மோடி அரசின் செயலை விமர்சித்ததால் ஆனந்த விகடன் இணையதளம் முடக்கம்
‘கருத்துச் சுதந்திரத்திற்காக களத்தில் நிற்போம்’
அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகத்தால் இந்தியர்கள் கைவிலங்கு பூட்டப்பட்டு சங்கிலியால் பிணைக்கப்பட்டு தொடர்ந்து நாடு கடத்தப்பட்டு வரும் கொடிய செயல், நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பாஜக கூட்டணி அரசு அதை கைகட்டி மவுனமாக வேடிக்கை பார்ப்பது மட்டுமல்ல; பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் வேளையிலேயே இந்தியர்களுக்கு இத்தகைய அவமானம் இழைக்கப்பட்டிருப்பது கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதை விமர்சிக்கும் விதமாக நாடு முழுவதும் உள்ள சுதந்திர ஊடகங்கள் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஆனந்த விகடன் ஏடு, தன்னை சந்திக்க வந்த பிரதமர் நரேந்திர மோடியின் கைகளை சங்கிலியால் பூட்டி, அமரவைத்து அவருடன் டிரம்ப் பேசிக் கொண்டிருப்பது போல விமர்சன கருத்துப்படம் வெளியிட்டது. இது இந்திய மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் படமாகும். ஆனால் உண்மையை நையாண்டியாக வெளியிட்ட ஆனந்த விகடனின் கருத்துப்படத்தால், பாஜக கூட்டம் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளது. இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒன்றிய அரசுக்கு புகார் கடிதம் எழுதிய நிலையில், ஆனந்த விகடன் இணைய தளம் முடக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கருத்துச் சுதந்திரத்தின் மீது பாஜக கூட்டணி அரசு நடத்தியுள்ள கொடூர தாக்குதல் என்ற கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
மோடி அரசின் எதேச்சதிகாரம் : சிபிஎம் கடும் கண்டனம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அமெரிக்காவில் ‘சட்டவிரோதமாக குடி யேறியவர்கள்’ என்று பெயர் சூட்டி இந்திய குடிமக்களின் கைகளில் விலங்கு பூட்டியும் சங்கிலியால் பிணைத்தும் போர்க் குற்றவாளிகளைப் போல ராணுவ விமான த்தில் தொடர்ச்சியாக நாடு கடத்திக் கொண்டிருக்கிறது அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம். பிரதமர் மோடி அமெரிக்காவில் இருக்கும் போதே இந்த அநியாயம் அரங்கேறுகிறது. இவ்வாறு இந்தியக் குடிமக்களை அவமதிப்பதற்கு குறைந்த பட்ச எதிர்ப்பைக் கூட அங்கு சென்ற மோடியினால் தெரிவிக்க முடிய வில்லை. மாறாக, இவ்வாறு அனுப்பப்படு பவர்களை ஏற்றுக் கொள்ளத் தயார் என்று மறைமுகமாக, இந்த காட்டுமிராண்டி த்தனமான நாடு கடத்தலுக்கு ஒப்புதல் வழங்குகிறார் பிரதமர் மோடி. ஆனந்தவிகடன் மீது ஆத்திரம் இந்திய குடிமக்களை இவ்வாறு அநா கரிகமாக நடத்துவதைக் கண்டித்தும், பிரதமர் மோடியை விமர்சித்தும் ஆனந்த விகடன் இணைய ஏடு கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் ஆத்திர மடைந்த ஒன்றிய அரசு ஆனந்தவிகடன் இணையத்தையே முடக்கி தன்னுடைய எதேச்சதிகாரப் போக்கை வெளிப்படுத்தி யுள்ளது.
வேட்டையாடப்படும் ஊடகங்கள்
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததி லிருந்தே பொய்யாக தன்னுடைய பிம்பத்தை ஊதி பெரிதாக்கிக் காட்டு வதில் ஈடுபட்டுள்ளார். பெரும்பாலான ஊட கங்களை இதற்காக ஒன்றிய அரசு வளைத்துப் போட்டுள்ளது. சமூக ஊட கங்களையும் கூட தன்னுடைய கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர முயல்கிறது. நியூஸ் க்ளிக் ஏடு ஒன்றிய அரசினால் வேட்டையாடப்பட்டது. 2024ல் ஊடக சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 180 நாடு களில் 159 இடத்திற்கு சரிந்துள்ளது. இந்தியா வில் ஊடக சுதந்திர வெளி கொஞ்சம் கொஞ்சமாக சுருக்கப்பட்டு வருகிறது. டிரம்ப் நிர்வாகத்திடம் அடிபணிந்து ஒப்பந்தம் என்ற பெயரில் நீட்டிய இடத்தி லெல்லாம் கையெழுத்து போடுகிறார் பிரதமர் மோடி. அமெரிக்க மதுபானத்திற் கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. அடுத்து அமெரிக்க அணு உலைகளை இந்தியாவில் நிறுவவும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் சொந்த நாட்டு மக்க ளின் சுயமரியாதையைப் பாதுகாக்க வக்கில்லாத பிரதமர் மோடியின் நிர்வாகம் தமது ஆட்சி மீதான விமர்சனங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முயல்வதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ஊடக சுதந்தி ரத்திற்கு எதிரான ஒன்றிய அரசின் அராஜக நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதுடன் இதற்கு எதிராக அனைத்து பகுதி மக்களும் குரலெழுப்ப வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது
விகடன் குழுமம் உறுதி
முன்னணி தமிழ் வார இதழான விகடன் குழுமத்தின் இணையதளம் ஒன்றிய பாஜக அரசால் முடக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. பல இடங்களில் இணையதளத்தை பயன்படுத்த முடியவில்லை என வாசகர்கள் புகார் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள விகடன் குழுமம், விகடன் இணைய இதழில் பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் குறித்து கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டதையும், அதற்கு எதிராக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒன்றிய அரசுக்கு புகார் கடிதம் எழுதியதையும் சுட்டிக் காட்டியுள்ளது. எனினும், அரசுத் தரப்பில் இதுவரை விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக எந்த அறிவிப்பும் வரவில்லை என்றும் அக்குழுமம் விளக்கம் அளித்துள்ளது. நூற்றாண்டு காலமாக கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், ஒருவேளை கேலிச்சித்திரம் காரணமாக ஒன்றிய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால் அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் விகடன் குழுமம் கூறியுள்ளது.
பாஜகவின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு : முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “இதழியலில் நூறாண்டு காலமாக
இயங்கி வரும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கருத்துகளுக் காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல! பாஜகவின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு. முடக்கப்பட்ட இணையதளத்துக்கு உடனடி அனுமதி வழங்க வேண்டும்” என கூறியுள்ளார்.