தமிழ்க் கடவுள் என்று போற்றப்படும் முருக னின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி எப்பொழுதும் அமைதியின் இருப்பிடமாகவே இருந்து வந்துள்ளது. நல்லிணக்கத்தின் அடையாள மாகவும் பழனி நகரம் திகழ்கிறது. பழனியில் பல்வேறு அரசியல் அமைப்புகள், சமூக அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. பழனி கோவி லுக்கு ஒவ்வோராண்டும் பல லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். மலைக்கோவிலை வைத்து பொது வாக பிரச்சனைகள் எதுவும் எழுவது இல்லை. சிறு சிறு பிரச்சனைகள் வரும். பழனியில் இருக்கக் கூடிய சாலையோர வியாபாரிகளை திருவிழா காலங்க ளில் அப்புறப்படுத்தும் போது பல்வேறு அரசியல் அமைப்புகள் அவர்களுடைய வாழ்வாதாரத்தை சிதைக்க வேண்டாம். போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். ஆனால் சமீப காலங்களில் குறிப்பாக எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் பழனி மலைக் கோவிலை முன்வைத்து தேவையற்ற பிரச்சனை களை உருவாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்று பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகள் தொடர்ச்சியாக முயற்சி செய்து கொண்டி ருக்கிறார்கள். பழனியில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கட்சிகளோ இறை நம்பிக்கை உள்ள பக்தர்களோ என்றைக்கும் பிரச்சனை செய்தது கிடை யாது. ஆனால் பழனி நகரில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கெடுக்கும் வகையில் பாஜக - இந்து முன்னணி வகையறா தொடர்ந்து சீர்குலைவு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.
தைப்பூச முதல் நாளில் பாஜக ஊர்வலம்
பாஜக தலைவர் எச்.ராஜா 2019 ஆம் ஆண்டு தைப் பூசத்திற்கு முதல் நாள் லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடி இருக்கக்கூடிய நிலையில் திருவீதியில் ஊர்வலம் நடத்தினார். இதனால் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். பொதுவாக எந்தக் கட்சியும் தைப்பூசத் திற்கு முதல் நாள் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கிடையாது. ஆனால் எச்.ராஜா வகையறாக்கள் ஒன்றிய ஆளுங்கட்சி என்ற மமதையில் இந்த ஊர்வலத்தை நடத்தி பக்தர்களுக்கு இடையூறு செய்தனர். 2018 ஆம் ஆண்டு ஒன்றிய மோடி அரசின் விவசாயி கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து குரல் கொடுத்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அய்யாதுரை என்ற விவசாய சங்க தலைவர் முருகன் கோவிலுக்கு வந்த பொழுது மின்இழுவை ரயில் நிலையத்தில் வைத்து அவர் மீது பாஜகவினர் தாக்குதல் தொடுக்க முயற்சித்த பொழுது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் தடுத்து நிறுத்தியது. தாக்குதல் நடத்த முயன் றவர்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என போராடியது. பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், இன்றைய ஒன்றிய இணை அமைச்சருமான எல்.முருகன் வேல் யாத்திரை என்ற பெயரில் அரசியல் யாத்திரை ஒன்றை நடத்தினார். அப்பொழுது பாஜகவினர் காலில் செருப்பை அணிந்து கொண்டு வேலுக்கு பக்கத்தி லேயே செருப்பை வைத்தார்கள். இதனால் பக்தர்கள் மனம் புண்பட்டனர். வேல் யாத்திரை என்று கூறி செருப்புக்கு அருகில் வேலை வைத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளி வந்தது. அது மட்டு மல்ல, அமைச்சர் எல்.முருகன் திருவாவினன்குடி கோவிலின் மூலவர் படத்தை எடுத்து தங்களுடைய கட்சியின் முகநூலில் வெளியிட்டார். அது தொடர்பா கவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காவல் துறை யில் புகார் கொடுத்தது. ஆனால் அதிமுக ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கொரோனா காலத்தில் அத்துமீறிய பாஜக
கொரோனா காலத்தில் மலைமேல் உள்ள மின் இழுவை ரயில் பயன்படுத்தப்படாமல் இருந்தது. மத்திய இணைஅமைச்சர் வந்த போது பயன்படுத்திய நேரத்தில் 30 க்கு மேற்பட்ட பாஜகவினர் அத்துமீறி சென்றனர். இது சம்பந்தமாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காவல் துறையில் புகார் கொடுத் தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் பழனி கோவில் திருக்குடமுழுக்கு நிகழ்வுக்கு முதல் நாள் சங்பரிவார அமைப்பினர் மூலவர் சன்னதி முன்னால் சென்று அய்யோ அய்யோ என்று சத்தம் போட்டு அதை வீடியோ எடுத்து வெளியிட்டனர். செல்போனில் மூலவர் சன்னதியை வீடியோ எடுக்கக்கூடாது, புகைப்படம் எடுக்கக் கூடாது என்று சொல்லி அறிவிப்புப் பலகை இருந்தும் தங்களு டைய அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் செல்போனை கொடுத்து ஐயோ ஐயோ என்று சொல்லி கத்தி அங்கு ஒரு பரபரப்பை உருவாக்கி படம் பிடித்தனர். குட முழுக்கு நிகழ்வை நடத்தவிடாமல் செய்வதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, அவ்வளவும் செய்தது சங்பரிவார அமைப்புகள். அறநிலையத்துறை அதிகாரிகள் கருவறைக்குள் சென்றார்கள் என்று பொய்யான விஷமப் பிரச்சா ரத்தை பரப்பினார்கள். ஆனால் பழனி மக்கள் அதை நம்பவில்லை. குடமுழுக்கின் போது தமிழில் மந்தி ரங்கள் சொல்லப்பட்டதை எதிர்த்ததோடு, சமஸ் கிருத மந்திரங்களை மட்டுமே சொல்ல வேண்டும் என பாஜகவினர் பிரச்சனை செய்தனர்.
கோவிலுக்குள் கட்சி கோஷம்
திருஆவினன்குடி கோவிலில் பங்குனி உத்தி ரத்தை முன்னிட்டு கோவிலுக்கு வெள்ளையடிக்க வில்லை என்று சொல்லி கோவிலுக்கு உள்ளே சென்று அரசியல் கட்சி கோஷங்களை போட்டார்கள். கோவி லுக்குள் அரசியல் கட்சி கோஷங்களை போடக் கூடாது. தேவையானால் நிர்வாக அலுவலகத்தில் சென்று முறையிடட்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் கூறினர். முதல்வர் அலுவலக தனிப்பிரிவுக்கும் புகார் செய்யப்பட்டது. இறை நம்பிக்கை இல்லாதவர்கள் கூட கோயில் சன்னிதா னத்தில் ஒருபோதும் சென்று பிரச்சனை செய்த தில்லை. அரசியல் கோஷங்களை எழுப்பியதில்லை. ஆனால் மதத்தின் பெயரால் அரசியல் செய்யும் பாஜகவினர்தான் பழனி கோவிலை தொடர்ந்து இழிவுபடுத்தி வருகின்றனர். தனிநபர் ஒருவர் புலிப்பாணியின் நேரடி வாரிசு நான்தான் என்றும் இந்த கோவில் எனக்குத்தான் சொந்தம் என்றும் சொல்லிக் கொண்டு இருக்கிறார். அவர் கோவில் இடத்தை ஆக்கிரமித்து குளிக்கும் இடம், கழிப்பறை என்று பல கட்டிடங்களை கட்டி வியாபாரத்தலமாக மாற்றிக் கொண்டு உள்ளார். இதனை பாஜகவினர் ஆதரிக்கின்றனர்.
போகர் ஜெயந்தி விழாவை அறநிலையத்துறை நடத்தக்கூடாது. நாங்கள்தான் நடத்துவோம் என்று சொல்லி நீதிமன்றத்தின் மூலம் ஆணை பெற்று நடத்தினார்கள். ஆனால் அறநிலையத்துறைதான் போகர் ஜெயந்தி விழாவை நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிர மணியன், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடந்த துயர நிகழ்வான விஷச் சாராயச் சாவுக்கு பழனி கோவிலில் நடந்த குடமுழுக்கு விழாவில் ஏற்பட்ட குறைபாடுதான் காரணம் என்று கூறி பழனி கோவிலை யும், இந்நகர மக்களையும் இழிவுபடுத்தினார்.
தங்களின் வியாபாரத் தலமாக்க முயற்சி
இந்த பின்னணியில் பழனி மலைக்கோவிலில் பக்தர்கள் வெளியே வரக்கூடிய பாதை வழியாக சங்பரிவார் அமைப்பினர் உள்ளே செல்ல முயற்சித்த னர். இதை கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதை திசை திருப்பி உள்ளூர் பக்தர்கள், வெளியூர் பக்தர்கள் என சிண்டு முடிய சங் பரிவார அமைப்பு கள் முயன்றன. பழனி உள்ளிட்ட கோவில்களை இந்து சமய அற நிலையத்துறை பராமரிக்கக்கூடாது எங்களிடம் கொடுக்க வேண்டும் என்று பாஜகவினர் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருகின்றனர். பழனி கோவிலை தங்களுடைய வியாபாரத் தலமாக மாற்ற முயல் கின்றனர். பக்தர்கள் வரிசையில் நின்றாலும், இவர்கள் டிக்கெட் எடுக்காமல் சென்று உடனே எங்களை விட வேண்டும் என அடிக்கடி தகராறு செய்கின்றனர்.இதைத் தடுத்தால் அறநிலையத்துறைக்கு எதிராக வும், கோவில் நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராகவும் அவதூறு பரப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதிகாரிகளை அர்பன் நக்சலைட் என்று சொல்லி அவதூறு கிளப்புவார்கள். குடமுழு விழாவுக்கு முதல் நாள் ஆர்ப்பாட்டம் செய் தார்கள். ஆனால் திடீரென்று ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு போய் விட்டார்கள். இவர்களது சீர்குலைவு முயற்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து மக்களிடம் அம்பலப்படுத்தி வருவ தால் ஆத்திரமடைந்து அவதூறில் ஈடுபடுகின்றனர்.
கலவர அரசியல் களமாக்கச் சதி
சமீபத்தில் மின் இழுவை ரயில் மூலம் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த குழந்தைகளை மலைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த பொழுது அங்கிருந்த அலுவலர் செல்லக்கூடாது என்று சொல்லி தடுத்து விட்டார். இது சம்பந்தமாக சமூக வலைதளங்களிலும் வந்த பொழுது அறநிலையத்துறை அமைச்சர் தெளி வான பதிலை கொடுத்து விட்டார். ஆனால் இஸ்லா மிய மக்களுக்கு எதிராக தொடர்ந்து வெறுப்புப் பிரச்சாரத்தில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். பழனி கோவிலை தங்களது கலவர அரசியலின் களமாக மாற்ற முயல்கின்றனர். அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களும் சகோதர உணர்வுடன் வசித்து வரும் பழனி நகரம் மற்றும் சுற்று வட்டாரத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் பரிவாரத்தினர் முயல்கின்றனர். இதனை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். கோவில் நிர்வாகத்தில் சங் பரிவாரத்தினர் குழப்பம் செய்ய அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி பழனி யில் மதச்சார்பற்ற ஜனநாயக இயக்கங்களின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. ஆனால் பாஜக மற்றும் இந்து முன்னணியினர் இந்த பொதுக் கூட்டத்தை நடத்த அனுமதி தரக் கூடாது என மனு கொடுத்துள்ளனர்.
சிப்காட் அமைவதை தடுக்கும் பாஜக
பழனி நகர மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பழனி நகர மக்களு டைய வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு தொடர்ச்சி யாகப் போராடுவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. கோயில் நிர்வாகத்திற்கு வரக்கூடிய மாடுகளை பராமரிக்கக் கூடிய இடம் என்பது கள்ளிமந்தயத்தில் உள்ளது. அந்த இடத்தில் அரசின் சார்பில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அதே நேரத்தில் பசுக்களை பரா மரிப்பதற்கு போதுமான இட வசதி அந்தப் பகுதியி லேயே உள்ளது. தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்திற்கு கோசாலையை மாற்றுவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. சிப்காட் அமைவது பின்தங்கிய அந்த பகுதியில் வேலை வாய்ப்பை உருவாக்கும். சிறு சிறு தொழிற்சாலைகள் கொண்டு வருவதற்கு முயற்சி எடுக்கின்ற பொழுது எச்.ராஜா வகையறாக்கள் ஏதோ நடக்கக்கூடாதது கள்ளிமந்தயத்தில் நடந்து விட்டது போல் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். பழனிப் பகுதி யில் தொழிற்சாலைகள் வரக்கூடாது. பழனி பகுதி யில் இருக்கிற மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக் கக் கூடாது. ஒட்டன்சத்திரம் பகுதி இளைஞர்களுக்கு தொடர்ச்சியாக தொழில் வாய்ப்புகள் உருவாகக் கூடாது. பின்தங்கிய பகுதியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இவர்கள் குறுகிய அரசியல் செய்து வருகிறார்கள்.
அறநிலையத்துறையை ஒழித்துக் கட்ட முயற்சி
இந்து சமய அறநிலையத்துறையின் வசம் ஏராள மான நிலங்கள் இருக்கின்றன. அதன் மூலம் விவ சாயிகள் குத்தகையை முறையாகச் செலுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை பேணிக்காத்து வருகிறார்கள். குத்தகையை சரியாகச் செலுத்தாதவர்களுக்கு உட னடியாக அறநிலையத்துறை கடிதம் அனுப்பி குத்தகைத் தொகையை வாங்கி வருகிறார்கள். மேலும் பழனியில் இரண்டு கலைக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு கிட்டத் தட்ட ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று இருக்கிறார்கள். ஒரு பின் தங்கிய பகுதியில் ஏராளமான பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப் பட்டுள்ளது. தினசரி கோடிக்கணக்கில் வரக்கூடிய வருமானங்களையும் இதுபோன்ற சொத்துக்களையும் நிலங்களையும் அபகரிக்க வேண்டும் என்பதே இவர்களது நோக்கம். அதனால் இதற்கு தடையாக இருக்கும் அறநிலையத்துறையை ஒழித்துக் கட்ட முயல்கிறார்கள். மேலும் சங் பரிவார் அமைப்பினர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஐயப்பன் கோவிலில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பெண்கள் வழிபாடு செய்ய அனுமதித்ததை கண்டித்து பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நகர்மன்ற தலைவர் தோழர் ராஜ மாணிக்கத்தையும் மிக அநாகரிகமான முறையில் பேசினார்கள். காவல்துறையில் புகார் செய்தும் அப்பொழுது நடவடிக்கை இல்லை.
பழனியில் ஒரு தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்த சங் பரிவாரம் முயற்சிப்பதை கண்டித்து ஜூலை 13ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் மற்றும் ஜனநாயக முற்போக்கு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கக்கூடிய பொதுக்கூட்டம் பழனியில் நடை பெறுகிறது. பழனியின் பாரம்பரியத்தையும், நல்லிணக்கத்தை யும், அமைதியையும் பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கும் முயற்சிகளுக்கு எப்போ தும் போல் மக்கள் துணை நிற்பார்கள்.
கட்டுரையாளர்: பழனி நகர்மன்ற துணைத்தலைவர், சிபிஐ(எம்) பழனி நகரச் செயலாளர்