articles

img

பாஜகவின் மோசடியும்... சிபிஎம்-மின் பதிலடியும்..!

பாஜகவின் மோசடியும்... சிபிஎம்-மின் பதிலடியும்..!

விழிஞ்ஞம் துறைமுகத்தை பெரும்பகுதி தனது சொந்த நிதியிலிருந்தே கேரள அரசு உருவாக்கியுள்ள நிலையில், ஏதோ ஒன்றிய அரசின் திட்டம் போல பாஜக-வினர் பித்தலாட்ட விளம்பரங்களை செய்யத் துவங்கினர்.  இதையடுத்து, களத்தில் இறங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், மாநிலம் முழுவதும் விளம்பரத் தட்டிகளை வைத்து, பாஜக-வின் மோசடியை அம்பலப்படுத்தினர். திட்டத்தின் முதற்கட்ட செலவான ரூ. 8867 கோடியில் கேரள அரசு ரூ. 5595 கோடி செலவு செய்கிறது, இது மொத்த செலவில் 62 சதவிகிதம் ஆகும். அதானி விழிஞ்ஞம் துறைமுக நிறுவனம் ரூ. 2497 கோடியை அளிக்கிறது. இது திட்ட செலவில் 29 சதவிகிதம். ஒன்றிய பாஜக அரசோ, ரூ. 817 கோடியை (9 சதவிகிதம்) திருப்பிச் செலுத்தும் வகையிலான கடனாக (Viability Grant Fund) மட்டுமே கேரள அரசுக்கு வழங்குகிறது. மற்றபடி விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு மோடி அரசின் பங்கு என்றால் ஒரு ரூபாய் கூட இல்லை. பூஜ்யம் தான். இந்த உண்மையை கேரளம் முழுவதும் விளம்பரம் செய்து, பாஜகவினருக்கு தக்க பதிலடியைக் கொடுத்தனர்.