articles

சிபிஐ(எம்) அகில இந்திய மாநாட்டுத் தீர்மானங்கள்

சிபிஐ(எம்) அகில இந்திய மாநாட்டுத் தீர்மானங்கள்

அதிகரிக்கும் போதைப் பழக்கம் :  எதிர்த்துப் போராட விரிவான செயல்திட்டம் தேவை!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சி ஸ்ட்) 24ஆவது மாநாடு, இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள இளைஞர்களிடையே போதைப்பொ ருள் பழக்கம் குறித்து தீவிர கவலையை வெளிப்படுத்துகிறது. இந்த அவசரமான பிரச்சனைக்கு உடனடி கவனம், கூட்டு நடவடிக்கை மற்றும் உறுதியான தீர்வுகள் தேவைப்படுகின்றன. போ தைப்பொருள் பழக்கம் உடல்நலத்தை மட்டுமல்லாது, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக நிலைத்தன்மையையும் பாதிக்கிறது. இது இளைஞர்கள் தேசிய வளர்ச்சிக்கு பங்களிக்கும் திறனை குறைக்கிறது.

ஐ.நா. மற்றும் உலக சுகாதார அமைப்பின் தரவுகள்

ஐக்கிய நாடுகளின் போதைப்பொ ருள் மற்றும் குற்றம் தொடர்பான அலு வலகத்தின் (யுஎன்ஓடிசி) உலக போதைப் பொருள் அறிக்கை, சமூக அந்நிய மாக்கல், சக நபர்களின் அழுத்தம் மற்றும் சட்டவிரோத பொருட்களை எளி தாக அணுகக்கூடிய நிலை காரணமாக வளரிளம் பருவத்தினர் மற்றும் இளம் வயதினரிடையே போதைப்பொருள் பயன்பாடு மற்றும் பிரச்சனைகள் பரவ லாக  அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) மதிப்பீட்டின்படி, 2020ல் உலகளவில் 15-64 வயதுடைய சுமார் 27 கோடிப்பேர் சட்டவிரோத போதைப் ப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ள னர். மக்கள்தொகை அடிப்படையில் இளைஞர்கள் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருக்கின்றனர்.

இந்தியாவில் போதை நெருக்கடி

பெரும் இளைஞர் மக்கள்தொகை கொண்ட இந்தியா, கடுமையான போ தைப்பொருள் பழக்க நெருக்கடியை எதிர்கொள்கிறது. சமூக நீதி மற்றும் அதி காரமளித்தல் அமைச்சகம் மற்றும் தேசிய போதை சார்பு சிகிச்சை மையத் தின் (NDDTC) அறிக்கைகள், அபின், கஞ்சா மற்றும் செயற்கை போதைப்பொ ருட்களின் நுகர்வின் அபாயகரமான போக்குகளைக் காட்டுகின்றன. இந்தி யாவில் சுமார் 3.1 லட்சம் நபர்கள் போ தைப்பொருள் பழக்கத்திற்கு அடிமைக ளாகியுள்ளனர். 2019 இந்தியாவில் போதைப்பொருள் பயன்பாட்டின் அளவு மற்றும் முறை குறித்த தேசிய ஆய்வில், 10-19 வயதுடைய நபர்களில் 14.6 சதவீதம் பேர் மனநிலையைப் பாதிக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கவலைகள் மற்றும் பரிந்துரைகள்

தடுப்பு, சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் சட்ட அமலாக்கம் ஆகியவற்றை உள்ள டக்கிய விரிவான உத்திகளுக்கு அவசர தேவை உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி மாநாடு பின்வருவனவற்றை பரிந்து ரைக்கிறது:

1. தடுப்பு மற்றும் விழிப்புணர்வு திட்டங்களை வலுப்படுத்துதல்

போதைப்பொருள் துஷ்பிரயோ கத்தின் ஆபத்துகள் குறித்து இளைஞர்க ளுக்கு கல்வி அளிக்க பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சமூகங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை செயல் படுத்துதல்.

2. சிகிச்சை மற்றும் மறுவாழ்வு வசதிகளை மேம்படுத்துதல்

ஆதாரம் சார்ந்த தலையீடுகள் மற்றும் ஆலோசனைகளை உள்ள டக்கிய தரமான சிகிச்சை மையங்க ளுக்கான அணுகலை அதிகரித்தல்.

3. கடுமையான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அமல்படுத்துதல்

சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தவும் போதை மருந்துகள் மற்றும் மனநல பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் சட்டம் (நார்கோட்டிக் டிரக்ஸ் அண்ட் சைக்கோடிராபிக் சப்ஸ்டன்சஸ் (NDPS)  சட்டம்), 1985ஐ திறம்பட அமலாக்கு வதை உறுதி செய்யவும் அமலாக்க வழிமுறைகளை வலுப்படுத்துதல்.

4.சமூகம் சார்ந்த முன்முயற்சி களை ஊக்குவித்தல்

ஆதரவான சூழலை உருவாக்க வும், நேர்மறையான மாற்றுகளை வழங்கவும் பெற்றோர்கள், ஆசிரியர் கள் மற்றும் உள்ளூர் தலைவர்களை ஈடுபடுத்துதல்.

5. நிதி மற்றும் வள ஒதுக்கீட்டை அதிகரித்தல்

போதைப்பொருள் எதிர்ப்பு முன் முயற்சிகள், சிகிச்சை மையங்கள் மற்றும் ஆராய்ச்சி திட்டங்களை ஆத ரிக்க போதுமான நிதி ஒதுக்குதல்.

அரசுக்கு வேண்டுகோள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சி ஸ்ட்) 24ஆவது மாநாடு, இளைஞர்க ளிடையே போதைப்பொருள் பழக்கத் திற்கு எதிராக உடனடி மற்றும் தொ டர்ச்சியான நடவடிக்கை எடுக்க இந்திய அரசாங்கத்தை வலியுறுத்துகிறது. போதைப்பொருள் துஷ்பிரயோகத்தை திறம்பட எதிர்த்துப் போராட விரிவான தேசிய செயல் திட்டம் தேவை. அரசாங் கங்கள், சிவில் சமூகம் மற்றும் தனி நபர்களிடையே கூட்டு நடவடிக்கை, உறுதிப்பாடு மற்றும் ஒத்துழைப்பு மட்டுமே இளைஞர்களிடையே போதைப்பொருள் பழக்கத்தின் ஆபத்தைத் தணிக்க உதவும்.

பால் புதுமையர்க்கு சம உரிமைகளையும் கண்ணியத்தையும் உறுதி செய்ய வேண்டும்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24ஆவது மாநாடு, பால்புதுமையர் (எல்ஜி பிடிக்யூஐ) சமூகத்தின் உரிமைக ளுக்கான போராட்டத்தில் அவர்களு டன் ஆதரவாக நிற்கிறது. உலகளாவிய சவால்கள் பால்புதுமையர் சமூகம், குறிப்பாக திருநங்கை தனிநபர்கள், உலகளவில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் தொகையாக இருக்கிறார்கள். உலக ளவில் வலதுசாரி அரசியலின் எழுச்சி யின் பின்னணியில் பால்புதுமையரின் வாழ்க்கை இன்னும் கடினமாகிவிட்டது. சில நாடுகளில், அரசாங்கங்கள் தீவிரமாக அவர்களின் அடையாளங்க ளை அழிக்க அல்லது அவர்களின் உரிமைகளை கட்டுப்படுத்த முயற்சித் துள்ளன. மோடி அரசின் பிற்போக்கு அணுகுமுறை பால் புதுமையர் பிரச்சனைகள் மீதான மோடி அரசின் ஒட்டுமொத்த அணுகுமுறை, பிற்போக்குத்தனமாக இருப்பதுடன், அடையாள அரசியல் மற்றும் முரண்பாடுகளால் நிறைந்துள் ளது. வலதுசாரி உணர்வுகளுக்கு பணிந்து, பால்புதுமையர்க்கு பல அத்தியாவசிய உரிமைகளை மறுக்கும் பாகுபாடு நிறைந்த சட்டங்களை திருத்த மறுத்துள்ளது. 2018ல் ஓரினச் சேர்க்கை உறவுகளின் குற்றவியல்தன்மை நீக்கப்பட்டாலும், குறிப்பிடத்தக்க சட்ட மற்றும் சமூக சவால்கள் நீடிக்கின்றன. ஓரினச் சேர்க்கை இணையர்கள் சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை; குடிமைப் பிணைப்புகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சொத்து, காப்பீடு, பாதுகாப்பு அல்லது தத்தெடுப்பு தொடர்பான சட்ட பாது காப்புகள் இல்லை. நால்சா தீர்ப்பு மற்றும் அதனை அமல்படுத்தாத அரசு 2014 தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (NALSA) தீர்ப்பு, திருநங்கை நபர்களின் சுய அடையா ளம் காணும் உரிமையை அங்கீகரித்து,  வேலைகள் மற்றும் கல்வியில் கிடை மட்ட இடஒதுக்கீட்டை கட்டாயமாக்கியது. ஆனால், மோடி அரசு, திருநங்கை நபர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2020ஐ திருத்தி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க மறுத்துள்ளது, இது அமைப்புசார் தடைகளை ஒரு அளவிற்கு நிவர்த்தி செய்திருக்கும். சுகாதார சிகிச்சை  அணுகலில் தடைகள் சமூக மற்றும் அதிகாரத்துவ தடை கள் திருநங்கை தனிநபர்கள் “ஆயுஷ்மான் பாரத்” திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதை மறுக்கின்றன. இது  அவர்களின் தனித்துவமான தேவை கள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் மேலும் மோசமடைகிறது; அவர்களை மேலும் களங்கத்திற்குள் தள்ளுகிறது. கரிமா க்ரேஹ்ஸ் –  தங்குமிட பிரச்சனை குடும்பங்கள் மற்றும் சமூகங்க ளால் நிராகரிக்கப்பட்ட திருநங்கை தனிநபர்களுக்காக கரிமா க்ரேஹ்ஸ் (Garima Grehs) அமைக்கப்பட்டன. தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் இவை, நிதியுதவியில் விளக்க முடியாத தாமதங்கள் காரண மாக பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றன. நாடு முழுவதும் 18 தங்கு மிட இல்லங்கள் மட்டுமே அமைக்கப் பட்டுள்ளன; அவை வெறும் 414 நபர் களை மட்டுமே கொண்டுள்ளன. இது அவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் மோடி அரசின் அலட்சிய அணுகு முறையை வெளிப்படுத்துகிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இவர்களின் எண்ணிக்கை சுமார் ஐந்து லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரத்தில் விலக்கப்படுதல் சட்ட மற்றும் சமூக சவால்களுக்கு கூடுதலாக, பால்புதுமையர்  சமூகம் பெரும்பாலும் முக்கிய கல்வி அமைப்பு, வேலைவாய்ப்புகள் மற்றும் சுகாதார சேவைகளிலிருந்தும் விலக்கப்படு கிறது. இந்த விலக்குதல் அவர்கள் ஓரங்கட்டப்படுதலையே அதிகரிக்கிறது. மாநாட்டின் கோரிக்கைகள் மேற்கூறியவற்றின் அடிப்படை யில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சி ஸ்ட்) 24ஆவது மாநாடு பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது: V    நால்சா தீர்ப்புக்கு ஏற்ப திருநங்கை நபர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2020ஐ திருத்துதல் மற்றும் பிற கவலைகளை நிவர்த்தி செய்தல். V    பால் புதுமையர் சமூகத்தால் சுகாதார சேவைகளை அணுகுவதில் உள்ள தடைகளை அகற்றுதல். V    திருநங்கை தனிநபர்களுக்கு போது மான எண்ணிக்கையிலான தங்கு மிட இல்லங்களை அமைத்தல் மற் றும் அவர்களுக்கான பட்ஜெட்ஒதுக் கீட்டை கணிசமாக அதிகரித்தல். V    ஓரினச் சேர்க்கை தம்பதியரை முறையாக அங்கீகரிக்கவும், அவர்க ளுக்கு போதுமான பாதுகாப்புகளை வழங்கவும் சட்டமியற்றுதல். V    அனைத்து துறைகளிலும் பாலின-நடுநிலைக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுதல்.