articles

img

நம் நாடு நீதி கோருபவர்களுக்கு நீதி மறுக்கும் நாடாக மாறிக் கொண்டிருக்கிறது

நீதி கோருபவர்களுக்கு நீதி மறுக்கப்படும் நாடாக நம் நாடு மாறிக்  கொண்டிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.ஏ.ரஹீம் கூறினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடை பெற்று வருகிறது.  குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அன்று ஏ.ஏ. ரஹீம் பேசியதாவது:

4 பெண்களுக்கு சமர்ப்பணம்

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான என்னுடைய உரையை பெண்ணாகிய குடியரசுத் தலைவருக்கும் மற்றும் நான்கு பெண்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன். முதலாவதான பெண்மணி, கொல்லப்பட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலை சம்பவத்தில் பலியான ஈசான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரியாவார்.

ஜாகியா ஜாஃப்ரி இறக்கும் வரையிலும் தன் கணவர் மற்றும் கொல்லப் பட்ட முஸ்லிம் மக்களுக்காக நீதி கோரி போராடி வந்தவராவார். இரண்டாவதாகவும் மூன்றாவதாகவும் அர்ப்பணிக்க விரும்பும் பெண்கள் என்பவர்கள் மணிப்பூர் மாநிலத்தில் நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட பெண்களுக்காகும்.

நான்காவ தாக அர்ப்பணம் செய்ய விரும்புவது, நேற்றைய தினம் அயோத்தியில் மிகவும் குரூரமான முறையில் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு, வாய்க்காலில் தூக்கி எறியப்பட்ட தலித் பெண்மணிக்காகும். 

எத்தனை காலம்  கூனிக் குறுகிக் கொண்டிருப்பது

இவ்வாறு நம் நாடு நீதி கோரி வருபவர்களுக்கு நீதி மறுக்கும் ஒரு நாடாக  மாறி இருக்கிறது. நம் நாடு இப்போது புல்டோசர் ராஜ்ஜியத்தில் உயிர்களைப் பலி கொடுப்பவர்கள் நாடாக மாறியிருக்கிறது. சிறுபான்மையினர் அமைதியுடன் வாழ முடியாத ஒரு நாடாக மாறி இருக்கிறது.

இன்னும் எத்தனை காலம்தான்  மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக ஊர் வலமாக இழுத்துச் செல்லப்பட்டதற்காக உலகத்தின் முன் நாம் கூனிக்குறுகி நின்று கொண்டிருக்கப் போகிறோம்?   இது தொடர்பாக நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் தற்போதைய நிலை என்ன? அவ்வாறு கொடூரமான செயலைச் செய்தவர்களுக்கு எதிராக நீதியை உத்தரவாதம் செய்திட அரசாங்கம்  ஏதேனும் செய்திருக்கிறதா? நான் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்: இந்த நாடு நீதி கோரி வருபவர்களுக்கு நீதியை மறுக்கும் ஒரு நாடாக மாறி இருக்கிறது.

ஏன் மணிப்பூர் போகவில்லை

தில்லியில் தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், பிரதமர்  மோடி கும்பமேளாவில் குளித்துக் கொண்டிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் பிரதமர் ஏன் மணிப்பூருக்குப் போகவில்லை? கும்பமேளாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை கணக்கே இல்லை.

தரவுகள் இல்லாத நிலை...

இதேபோன்றே மணிப்பூர் கலவரங் பளில் இறந்தவர்களின் எண்ணிக்கைக்குக் கணக்கே இல்லை. இது தொடர்பாக தரவுகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாடாளுமன்றத்திலேயேகூட முக்கியமான தரவுகள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. நாடாளுமன்றத்தில் கிறித்தவ தேவாலயங்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஒரு கேள்வி கேட்டிருந்தேன். அதற்கு எனக்குக் கிடைத்த பதில் என்பது ஒன்றிய அரசாங்கத்திடம் இது தொடர்பாக தரவு எதுவும் இல்லை என்பதேயாகும்.

அட்டூழியங்களை  ஆதரிக்கும்

அரசு முஸ்லிம்கள், கிறித்தவர்கள், தலித்துகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக, அரசாங்கம் இவ்வாறு அட்டூழியம் செய்பவர்களை ஆதரித்துக் கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேசம் சம்பலில் கலவரங்களைத் தூண்டும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக உச்சநீதிமன்றம் தலையிட வேண்டியிருந்தது.

இவ்வாறு நாடு முழுவதும் கலவரங் களும் பாதுகாப்பின்மையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்குமானால், நாடு பொருளாதார ரீதியாக எப்படி முன்னேற முடியும்? பொருளாதார ஆய்வறிக்கை, நாட்டின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து வீழ்ந்துகொண்டிருக்கிறது என்றே கூறியிருக்கிறது. அரசாங்கம் கல வரங்கள் மற்றும் வன்முறை வெறி யாட்டங்களைத் தூண்டிவிடுவதற்குப் பதிலாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

கவலைப்படாத அரசு குடியரசுத்

தலைவர் உரை வெற்று வாக்குறுதிகள் நிரம்பிய ஒன்றேயாகும். விலைவாசி உயர்வு குறித்து இதில் குறிப்பிடப்படவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து இதில் குறிப்பிடப்பட வில்லை. நாட்டில் ஏற்றத்தாழ்வு அதிகரித்துக் கொண்டிருப்பது குறித்து இது கவலைப்படவில்லை. காலநிலை மாற்றம் குறித்தோ அல்லது அதை எதிர்த்துப் போராடு வதற்கான எந்தவொரு திட்டம் குறித்தோ எதுவும் இதில் குறிப்பிடப்படவில்லை.

நம் இளைஞர்களுக்கு நிரந்தரமான வேலைகள் தேவை. கண்ணியத்துடனான சம்பளம் தேவை. நாட்டு மக்கள் விஷம்போல் ஏறிக்கொண்டிருக்கும் விலை வாசி உயர்வினாலும், வேலையில்லாத் திண்டாட்டத்தாலும், அதிகரித்துக் கொண்டிருக்கும் ஏற்றத்தாழ்வினாலும் கடுமையாக அவதிப்பட்டுக் கொண்டி ருக்கிறார்கள். ஆயினும்இந்தஅரசாங்கம் எதைப்பற்றியும் கவலைப்படாமலிருக்கிறது.

 இவ்வாறு ஏ.ஏ. ரஹீம் பேசினார்.