தமிழக உழைப்பாளி மக்களின் நம்பிக் கைப் பேரொளியாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 24ஆவது மாநாடு விழுப்புரத்தில் ஜனவரி 3, 4, 5 தேதிகளில் பேரெழுச்சியுடன் நடந்து முடிந்திருக்கிறது. மாநாட்டின் நிறைவாக தமிழ்நாட்டில் உழைப்பாளி மக்களுக்கான கொள்கை மாற்றங்களை முன்னிறுத்துகிற - மார்க்சிஸ்ட் கட்சியின் நீண்டகால இலக் கான - இடது ஜனநாயக மாற்றை உரு வாக்கும் பயணத்தை மேற்கொள்வோம் என்ற அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஊடகங்களின் கவனம்
மாநாடு குறித்து ஊடகங்களில் பரவலாக செய்திகள் இடம் பெற்றி ருந்தன. தமிழ்நாட்டு ஊடகங்களில் மட்டுமின்றி இலங்கை ஊடகங்களிலும் முன்னெப்போதையும் விட இந்த முறை மார்க்சிஸ்ட் கட்சி மாநாடு குறித்து பரவலாக செய்திகள் வெளியிடப் பட்டிருந்தன. குறிப்பாக தமிழ் மக்களிடையே பரவலாக வாசிக்கப்படும் பெரிய ஊடகங்களில் ஒன்றான வீரகேசரி மற்றும் ஈழ நாடு, தமிழன், தினக்குரல் உள்ளிட்ட ஏடுகளில், “இலங்கையில் மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்தி தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவ லாக்கத்தை உறுதி செய்ய வேண்டும்” என மார்க்சிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில மாநாட்டில், நிறைவேற்றப்பட்ட தீர் மானத்தை பிரதானப்படுத்தி செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
அவதூறு பரப்பிய சில ஊடகங்கள்
தமிழ்நாட்டில் மாநாட்டிற்கும் முன்பும், மாநாட்டின்போதும் வெளியிடப்பட்ட செய்திகளை சில ஊடகங்கள் திட்டமிட்ட அவதூறாகவும், திரித்தும் வெளியிட்டுள் ளன. அப்படியான செய்திகளில் ஒன்று தான் “திமுக அரசை விமர்சித்த கே.பால கிருஷ்ணன் மாற்றம்” என்ற தி இந்து தமிழ் திசை ஏட்டின் செய்தியாகும். ஊடகங்களில் செய்தித்துறையில் பணியாற்றுவோருக்கு குறைந்தபட்ச அரசியல் ஞானம் அவசியம். ஒவ்வொரு கட்சியிலும் என்ன நடைமுறை, அக்கட்சி யின் விதிகள் என்ன, கொள்கை என்ன - உள்ளிட்டவற்றைப் பற்றி அறியாமல், கற்றுக் கொள்ளாமல் வாய்க்கு வந்ததை யெல்லாம் எழுதுவது, எவ்விதமான ஊடக நெறியும் அல்ல.
மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்ற முறையில், தோழர் கே.பாலகிருஷ்ணன், விழுப்புரம் மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை முக்கியமானது. இந்திய அரசியல் அரங்கில் கடந்த 11 ஆண்டுகளாக பாசிசத் தன்மை கொண்ட கொடூரமான எதேச்சதி கார ஆட்சியை நடத்தி வருகிற ஆர்எஸ்எஸ் - பாஜக தலைமையிலான ஆட்சியை அகற்றுவதற்காக காங்கிரஸ், திமுக, இடது சாரிகள் உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக, முற்போக்கு சக்திகளும் வலுவாக ஒன்றிணைந்து போராடி வருகின்றன; அதேவேளையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளும் கட்சியாக திமுகவின் ஆட்சி நடை பெறும் நிலையில், இந்த ஆட்சி எந்த வகை யிலும், மக்களுக்கு விரோதமான, ஜன நாயக உரிமைகள் பறிக்கப்படுகிற கொள்கைகளையோ, அணுகுமுறை யையோ மேற்கொண்டு விடக்கூடாது என்ற - தமிழ்நாட்டு மக்களின் நலன்கள் மீதான பெரும் அக்கறையின்பால் வலுவான கருத்துக்களை உறுதிபட மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித்து வருகிறது; பல தரு ணங்களில் ஜனநாயகப் போராட்டங்களை நடத்துகிறது. இது தோழர் கே.பால கிருஷ்ணனின் தனிப்பட்ட நிலைப்பாடு அல்ல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு.
கே.பாலகிருஷ்ணன் பேசியது என்ன?
இப்போதும் கூட, மதவெறி மாய்ப்பதில் திமுகவோடு உறுதியாக நிற்போம்; அதே வேளையில் உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டத்தில் சமரசமில்லை என்பதுதான் கட்சியின் மாநாடு எடுத்திருக் கும் நிலை. இதைத்தான் தோழர் கே.பால கிருஷ்ணன் விழுப்புரம் பொதுக்கூட்டத் தில், “தமிழ்நாட்டின் அரசியல் நிலையைப் பொறுத்தவரை, பாஜகவை வீழ்த்துகிற போராட்டத்தில் திமுகவோடு உறுதியாக நிற்கின்றோம். இந்த நாட்டின் அரசியல் சாசனத்தை வீழ்த்துவதற்கு எதிரான போராட்டம்; ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராகவும் நடத்துகின்ற போராட்டத்திலும் இணைந்து கைகோர்ப்போம். ஒன்றிய அரசை எதிர்த்து நடத்துகின்ற போராட்டத் தில் எல்லாம் உங்களோடு இணைந்து களம் காணுகின்ற நாங்கள், திமுக அரசு தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்கள் மக்களின் உரிமைகளை பாதுகாக்கின்ற திட்டங்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்” என்று குறிப்பிட்டார். மேலும், “...எனவே பாஜகவை வீழ்த்து கின்ற பாதையில் தமிழகமே திரண்டு நிற்கின்ற மகத்தான போராட்டத்தை நடத்துவோம். மதச்சார்பற்ற கட்சிகளோடு இணைந்து போராட்டம் நடத்துவோம். அதே நேரத்தில் வாழ்வின்றி தவிக்கின்ற, வசதி யிழந்து தவிக்கின்ற, வீடில்லாத மக்கள், பட்டா இல்லாத புறம்போக்கில் குடி யிருக்கும் மக்களுக்கான - அவர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் மாற்று சக்தியாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி திகழும்” என்று தோழர் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.
இது ரகசியமல்ல!
இந்த உரை திமுக அரசின் குறைபாடு களை விமர்சிக்கும் உரைதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. திமுக அரசின் பல்வேறு சாதனைகளை மகிழ்ச்சியுடன் வர வேற்றுப் பாராட்டுகின்ற அதே வேளை யில், அந்த அரசு அமலாக்குகின்ற நவீன தாராளமய கொள்கைகள் அடிப்படை யிலான பல செயல்பாடுகளை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கவில்லை; விமர்சிக்கிறது. இது ஒன்றும் ரகசியமல்ல. தொழிலாளர் வர்க்க கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பல்வேறு பொருளாதாரக் கொள்கைகளில் இப்படிப்பட்ட நிலைபாட்டைத்தான் மேற்கொள்ளும்; அதற்காகப் போராடும்; அதில் அதன் தலைவர்கள் உறுதியாக நிற்பார்கள் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரியும். திமுகவுக்கும் தெரியும். எனவே அரசை விமர்சித்த காரணத்திற் காக கே.பாலகிருஷ்ணன் மாற்றப்பட்டு விட்டார் என்று தி இந்து தமிழ் திசை போன்ற ஓரிரு ஊடகங்கள் திரிப்பது முற்றிலும் அவ தூறானது மட்டுமல்ல, ஊடக நெறிக்கு எதிரானது.
முன்னுதாரணத் தலைவர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புச் சட்ட விதிகளின்படி நாடு முழு வதும் நடைபெறும் மாநாடுகளில் இடைக்கமிட்டி செயலாளர் முதல் அகில இந்திய பொதுச் செயலாளர் வரை பல்வேறு நிலைகளில் உள்ள பொறுப்புகளுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு யாரும் விதி விலக்கு அல்ல. இன்னும் சொல்லப்போனால், கம்யூ னிஸ்ட் தலைவர்கள் தாங்களாகவே முன்வந்து பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டு அடுத்த தலைவர்களுக்கு, தலை முறைகளுக்கு வழிவிட்டு கட்சிக்கு வழி காட்டும் மகத்தான முன்னுதாரணங்களாக திகழ்ந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட முன்னுதாரணமாக கட்சி அமைப்பில் தோழர் கே.பாலகிருஷ்ணன் இந்த மாநாட்டில் செயல்பட்டிருக்கிறார் என்பது தான் மாநாட்டுப் பிரதிநிதிகள் மட்டுமல்ல, கட்சித் தோழர்கள் அனைவருக்கும் ஓர் உணர்ச்சிகரமான செய்தியாக அமைந்தது என்றால் மிகையல்ல. மார்க்சிஸ்ட் கட்சி அமைப்பு விதிகளின்படி மாநிலக்குழுவில் 72 வயது முடியும் வரை நீடிக்கலாம். பொறுப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட லாம். ஆனால் தோழர் கே.பாலகிருஷ்ண னுக்கு 72 வயது இன்னும் முடியவில்லை. எனினும் அவர் தாமாகவே முன்வந்து மாநி லக்குழு பொறுப்புகளிலிருந்து விலகி, புதிய தலைமை தேர்வு செய்யப்படும் வித மாக வழிகாட்டியுள்ளார். ஏற்கெனவே மத்தி யக்குழு உறுப்பினர் என்ற பொறுப்பில் இருப்பதால், அதனடிப்படையில் தமிழ்நாட்டில் கட்சிப் பணிகளில் அவர் தொடர்ந்து செயல்படுவார். கம்யூனிஸ்ட் கட்சியில் இது ஒரு இயல்பான நிகழ்வு; நடைமுறை. இதற்கும் பொதுக்கூட்டத்தில் அவர் ஆற்றிய உரைக்கும் முடிச்சுப் போட்டு தங்கள் அறி யாமையை வெளிப்படுத்தியுள்ளன சில ஊடகங்கள். இதைத் தெளிவுபடுத்தும் வித மாகவே விழுப்புரம் மாநாட்டில் நிறைவு நிகழ்வின் போது உரையாற்றிய தோழர் கே.பாலகிருஷ்ணன், “பொதுக்கூட்டத்தில் பேசுகிற உரையை மையப்படுத்தியா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநிலச் செயலாளரை தேர்வு செய்வார்கள்? இது அப்படி எழுதுகிறவர்களின் அறியாமை யை காட்டுகிறது” என்று கூறினார். “கட்சி யின் மாநிலச் செயலாளராக தோழர் பெ.சண்முகம் அவர்களை ஏகமனதாக தேர்வு செய்துள்ளோம். நான் மாநிலக்குழு வில் தொடர்வதற்கும், மீண்டும் செயலாள ராக தேர்வு செய்யப்படுவதற்கும் வாய்ப்பு இருந்தாலும் கூட, வாய்ப்பு இருக்கிறவரை பொறுப்பில் இருந்துவிட்டு, அதற்குப்பிறகு புதியவர்கள் வரும்போது, அவர்களுக்கும் வயதாகி - இப்படி வயது கடந்தவர்கள் மீண்டும் மீண்டும் பொறுப்புக்கு வரக் கூடாது என்பதால் தான், என்னை விடு வித்துக் கொண்டு தோழர் பெ.சண் முகத்தை ஏகமனதாக தேர்வுசெய்துள் ளோம். மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரை எங்கள் தோழர்கள் யாரும் பொறுப்பு களுக்காக, பதவிகளுக்காக அலைகிற வர்கள் அல்ல. கட்சியின் ஜனநாயக மாண்புகள் மிகவும் உயர்ந்தவை. அடுத்தடுத்த தலைமுறையை வளர்த் தெடுப்பதும், புதிய தலைமையை உரு வாக்குவதும் கம்யூனிஸ்ட்டுகளின் சிறந்த பண்பு. அந்த அடிப்படையிலேயே மாற்றம் நடந்துள்ளது” என்றும் தெளிவுபட விளக்கினார். மேலும் “இந்த மாநாட்டின் முடிவின்படி தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு வலுவான இயக்கமாக மாற்று வதை நோக்கியும், இடதுசாரிகளின் ஒற்றுமை, இடது - ஜனநாயக சக்திகளின் ஒற்றுமை மற்றும் அனைத்து மதச்சார்பற்ற, முற்போக்கு சக்திகளின் ஒற்றுமையை மேலும் வலுவாக கட்டுவோம்; மத்தியில் மதவெறி ஆட்சியாளர்களை மாய்ப்போம்; மாநிலத்தில் உழைப்பாளி மக்களின் நலன்களைக் காப்போம்” என்றும் கே.பாலகிருஷ்ணன் மாநாட்டின் நிறைவில் முழக்கமிட்டார். இந்த முழக்கமே மார்க்சிஸ்ட் கட்சியின் முழக்கம்!