articles

img

உழைப்பாளி மக்களை தலைநிமிர வைத்த செங்கொடி இயக்கம் -ஐ.வி.நாகராஜன்

தஞ்சை மாவட்ட அரசியல் வர லாற்றில் செங்கொடி இயக்கத்தின் வரலாறு அளப் பரியது. கம்யூனிஸ்ட் இயக்கம் அள விற்கு தியாகம் செய்த இயக்கம் வேறெதுவும் இருக்க முடியாது. உழைப்பாளி மக்களை பாது காப்பதற்காக உயிரை பணயம் வைத்தும் செயல்பட்ட ஒரே இயக்கம் செங்கொடி இயக்கம்.

காவிரி டெல்டாவின் மகத்துவம்

இந்தியா முழுமைக்குமான உணவு தேவையில் காவிரி டெல்டா மாவட்டத்தின் முக்கியத்துவத்தை உணராதவர்கள் யாரும் இருக்க முடியாது. காவிரி டெல்டா பகுதி யில் நில உடமையாளர்களின் ஆதிக்கத்தை தகர்த்து சிறு குறு விவ சாயிகள் மற்றும் எளிய மக்களை வாழ வைத்ததில் கம்யூனிஸ்ட்க ளுக்கு பெரும் பங்கு உண்டு.

உழைப்பாளர்களின் விடுதலைப் போர்

காவிரி படுகையின் உணவு உற் பத்தியில் காலம் காலமாக உழைத்துக்கொண்டிருக்கும் விவசாயத் தொழிலாளர்களின் நிலை யையும் நிலமற்ற விவசாயிகளின் குத்தகை முறைகளையும் சரியாக புரிந்துகொண்டு அவர்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி யது செங்கொடி இயக்கம். இவர்கள் மீதான நிலப் பிரபுக்களின் உழை ப்புச் சுரண்டலை ஆழமாக புரிந்து கொண்டு செயல்பட்டவர்கள் கம்யூ னிஸ்ட்டுகளே.

ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சி

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத் தில் நிலப்பிரபுத்துவ ஒடுக்கு முறையை எதிர்த்தும், தீண்டாமைக் கொடுமைகளை ஒழித்திடவும் கம்யூனிஸ்ட் கட்சி வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தியது.

மக்கள் ஜனநாயகப் புரட்சியின் வீரர்கள்

1964-இல் இந்தியாவில் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் பாதையே வெல்லும் என்ற கொள்கை முடி வோடு அதன் திசைவழியை நோக்கி தஞ்சை மாவட்டத்தில் பல தலைவர்கள் அரும்பாடுபட்டனர். கே.ஆர்.ஞானசம்பந்தம், பி.எஸ்.தனுஷ்கோடி, கோ.பாரதிமோகன், கோ.வீரய்யன், தலைஞாயிறு எஸ்.வடிவேல், நாகூர் ஆர்.முருகையா, எஸ்.கணேசன் உள்ளிட்ட தலை வர்கள் கிராமம் கிராமமாக சென்று மக்கள் ஜனநாயக புரட்சி பாதை யின் கொள்கை விளக்கத்தை எடுத்துக்கூறினர்.

இயக்கத்தின் தளபதிகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யையும், வர்க்க வெகுஜன அமைப்பு களையும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் வளர்த்தெடுத்த தலைவர்கள்: எம்.துரைசாமி, என்.செல்லமுத்து, என்.கோவிந்தராஜ், வீ.மீனாட்சிசுந்தரம், எஸ்.பரமசிவம், மன்னை ஏ.நடராஜன் போன்றோர் இயக்கத்தை வலுப்படுத்தினர்.

மென்மையான  பாதை அல்ல

தஞ்சையில் மாவட்ட பொறுப்பு செயலாளராக மன்னை என்.நடராஜன், கே.ஆர்.ஞானசம்பந்தம், மாவட்ட பொறுப்பு செயலாளராக எம்.துரைசாமி அதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர்களாக தோழர் கோ.வீரய்யன், கோ.பாரதிமோகன், வி.தம்புசாமி, என்.செல்லமுத்து, என்.கோவிந்தராஜ், சிறிது காலம் பொறுப்பு செயலாளராக என்.மணி யன், அதனை தொடர்ந்து ஐ.வி. நாகராஜன், ஜி.சுந்தரமூர்த்தி ஆகி யோர் மாவட்ட செயலாளர்களாக பணியாற்றியுள்ளனர். ஏற்றுக் கொண்ட கம்யூனிச கொள்கையில் தடம்புரளாமல் கட்சியை சிறப்பாக வழிநடத்திய மாலுமிகளாகவும் சுய நலம் கருதாமல் பொதுநலத்தோடு கட்சி தோழர்களையும், ஊழியர்க ளையும் அரவணைத்து வழி நடத்தினர்.

தஞ்சை தரணியில் செங்கொடி இயக்கத்தை வளர்த்தெடுக்க தலைமறைவு, சிறைக்கொடுமை கள், துப்பாக்கிச் சூடு, காவல் துறையின் அடக்குமுறை, வழக்கு கள் என துன்ப துயரங்களும், தீரமும் நிறைந்த வீர வரலாறு இது. கட்சி யின் மாநாடுகளும் அதில் தேர்ந்தெ டுக்கப்பட்ட மாவட்டக் குழு செயலா ளர்களும் கடந்து வந்த பாதை கம்ப ளம் விரித்து பூக்கள் தூவப்பட்ட மென்மையான பாதையல்ல.

தற்கால முன்னேற்றம்

டிசம்பர் 6, 7, 8 ஆகிய தேதிக ளில் திருவாரூர் மாவட்ட 24-வது மாநாடு நன்னிலம் ஒன்றியம் கொல்லுமாங்குடியில் நடைபெறு கிறது. மாவட்ட மக்களின் பெரும் பான்மையான கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆக்கப்பூர்வமான முறையில் தீர்மானங்களை நிறைவேற்றி அதற்கான போராட்ட வடிவங்களை தீர்மானிக்கப்போகும் இம்மாநாடு வெற்றி பெறட்டும்.

ஐ.வி.நாகராஜன்
மாநிலக் குழு உறுப்பினர், சிபிஐ(எம்)