articles

img

பாசிசத்தின் இந்திய வடிவம் - அ.அன்வர் உசேன்

இந்தியாவில் பாசிசத்தை எதிர்க்கும் எந்த ஒரு இயக்கமும் பாஜகவையும் அதன் வழிகாட்டியான  ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் சித்தாந்த/ அரசியல்/ பண்பாடு ரீதியாக அனைத்து தளங்களிலும் எதிர்க்க வேண்டிய சூழல் உள்ளது.

‘பாசிசம்’ தமிழ்நாட்டில் பரவலான பேசு பொருளாக மாறியுள்ளது. பாசிசம் பற்றி  பேசுபவர்கள் பல சமயங்களில் அதன் வரலாறு, அது உருவாக்கிய கொடூர சூழல்கள், அதனை எதிர்த்துப் போராடிய சக்திகள் மற்றும் அதன் புதிய வடிவங்கள் குறித்து அறியாமலே பேசுகின்றனர்.  பாசிசம் என்பது சர்வாதிகாரம் மட்டுமில்லை; அதை விட ஆபத்துகள் நிறைந்தது. இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். தனது பல துணை அமைப்புகள் மூலம் ஒரு பாசிச குணமுடைய சக்தியாக உள்ளது. பாசிச ஆபத்தை குறைத்து மதிப்பிடுவது பெரும் தீங்காய் முடியும்.

பாசிசம் என்றால் என்ன? 

பாசிசம் 20ம் நூற்றாண்டில், குறிப்பாக முதல் உலகப் போருக்கு பின்னால் உருவான கருத்தியல். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் வலுவிழந்தது. 20ம் நூற்றாண்டின் இறுதியில் தலைதூக்கி 21ம் நூற்றாண்டில் சவாலாக முன்வந்துள்ளது. அன்றைய பாசிசம் அப்படியே மீண்டும் மறுபிறவி எடுக்க வில்லை. எல்லா தேசங்களிலும் பாசிசம் ஒரே மாதிரி யாக இல்லை. மண்ணுக்கேற்ற வேறுபாடுகள் உள்ளன. எனினும் அன்றும் இன்றும் பாசிசத்திற்கும் சில பொதுவான குணாம்சங்கள் உள்ளன. பொது அம்சங்கள் எவை? வேறுபாடுகள் எவை? என்பதை உள்வாங்கிக் கொள்வது அவசியம்.  பொதுவாக இடதுசாரி அல்லாதவர்கள் பாசிசத்தின் மனிதகுல விரோத அம்சங்களை முன்வைத்து அதனை வரையறுக்கின்றனர். இந்த வரையறையில் உண்மைகள் உள்ளன. ஆனால் பாசிசத்தின் வர்க்க உள்ளடக்கத்தை இந்த வரையறை சுட்டுவது இல்லை. ஆனால் கம்யூனிஸ்டுகளின் வரையறை பாசி சத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் உள்ள தொ டர்பை தெளிவாக முன்வைக்கிறது.  20ஆம் நூற்றாண்டின் பாசிசம் குறித்து பல்கேரிய கம்யூனிஸ்ட் தலைவரும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் சிறந்த தலைவருமான தோழர் ஜார்கி டிமிட்ரோவ் அவர்களின் வரையறை மிகவும் துல்லியமான ஒன்றா கும். டிமிட்ரோவ் அவர்களின் வரையறை:  “நிதி மூலதனத்தின் கடைந்தெடுத்த பிற்போக்கு பிரிவின் பகிரங்க பயங்கரவாதம்தான் பாசிசம்.” பாசிசத்தின் தோற்றுவாய் முதலாளித்துவத்தின் நிதிமூலதனம்தான் என்பதை டிமிட்ரோவ் தெளிவாக்கு கிறார். மேலும் நிதிமூலதனத்தின் கடைந்தெடுத்த பிற்போக்கு பிரிவுதான் பாசிசம் என்பதை குறிப்பிடு கிறார். பாசிசம் ஒரு பயங்கரவாதம் என்பதையும். அது இரகசியமாக செயல்படுவது இல்லை; பகிரங்கமாகவே தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் என்பதையும் டிமிட்ரோவ் குறிப்பிடுகிறார். 

20ம் நூற்றாண்டின் பாசிசமும் அதை வீழ்த்திய சோவியத் ஒன்றியமும்

பாசிசம் எனும் சொல் fascio அல்லது fascimo எனும் சொற்களிலிருந்து உருவானது. அதிகாரப்பூர்வ மாக பாசிச இயக்கம் உருவானது 1919ம் ஆண்டு மார்ச்  23ம் தேதி. அன்றுதான் இத்தாலியில் முசோலினி சுமார் 100 பேர் கொண்ட கூட்டத்தை நடத்தி பாசிச இயக்கத்தை பிரகடப்படுத்தினார். அதன் உடனடிக்  கடமை, சோசலிசத்தை அழிப்பது என முன்வைக் கப்பட்டது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல ஐரோப்பிய தேசங்களில் பாசிச இயக்கங்கள் தோன்றின. எனினும் இத்தாலியில் முசோலினி தலை மையில் உருவானதும் ஜெர்மனியில் ஹிட்லர் தலை மையில் உருவானதும் முக்கிய பாசிச இயக்கங்கள் ஆகும். ஜெர்மானிய பாசிசத்திற்கு, ‘நாஜிசம்’ எனவும் பெயர் உண்டு.  ஜெர்மனி-இத்தாலி-ஜப்பான் பாசிசக் கூட்டணி உலகை இரண்டாம் மகா யுத்தத்தில் தள்ளியது. 1939ம் ஆண்டு முதல் 1945 வரை 6 ஆண்டுகள் நடந்த  இந்த போர் ‘பாசிச எதிர்ப்பு போர்’ என்றும் அழைக்கப் படுகிறது. இந்த போரில் உலகம் முழுதும் சுமார் 6 கோடிப் பேர் கொல்லப்பட்டனர். சோவியத் யூனியன் மட்டும் 97.50 இலட்சம் வீரர்களையும் 1.32 கோடி மக்க ளையும் இழந்தது. ஒப்பீடு செய்தால், பிரான்ஸ்-5 இலட்சம்/இங்கிலாந்து 4.5 இலட்சம்/ அமெ ரிக்கா-4.18 இலட்சம் மட்டுமே இழப்பு. மேலும் 1700 நகரங்கள்/30,000 ஆலைகள்/61,600 கி.மீ. ரயில் பாதை/84,000 பள்ளிகள்/ 43,000 நூலகங்கள்/70 லட்சம் குதிரைகள்/370 இலட்சம் இதர கால்நடைகள் ஆகியவற்றையும் சோவியத் யூனியன் இழந்தது.  பாசிசத்தை தோற்கடிக்க இவ்வளவு இழப்புகளை சந்தித்து ஏன் சோவியத் யூனியன் போராடியது?  ஏனெனில் பாசிசம் அவ்வளவு கொடூரமானது. கம்யூ னிஸ்டுகள்/ சோசலிஸ்டுகள்/ தொழிற்சங்கவாதிகள் ஹிட்லர் ஆணையின்படி சுட்டுக்கொல்லப்பட்டனர் அல்லது சிறைபடுத்தப்பட்டனர். ஜெர்மானிய ஆரிய இனம்தான் உலகின் உயர்ந்த இனம் என கட்ட மைக்கப்பட்டு யூதர்கள் எதிரிகளாக சித்தரிக்கப் பட்டனர். யூதர்களுக்கு குடியுரிமையும் சொத்து உரி மையும் சட்டம் மூலமாகவே மறுக்கப்பட்டது. யூதர்கள்  தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள மஞ்சள் சட்டை  அணிய ஆணை பிறப்பிக்கப்பட்டது. யூதர்கள் கெட்டோஸ் எனப்படும் தனிப்பகுதியில் வசிக்க ஆணையிடப்பட்டது.11 இலட்சம் குழந்தைகள் உட்பட 1.10 கோடி பேர் “விஷவாயு கொலைக் களத்தில்” (Gas Chamber) கொல்லப்பட்டனர். இவர்களில் 60 இலட்சம் பேர் யூதர்கள். ஏனையோர் ஜிப்ஸி/ஜெஹோ வா பிரிவை சேர்ந்த கிறித்துவர்கள்/ தன்பாலினத்தவர்/ கம்யூனிஸ்டுகள்/ தொழிற்சங்கவாதிகள்/ சோவியத் போர் கைதிகள்/ உடல்நலம் குன்றியவர்கள். இதை போலவே இத்தாலி பாசிசம் ஆப்பிரிக்கா, அரேபியா மக்களையும் ஜப்பான் பாசிசம் சீனா, கொரிய மக்களையும் கொடுமைப்படுத்தியது.

பாசிசத்தின்  பொதுவான அம்சங்கள் 

தற்கால பாசிசம் 1990களில் தலை தூக்கினாலும் 2008ம் ஆண்டு பொருளாதார நெருக்கடிகளுக்கு பிறகு தான் தீவிரம் அடைந்தது. உலகமெங்கும் பாசிசம் சில பொதுவான அம்சங்களைக் கொண்டுள்ளது. அவை: Y தொழிற்சங்கங்களையும் சோசலிச சக்திகளையும் மாற்றுக் கருத்துகளையும் ஒழிக்க அனைத்து  சூழ்ச்சி களையும் செய்தல். Y தன் இனம் பரிசுத்தமானது எனவும் தன் இனப் பிரிவு பெரும்பான்மையாக இருப்பதால் ஏனை யோரை அடிபணிய வைக்க முழு அதிகாரமும் உரி மையும் தனக்கு உள்ளது எனவும் கருத்தாக் கத்தைக் கட்டமைத்தல்.  Y தனது சமூகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டது எனவும் அந்த அநீதியை போக்க எத்தகைய வன்முறையில் ஈடுபடுவதும் நியாயம்தான் எனவும் கருத்தாக்கம் உருவாக்குதல். Y கடந்த கால பிரமைகளை உருவாக்கி கற்பனை எதிரியை கட்டமைத்தல்  Y அரசு சட்டப்பூர்வமாக அடக்குமுறையை ஏவும் அதே வேளையில் அரசு சாராத சில குழுக்கள் மூலம் தன்னை எதிர்ப்பவர்கள் மீது வன்முறை ஏவுதல்.  Y தன் இனப்பிரிவை பாதுகாக்கும் கடமைதான் மிகப் பெரியது. வேறு எந்த உரிமையும் பிரச்சனையும்  முக்கியமானது அல்ல என கருத்தாக்கம் உரு வாக்குதல். Y சமூகம் கடும் நெருக்கடியில் இருப்பதால் அதிரடி தீர்வுகள் தேவை என கருத்தாக்கம் உருவாக்குதல். Y அதீத தேசியவாதம்.  Y சிறிது உண்மையும் நிறைய பொய்யும் கலந்த பிரச்சாரம்  Y சகல அதிகாரங்கள் கொண்ட தலைவனை உரு வாக்குதல். அந்த தலைவனை  துதிபாடுதல். Y தனியார் பெரு நிறுவனங்களையும் நிதிமூல தனத்தையும் ஆதரித்தல். Y பாலின சமத்துவத்தை மறுத்தல்.

இந்திய பாசிசம்

மேற்கண்ட பாசிசத்தின் பொதுவான அம்சங்கள் கிட்டத்தட்ட அனைத்தையும்ம் இன்று இந்தியாவிலும் நாம் பார்க்கிறோம். இந்தியாவை பொறுத்தவரை ஆர். எஸ்.எஸ். அமைப்புதான் பாசிச குணமுடைய அமைப் பாக உருவெடுத்துள்ளது. இந்து ராஜ்ஜியம் அமைப் பது எனும் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நிரலும் அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்துத்துவா எனும் கருத்தியலும் பாசிச சூழல்களை இந்தியாவில் உரு வாக்கியுள்ளது. மேற்கண்ட பொதுவான அம்சங்க ளுடன் பாசிசத்தின் இந்திய வடிவம் சில குறிப்பான அம்சங்களையும் பெற்றுள்ளது. ஜெர்மனியில் இன தேசிய வாதம் முன்வைக் கப்பட்டது; இங்கு மத தேசியவாதம் முன்வைக்கப்படு கிறது. ஜெர்மானியர்களுக்கு யூதர்கள் எதிரிகளாக முவைக்கப்பட்டனர்; இந்துக்களுக்கு முஸ்லிம் களும் கிறித்துவர்களும் எதிரிகள் என முன்வைக்கப் படுகின்றனர்.  அங்கு பல தேசிய இனங்கள் ஒரே தேசத்தில் இல்லை; இந்தியாவில் பல தேசிய இனங்கள்  உள்ளன. இவற்றின் தனி தன்மைகளை பாசிசம் மறுக்கிறது. ஐரோப்பாவில் சாதிய படிமங்கள் இல்லை; இந்தியா வில் உள்ள சாதிய படிமங்களை இந்திய பாசிசம் நிலை நிறுத்த முயல்கிறது. 

ஏன் பாசிசம்  மக்களின் ஆதரவை பெறுகிறது?

பாசிசத்தின் மோசமான கொடூரங்கள் அறிந்த பின்னரும் ஏன் மக்கள் அத்தகைய சக்திகளை ஆத ரிக்கின்றனர் என்பது மிகப்பெரிய சவாலான கேள்வி ஆகும். இந்தியாவின் கடந்தகால மத வரலாறும் தேசம் சந்தித்த பிரிவினையும் இந்துத்துவா கருத்தி யல் உருவாக்கப்படுவதில் பெரும் பங்கை வகித்தன. எனினும் அது மட்டுமே முழு காரணமாக இல்லை. 1980 வரை மக்களின் பரவலான ஆதரவை இந்துத்துவா பெற இயலவில்லை. ஆனால் அதற்கு பிறகு குறிப்பாக 1990களில் பாசிச சக்திகள் மக்கள் ஆதரவை பெறு வது அதிகரித்தது. இந்திய முதலாளித்துவத்தின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் விடுதலைக்கு பின்பு தொடக் கத்தில் மக்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியது. புதிய தொழில்கள், குறிப்பாக பொதுத்துறைகள் தொ டங்கப்பட்டன. நவீன கல்வி போதிக்கப்பட்டது. விவசா யத்திலும் பல அறிவியல் முன்னேற்றங்கள் அறிமுகப் படுத்தப்பட்டன. இவை மக்களின் ஆதரவை பெற்றன. எனினும் இந்த திட்டங்கள் மக்களின் முன்னேற்றத்தை விட பெரு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுகளுக்கு ஆதரவாகவே அமைந்தன. இந்த வளர்ச்சிப் பாதை பல முரண்பாடுகளை ஏற்படுத்தியது. 1980களில் இத்த கைய வளர்ச்சியின் மீது மக்கள் அதிருப்தி கொள்ள தொடங்கினர். இந்த முரண்பாடுகளிலிருந்து வெளிவர இந்திய முதலாளித்துவம் நவீன தாராளமய பொரு ளாதார கொள்கைகளை அமலாக்க தொடங்கியது. இவை மக்களிடையே மேலும் அதிருப்தியை தோற்று வித்தது. 

இந்தியாவின் குறிப்பான மத சூழல்கள் உரு வாக்கிய முரண்பாடுகள் மூலம் இந்த சக்திகள் ஒரு வலுவான இந்துத்துவா வாக்கு வங்கியை உரு வாக்கினர். எந்த பொருளாதார கொள்கைகள் அதிருப்தியை தோற்றுவித்ததோ அதே பொருளாதார கொள்கைகளை இன்னும் தீவிரமாக இந்த சக்திகள் அமலாக்குகின்றனர். பொருளாதார சூழல்கள் மக்களிடம் உருவாக்கிய அதிருப்தியை மத அடிப்ப டையில் திசை திருப்புவதில் பாசிச சக்திகள் வெற்றி பெற்றன. இந்த காலகட்டத்தில் இடதுசாரி அரசிய லுக்கு ஏற்பட்ட பின்னடைவும் ஒரு முக்கிய காரணம். இந்தியாவின் பாசிச வடிவமென்பது இந்துதுவா மத வாதமும் வலதுசாரி பொருளாதாரக் கொள்கைகளும் ஒன்றிணைந்ததாக உள்ளது. இந்தியாவில் பாசிசத்தை எதிர்க்கும் எந்த ஒரு இயக்கமும் பா.ஜ.க.வையும் அதன் வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் சித்தாந்த/ அரசியல்/ பண்பாடு ரீதியாக அனைத்து தளங்களிலும் எதிர்க்க வேண்டிய சூழல் உள்ளது. தமது அரசியல் தேவைக் காக பாசிச எதிர்ப்பை கொச்சைப்படுத்துவதோ அல்லது எவ்வித அடிப்படையும் இல்லாமல் தனது உடனடி எதிரிகளை பாசிச சக்திகளாக வரையறுப்ப தோ உண்மையான பாசிச சக்திகளுக்கு எதிரான போராட்டத்தை பலவீனப்படுத்தவே உதவும்.  தமிழ்நாட்டில் பாசிச சக்திகள் வலுவாக காலூன்ற முடியவில்லை. எனினும் அத்தகைய சக்திகள் மிக நுணுக்கமாக, பரவலாக செயல்படுகின்றன. தமிழ் நாட்டில் அத்தகைய சக்திகளை குறைத்து மதிப்பிடு வது ஆபத்தாகவே முடியும்.