இனி என்ன என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. தனது தாக்குதல் முடிந்துவிட்டது என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடி உண்டு என ஈரான் இதுவரை கூறவில்லை. எனினும் இரு வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதால் ஈரான் என்ன நிலை எடுக்கும் என்பது தெளிவாக வெளியிடப்படவில்லை. இந்த தாக்குதலை பரிசோதனை முயற்சியாக கொண்டு இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தினாலோ அல்லது ஈரான் பதிலடி தர முற்பட்டாலோ வளைகுடா பகுதி மீண்டும் பதற்றத்தில் மூழ்கிவிடும்.
நிச்சயம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் 26.10.2024 அன்று அதிகாலை நடத்தப்பட்டுள்ளது. சுமார் 100 ஏவுகணைகளும் டிரோன்களும் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன. இந்த தாக்குதகள் வெற்றி அடைந்தன என இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் ஈரான் தனது வான் தாக்குதல் பாதுகாப்பு முறைகள் இஸ்ரேலின் அனைத்து ஏவுகணைகளையும் தடுத்து விட்டதாக கூறுகிறது. ஈரான் வெளியிட்டுள்ள காணொலிகளும் ஏனைய பல ராணுவ ஆய்வாளர் களின் மதிப்பீடுகளும் இஸ்ரேலின் தாக்குதல்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதை உறுதி செய்கின்றன.
யூத மதவெறியின் ஆத்திரம்
அக்டோபர் 1 அன்று ஈரான் சுமார் 180 ஏவுகணை களை இஸ்ரேல் மீது செலுத்தியது. கடந்த செப்டம்பர் மாதம், ஈரான் ஜனாதிபதி பதவி யேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் ஈரானின் ராணுவ அதிகாரிகளை ஈரானுக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தி இஸ்ரேல் கொன்றது; சிரியா மற்றும் இராக்கில் உள்ள ஈரானின் தூதரக அலுவலகங்களையும் தாக்கியது; ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரால்லாவை படுகொலை செய்த பொழுது அவருடன் இருந்த ஈரான் ராணுவ அதிகாரியும் கொல்லப்பட்டது - ஆகிய இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாகவே, அக்டோபர் 1 அன்று ஈரானின் தாக்குதல் நடத்தப் பட்டது. இந்த தாக்குதல் மூலம் ஈரான் ஒரு வலு வான செய்தியை இஸ்ரேலுக்கு தந்தது. அது என்ன வெனில் தன்னிடம் உள்ள ஏவுகணைகள் இஸ்ரேலின் எந்த பகுதிக்கும் சென்றடையும் வல்லமை படைத்தது என்பதுதான். பெரும்பாலான ஏவுகணைகள் இஸ்ரேலின் வான்பாதுகாப்பு வளையத்தையும் மீறி இஸ்ரேலுக்குள் புகுந்தன. ஈரானின் தாக்குதல் வரை தனது ராணுவ வலிமை மிகப்பெரியது என்று இஸ்ரேல் பறைசாற்றியிருந்தது. ஆனால் ஈரானின் தாக்குதலுக்கு பின்னர் அந்த பிம்பம் நொறுங்கிப் போனது. எனவே ஈரானை திருப்பி தாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இஸ்ரேல் இருந்தது. இஸ்ரேலுக்குள் உருவாக்கப்பட்டிருந்த யூத இன வெறியர் ஈரானின் தாக்குதலால் கடும் ஆத்திரம் கொண்டிருந்தனர். எப்படியாவது ஒரு வலுவான பதில் தரப்பட வேண்டும் எனும் கருத்து இஸ்ரேலுக்குள் வலு வடைந்தது.
ஈரானின் அணு தயாரிப்பு இடங்களையும் ஈரானின் எண்ணெய் வயல்களையும் குறிவைத்து தாக்க வேண்டும் என பரவலான கருத்துகள் கூறப் பட்டன. அத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டால் ஈரானின் எதிர்வினை மிக கடுமையாக இருக்கும் எனவும் அநேகமாக இஸ்ரேல் எனும் தேசத்தின் எதிர்காலமே கேள்வி குறியாகிவிடும் எனவும் ஈரான் எச்சரித்தது. இத்தகைய மிரட்டல்களும் எதிர்மிரட்டல் களும் வளைகுடா பகுதியில் என்ன நடக்குமோ எனும் கவலையை தோற்றுவித்தது. ஏனெனில் ஈரானின் எண்ணெய் வயல்கள் அல்லது அணுசக்தி உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதன் விளைவுகள் உலகம் முழுவதுமே பாதிக்கும். குறிப்பாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும். இது உலக பொருளாதாரத்துக்கு மிகவும் ஆபத்தானது.
ஈரானின் பாதுகாப்பு நடவடிக்கைகள்
இந்த பின்னணியில் ஈரான் தனது பாதுகாப்புக் காக இரு நடவடிக்கைகளை எடுத்தது. அவை: 1. தனது வான்வழி பாதுகாப்புக்காக ரஷ்யாவிட மிருந்து மிக நவீனமான எஸ்.300 மற்றும் எஸ்.400 வான்பாதுகாப்பு வளையத்தை வாங்கி நிர்மானித்தது. ரஷ்யாவின் இந்த பாதுகாப்பு முறை அமெரிக்காவிடம் உள்ள பேட்ரியாட் வான் பாது காப்பு முறையைவிட வலுவானது என கருதப்பட்டது. அது உண்மை என்பது இப்பொழுது இஸ்ரேலின் ஏவுகணைகள் முழுவதும் தடுத்து வீழ்த்தப்பட்டதில் நிரூபணம் ஆகியுள்ளது.
ஈரானின் அணு தயாரிப்பு இடங்களையும் ஈரானின் எண்ணெய் வயல்களையும் குறிவைத்து தாக்க வேண்டும் என பரவலான கருத்துகள் கூறப் பட்டன. அத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டால் ஈரானின் எதிர்வினை மிக கடுமையாக இருக்கும் எனவும் அநேகமாக இஸ்ரேல் எனும் தேசத்தின் எதிர்காலமே கேள்வி குறியாகிவிடும் எனவும் ஈரான் எச்சரித்தது. இத்தகைய மிரட்டல்களும் எதிர்மிரட்டல் களும் வளைகுடா பகுதியில் என்ன நடக்குமோ எனும் கவலையை தோற்றுவித்தது. ஏனெனில் ஈரானின் எண்ணெய் வயல்கள் அல்லது அணுசக்தி உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதன் விளைவுகள் உலகம் முழுவதுமே பாதிக்கும். குறிப்பாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும். இது உலக பொருளாதாரத்துக்கு மிகவும் ஆபத்தானது. ஈரானின் பாதுகாப்பு நடவடிக்கைகள் இந்த பின்னணியில் ஈரான் தனது பாதுகாப்புக் காக இரு நடவடிக்கைகளை எடுத்தது. அவை: 1. தனது வான்வழி பாதுகாப்புக்காக ரஷ்யாவிட மிருந்து மிக நவீனமான எஸ்.300 மற்றும் எஸ்.400 வான்பாதுகாப்பு வளையத்தை வாங்கி நிர்மானித்தது. ரஷ்யாவின் இந்த பாதுகாப்பு முறை அமெரிக்காவிடம் உள்ள பேட்ரியாட் வான் பாது காப்பு முறையைவிட வலுவானது என கருதப்பட்டது. அது உண்மை என்பது இப்பொழுது இஸ்ரேலின் ஏவுகணைகள் முழுவதும் தடுத்து வீழ்த்தப்பட்டதில் நிரூபணம் ஆகியுள்ளது.
மக்களின் கருத்துக்கு எதிராக அமெரிக்க நிர்வாகம்
இஸ்ரேலின் தாக்குதலை சவூதி அரேபியா/ அரபு அமீரகம்/ பாகிஸ்தான்/இராக்/ ஓமன் உட்பட பல தேசங்கள் கண்டித்துள்ளன. இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா இது இஸ்ரேலின் சுய பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என நியாயப்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் ஒவ்வொரு தாக்குதலும் இனப்படுகொலையும் லெபனான் தாக்கு தலும் அதன் சுய பாதுகாப்புக்காக என்றுதான் அமெரிக்கா கூறி வருகிறது. அவ்வாறு நியாயப்படுத்து வதன் மூலம் இஸ்ரேலின் இனப்படுகொலையில் தானும் கூட்டாளி என்பதற்கு அமெரிக்கா ஒப்புதல் வாக்குமூலம் தருகிறது. தன்னை உலகின் முதன்மை ஜனநாயக நாடு என கூறிக்கொள்ளும் அமெரிக்கா தனது சொந்த நாட்டு மக்கள் இஸ்ரேலுக்கு உதவுவதை விரும்பவில்லை எனத் தெரிந்தும் அதற்கு முரண்பட்டு செயல்படுகிறது. ஏனெனில் வளைகுடா பகுதியில் இஸ்ரேல் தனக்கு அடியாளாக இருக்க வேண்டும் என அமெரிக்க நிர்வாகம் கருதுகிறது. மறுபுறம் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலின் இனவெறிக்கு ஆதரவான கருத்து டையவர்களின் கும்பல் (இஸ்ரேல் லாபி) டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரின் தேர்தல் செலவுகளுக்கும் ஏராளமான நிதி உதவிகளை செய்துள்ளது. இவர்களுக்கு மட்டுமல்ல; பெரும்பான்மையான அமெரிக்க அரசியல்வாதி களுக்கு இஸ்ரேல் குழுவினர் உதவி செய்கின்றனர். இதுகுறித்து ஒரு புத்தகத்தை எழுதியுள்ள பேராசிரியர் ஜான் மெர்ஷமைர் கூறுவது போல, அமெரிக்க நாடாளு மன்றம் இஸ்ரேல் லாபியின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. எனவே அமெரிக்க நிர்வாகத்திடமிருந்து வேறு எந்த நிலையையும் நாம் எதிர்பார்க்க முடியாது. இனி என்ன என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. தனது தாக்குதல் முடிந்துவிட்டது என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடி உண்டு என ஈரான் இதுவரை கூறவில்லை. எனினும் இரு வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதால் ஈரான் என்ன நிலை எடுக்கும் என்பது தெளிவாக வெளியிடப்படவில்லை. இந்த தாக்குதலை பரிசோதனை முயற்சியாக கொண்டு இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தினாலோ அல்லது ஈரான் பதிலடி தர முற்பட்டாலோ வளைகுடா பகுதி மீண்டும் பதற்றத்தில் மூழ்கிவிடும். அது உலக பொருளாதரத்துக்கு நல்லதல்ல.