ஆர்.ஜி.கர் மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை வழக்கு
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவ மனை பாலியல் வன்கொலை வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு புதிய பெயர் உண்டு - அவர் எதிர்கொண்ட கொடூ ரங்களுக்கு எதிரான போராட்டங்களின் கருவறையில் அப்பெயர் பிறந்தது; அவர் ‘திலோத்தமா’ என்று அழைக்கப்படுகிறார் - அனைத்திலும் சிறந்ததை தன்னுள் கொண்டவர் எனப் பொருள். திலோத்தமாவுக்கான நீதிக்கான ஒற்றுமை போராட்டங்கள் வங்காளத்தை மட்டுமல்ல, நாடு முழு வதையும் உலுக்கியுள்ளன. தன்னெழுச்சியாக அணி திரண்ட ஆயிரக்கணக்கான குடிமக்கள், தங்கள் மன சாட்சி விழித்தெழுந்து, ஒற்றுமையுடன் வீதிகளில் அணிவகுத்து, போராட்ட முழக்கம் எழுப்பினர்.
இடது முன்னணியின் வீச்சு
மேற்கு வங்க இளநிலை மருத்துவர்கள் அமைப்பும், மருத்துவர்களின் கூட்டு மேடையும் இப்போராட்ட முன்னணியில் உள்ளன. இடதுசாரி நோக்குடைய அனைத்து மக்கள் அமைப்புகளும் தங்களது தொ டர்ச்சியான, அமைதியான நடவடிக்கைகளில் நீதிக் கான உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்து கின்றன. இடது முன்னணியின் வலுவான ஆதரவின் வீச்சாக, குரல்கள் நகரங்களிலிருந்து மாநிலம் முழு வதும் உள்ள மிகத் தொலைதூர பகுதிகளுக்கும், கிரா மங்களுக்கும் சென்றடைந்துள்ளன, அங்கு மக்கள் ஒற்றுமையுடன் ஒன்றுகூடுகின்றனர். இளம் மற்றும் வயதானவர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள், அனைத்து சமூகங்கள் மற்றும் அனைத்து துறைகளிலிருந்தும், தினசரி போராட்டங்களில் சோர்வடைவதில்லை. உண்மையில், போராட்டத்தின் ஆற்றலும் குரல்களும் நாளுக்கு நாள் மிகவும் வலு வாக எதிரொலிக்கின்றன.
நம்பிக்கை அளிக்கும் இயக்கம்
ஒரு தனிநபரின் கைதுடன் மட்டுமே நீதி முடிவடை யாது என்பதை போராட்டங்கள் தெளிவுபடுத்து கின்றன. இது கொடூரமான குற்றத்தின் பின்னணியில் உள்ள கூட்டணியை இலக்காக கொண்டு அம்பலப் படுத்துவது ஆகும். ஊழல், ஆதரவு, மூடி மறைப்பு, சம்பந்தப்பட்ட அனைவரும் - ஒரு குற்றவாளி, ஒரு தன்னார்வலர் என்று சொல்லப்படுபவர், ஒரு பொது மருத்துவமனையில் ஒரு இளம் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்தாலும் தப்பித்து விட லாம் என்ற நம்பிக்கையுடன் செயல்பட அனுமதிக் கும் முழு அழுகிய அமைப்பையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதாகும். மேலும் உண்மை என்னவென்றால், போராட் டங்கள் இல்லையென்றால், ஒவ்வொரு கட்டத்திலும் அவர் தப்பித்திருப்பார். நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான ஒற்றுமையான மக்களால் நீதியை அழிக்க முயற்சிக்கும் அனைத்து பிற்போக்கு சக்திகளுக்கும் சவால் விடுக்க, எதிர்க்க மற்றும் கீழே தள்ள முடியும் என்ற நம்பிக்கையை இந்த இயக்கம் அளிக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணைகளும், சிபிஐ நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையும், உச்ச நீதிமன்றத்தின் கூற்றுப்படி, ‘அறியப்பட்டதை விட மோசமான விவரங்களை’ வெளிப்படுத்துகின்றன. மருத்துவர்களையும் போராட்டங்களையும் அவதூறு செய்துகொண்டிருந்த திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் பின்வாங்கி சில கோரிக்கைகளை ஏற்க வேண்டியிருந்தது. போராட்டம் பல்வேறு வடிவங்க ளில் தொடர்கிறது.
திரிணாமுல்லின் பாலியல் வன்முறை கலாச்சாரம்
ஆர்.ஜி.கர் வழக்கின் ஒரு அம்சத்தை நான் பார்க்கிறேன், அது மேற்குவங்க ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசும் அதன் பிரதிநிதிகளும், நியா யப்படுத்த முடியாததை பாதுகாக்க முனைகிறார் கள்; பல்வேறு கட்டங்களில் இவர்கள் இம்மாநிலத் தில் அறிமுகப்படுத்திய பாலியல் வன்முறை கலாச்சா ரங்களின் பரிமாணங்களுடன் தொடர்புடையது, இந்த வழக்கு. இந்தியாவில் பெண்களின் இரண்டாம் நிலையை உறுதிப்படுத்தும் விதமாக சமூக- பொருளாதார- அரசியல் கட்டமைப்புத் தன்மையுடன் இந்த கலாச்சா ரங்கள் பெருகுவதை பெண்கள் அமைப்புகளும் இயக்கங்களும் உணர்ந்து கொண்டுள்ளன. உண்மை யில் இந்தியாவில் பாலியல் தாக்குதல் மற்றும் பாலி னம் மற்றும் சாதி அடிப்படையிலான கொடூரங்கள் ஆகியவை பிறப்பு முதல் இறப்பு வரை ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான முறைமையாக கட்ட மைக்கப்பட்டுள்ள சமத்துவமின்மையில் வேரூன்றி யுள்ளன. கொடூரமான பல வகை சமத்துவமின்மைகள் நிறைந்த ஒரு நாட்டில், கிராமப்புற மேல்தட்டு, ஒப்பந்த தாரர்கள் போன்றவர்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் பாதுகாப்பற்ற வேலை நிலைமைகளில் உள்ள தொழி லாளி வர்க்க பெண்கள், குறிப்பாக கிராமப்புற ஏழைப் பெண்களின் பாதிப்பு கட்டமைப்பு ரீதியானது. இந்தி யாவில் முதலாளித்துவத்தால் தழுவப்பட்ட நச்சுத்தன மான சாதி அமைப்பானது, தலித் மற்றும் ஆதிவாசி பெண்களுக்கு எதிரான வன்முறையின் தீவிர பரிமா ணத்திற்கு வழிவகுக்கும் கட்டமைப்பின் ஒரு பகுதியா கும். இந்தியாவில் இத்தகைய குறிப்பிட்ட சமூக-பொருளாதார நிலைமைகளில்தான் பாலியல் வன்முறை கலாச்சாரங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. பெண்கள் அமைப்புகளின் ஒற்றுமையான போராட் டங்களும், தனிப்பட்ட பெண்களின் சாதனைகளும் சேர்ந்து பல தடைகளை உடைத்த ஒரு சக்திவாய்ந்த அணியை உருவாக்கியுள்ளன. இருப்பினும், பொது மற்றும் தனிப்பட்ட இடங்களிலும் சம உரிமைகளை வலியுறுத்தும் பெண்களின் முன்னேற்றத்திற்கும் அவர்களின் உறுதிப்பாட்டிற்கும் எதிரான - ஒரு வகை யான எதிர்வினையாக- பிற்போக்கு சக்திகளால் இந்த வெற்றிகளை பல்வேறு வழிகளில் குறைக்கவும் எதிர்க்க வும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாலியல் வன்முறையை ஆதரிக்கும் கலாச்சாரங்களில் இந்த எதிர்வினையின் ஒரு பகுதி பிரதிபலிக்கிறது.
பாலியல் வன்முறையை ஆதரிக்கும் கொடுமை
பாலியல் வன்முறையை ஆதரிக்கும் கலாச்சாரங் கள் அல்லது பாலியல் வன்முறை கலாச்சாரங்கள் என்பவை பாலியல் வன்முறையை நியாயப்படுத்தும், குறைத்து மதிப்பிடும் அல்லது மறுக்கும் போக்குகள் ஆகும். பாலியல் வன்முறை கலாச்சாரங்கள், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர் நீதியை அணுகு வதை கடினமாக்கும் சூழல்களை உருவாக்குகின்றன. பாலியல் வன்முறை கலாச்சாரங்கள் ஊடகங்க ளின் பயன்பாடு உட்பட பல்வேறு வழிகளில் நீதி செயல் முறைகளை சீர்குலைக்கின்றன; பாலியல் வன்முறை யை நிகழ்த்தியவரை பெயரிட்டு அவமானப்படுத்து வதற்கு பதிலாக, பாதிக்கப்பட்டவரையே பொறுப்பாளி யாக குற்றம் சாட்டுகின்றன. இந்தியாவில் குற்றம் இழைத்தவர் மற்றும் பாதிக்கப்பட்டவரின் மத சமூகம் அல்லது சாதி அடையாளத்துடன் தொடர்புடைய பாலி யல் வன்முறை கலாச்சாரங்களின் கூடுதல் பரிமா ணங்கள் வெளிப்படுகின்றன. இந்திய சமூகத்தில் நிலவும் மனுவாத சித்தாந்தங்க ளும் கலாச்சாரங்களும், பெண்களுக்கு எதிரானவை யாகவும், கடுமையான சாதி படிநிலைகளை வலு வாக ஆதரிப்பவையாகவும் உள்ளன. இவை, இத்த கைய பாலியல் வன்முறை கலாச்சாரங்களுக்கு ஒரு ஆதாரமாகவும், ஆதரவாகவும் உள்ளன. பாஜக ஆட்சி யின் கீழ் முஸ்லிம் பெண்களை இலக்காக கொண்ட வகுப்புவாத பெரும்பான்மைவாதம் மற்றும் அனைத்து பிரிவு பெண்களையும், குறிப்பாக தலித் பெண்களை பாதிக்கும் மனுவாத பெரும்பான்மைவாதம் போன்ற - பெண்களுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத் தும் சித்தாந்தங்கள் பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்பு களால், அரசு மற்றும் அதன் நிறுவனங்களின் ஆதர வுடன் ஊக்குவிக்கப்படுகின்றன.
பாஜக ஆளும் மாநிலங்களில் குற்றம் இழைத்த வர்களின் மத அல்லது சாதி அடையாளத்தைப் பொறுத்து வன்முறை இழைத்தவர்களைப் பாதுகாக்க அரசின் அதிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது நன்கு அறியப்பட்ட உண்மை. சட்டத்தின் ஆட்சி அல்லது நீதியின் கட்டமைப்பு அல்ல, மாறாக குற்ற வாளி மற்றும் பாதிக்கப்பட்டவரின் மத அல்லது சாதி அடையாளமே யார் தண்டிக்கப்படுகிறார்கள் மற்றும் யார் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என்பதை தீர்மா னிக்கிறது. இத்தகைய வழக்குகளில், குற்றங்களை செயல்படுத்தும் பாலியல் வன்முறை கலாச்சாரங்கள் சாதி மற்றும் மதத்துடன் தொடர்புடையவை.
ஆர்.ஜி.கர் வழக்கில் கட்டமைப்பு சிக்கல்கள்
இத்தகைய பின்னணியில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் கீழ்தான் இந்த பயங்கரமான சம்பவம் நடந்தது. அரசாங்கத்தால் குடி மைப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் நியமனம் செய் யப்பட்ட முறை; முதல்வர் மற்றும் சுகாதார அமைச்சர் பாதுகாப்பில் பங்கு; வழக்கை சீர்குலைக்க முயற்சித்த முதல்வர் மற்றும் காவல்துறையின் பங்கு; நிர்வா கத்தில் தாராளமான ஊழல்; ஊழல் மற்றும் கொடூர மான குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இடையே யான தொடர்புகள்; ஒரு குடிமைப் பாதுகாவலர் மருத்துவமனையின் அனைத்து அறைகளுக்கும், கருத்தரங்க அறை உட்பட எளிதாக அணுக சாத்தி யமான இணைப்பு குறித்த கேள்விகள்; மருத்துவ மனையில் பணிபுரியும் பெண்கள் மற்றும் பிற மருத்துவ ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாமை - இவை அனைத்தும் ஒரு தனிநபர் குற்றவாளியின் செயலுக்கு அப்பாற்பட்ட முக்கிய பிரச்சனைகள். இது அரசாங் கம், காவல்துறை மற்றும் அரசு கொள்கைகளை நேரடி யாக சம்பந்தப்படுத்துவதால் கட்டமைப்பு ரீதியானது. இந்த பிரச்சனைகளை கையாண்டு அவற்றுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, திரிணாமுல் காங்கிரஸ் பாலியல் வன்முறை கலாச்சாரங்களின் கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்தும் ஒரு கதையாடலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. கதையாடல் முதன்மையாக திரிணாமுல் காங்கிரஸின் பெண் எம்பிக்களால் வழிநடத்தப்படுகி றது என்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும். அரசாங்கம் மற்றும் காவல்துறையின் கூட்டணியை மறைக்கவும் பாதுகாக்கவும் உள்ள வெளிப்படையான இடைவெளி களிலிருந்து கவனத்தை திசை திருப்புவதே இவர்களின் முயற்சி.
பாலியல் வன்முறைக் கலாச்சாரங்களின் விரிவாக்கம்.
பொய்யான செய்திகளை எதிர்கொள்வதற்காக பாதிக்கப்பட்டவரின் பிரேத பரிசோதனை அறிக்கை யின் விவரங்களை ஒரு பெண் எம்.பி வெளியிட்டது வெட்கக்கேடானது. பரவலாக பரவிய வீடியோவில், கும்பல் பாலியல் வன்முறை என்ற குற்றச்சாட்டை “எதிர் கொள்ள” விந்தணு கண்டுபிடிக்கப்பட்டதா இல்லை யா, தனிப்பட்ட உறுப்புகளின் எடை போன்ற விவரங்க ளை விவாதிக்க அவர் முற்பட்டார். அடுத்த வீடியோ வில் எலும்பு முறிந்ததா இல்லையா என்ற விவாதத்தை எம்.பி தொடங்கி, பிரேத பரிசோதனையில் அவை அனைத்தும் பொய் என்றும் இடுப்பு எலும்பு முறிய வில்லை என்றும் ‘வெற்றிகரமாக’ அறிவித்தார். பாலி யல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர் மீது அவரது கவுரவத்தை அழிக்க நடத்தப்பட்ட புதிய பயங்கரமான தாக்குதல் இது. இது பாலியல் வன்புணர்வின் கொடூர மான தன்மையிலிருந்து கவனத்தை திசைதிருப்பி, பாதிக்கப்பட்டவரின் உடல் நிலை குறித்த பொது விவாதத்தை தொடங்க முயல்கிறது. பாலியல் வன் முறை கலாச்சாரங்களின் வளர்ச்சியில் இதன் பொருள் என்னவென்றால் - எலும்புகள் முறிக்கப் பட்டால் தவிர - “பாலியல் வன்புணர்வு பிளஸ்” நிரூபிக் கப்படாவிட்டால் அந்த பாலியல் வன்புணர்வு ஒரு “சாதா ரண” ஒன்று என்பதாகும். இதுதான் பாலியல் வன்முறை கலாச்சாரங்களின் சாராம்சம் - பாலியல் வன்புணர் வின் அருவருக்கத்தக்க சாதாரணமயமாக்கல். பொது மருத்துவமனையில் பணியில் இருந்த ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டது போதுமான அளவு பயங்கரமாக இல்லை - பொது கோபத்தை ஏற்படுத்த அதற்கு மேலும் ஏதோ “கூடுதலாக” நிரூபிக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் மேற்கண்ட எம்.பி., பிரேத பரிசோதனை அறிக்கை போன்ற ஆவணங்களைப் பெற வாய்ப்புள்ள தனது எளிதான அணுகலை தவறாகப் பயன்படுத்தி பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பினார். பொய்யான செய்திகளை இத்தகைய முறைகளால் எதிர்கொள்ள முடியாது. பிரேத பரிசோதனை அறிக்கை களும் சட்ட நடைமுறைகளும் தாமாகவே பேசும்; அவை மேற்கண்ட பெண் எம்.பி., செய்தது போல பயன்படுத்தப்படும்போது, அது புதிய பாலியல் வன்முறை கலாச்சாரங்களை உருவாக்குகிறது.
தொடரும்...