு மீண்டும் வழக்கு வருகிறது. அப்பொழுது சங்கல்ப் டிரஸ்ட் எனும் நிறுவனம் நீட் வேண்டும் என பொது நல வழக்கை தாக்கல் செய்கிறது. இந்த வழக்கை முடித்து வைக்காமலேயே 2013ஆம் ஆண்டு நீட்டுக்கு எதிரான தீர்ப்பை திரும்பப்பெறுவதாக நீதிமன்றம் 2016ஆம் ஆண்டு அறிவிக்கிறது. அடுத்த சில நாட்களி லேயே நீட் தேர்வு அறிவிக்கப்படுகிறது. இத்தகைய வினோதமான சூழலில் சட்டப்போராட்டத்துக்கு நியாயம் கிடைக்குமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று!

சட்டப்போராட்டமும் பலன் அளிக்கவில்லை யெனில் மக்கள் போராட்டம் ஒன்றுதான் வழி. அத னையே 21.09.2021 அன்று கூடிய அனைத்து கட்சி கூட்ட மும் கீழ்க்கண்ட வகையில் தெளிவாக முன்வைத்துள் ளது. 

ஒரு பக்கம் சட்டமன்றம், நீதிமன்றங்கள் மூலமாக போராட்டங்களை நடத்தி வந்தாலும், மக்கள்  மன்றத்தின் மூலமாக நடத்தப்படும் போராட்டம் மிகவும் முக்கியமானதும், வலிமையானதுமாகும். கடந்த காலங்களில் மக்கள் பிரச்சனையில் வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டத்தை நடத்தியதன் மூலமாக, வெகுமக்களின் எழுச்சி காரணமாக கோரிக்கைகள், உரிமைகள் வெற்றி பெற்றுள்ளன என்பதுதான் வரலாறு.
 

 

;