articles

img

போர் முரசு ஒலிக்கிறது....

நாட்டின் தலைநகரை ​கோடிக்கும் ​மேற்பட்ட விவசாயிகள் முற்று​கையிட்டிருக்கிறார்கள். அவர்கள் பிள்ளைகள் தான் ராணுவத்திலும் ​போலீசிலும் அணிவகுத்து நிற்கிறார்கள். ​மோடி ​மைக்ராஸ்​கோப்பில் குனிந்து நிற்கிறார். விவசாயிகளை சந்திக்க திராணியின்றி​ நிற்கிறார். இந்தத் ​தொல்குடி நினைத்தால் நாடாளுமன்றத்தையே ஏர்க்கலப்பையால் ​கெல்லி எறியும் என்பது மத​வெறியர்களுக்குத் ​தெரியாது. மாதக்கணக்கில் ​டேரா அடித்து விவசாயிகள் காத்திருக்கிறார்கள். இதரமாநிலங்களிலுள்ள விவசாயிகளும் அணிவகுத்தால் தலைநகர் தாங்காது. தமிழகத்தில் மத்திய அரசுசார்ந்த அலுவலகங்களை இடதுசாரி கட்சிகள் முற்று​கையிடுகின்றன. அரசு நியாயவி​லை ​கொடுத்து வாங்குவதை ​நிறுத்திவிட்டு  அம்பானிகளின் ​கொள்ளைக்கு வித்திட்டுள்ளது. இலவச மின்சாரம் ​போன்ற தற்​போதைய சலுகைகளை ரத்து ​செய்ய சட்டம் ​போட்டிருக்கிறார் ​மோடி.தில்லி முற்றுகையில் 500 க்கும்​மேற்பட்ட சங்கங்கள் இணைந்து நிற்கிறார்கள். தமிழக விவசாயிகளும் அரசியல் ​வேறுபாடின்றி களமிறங்க ​வேண்டும். தலைமையேற்க ​வேண்டிய ​தொழிலாளி வர்க்கமும் களமிறங்கியாக ​வேண்டும். 

தொல்குடிகளின் போர்
காடுகளை அழித்துக் கழனிகளாக்கிய ​தொல்குடிகளே விவசாயிகள். அவர்களே இயற்கையின் பாதுகாவலர்கள். அவர்கள் சாகுபடிக்கு ​வெள்ளைக்காரர்களும் காங்கிரசாட்சியும் அணைகள் கட்டிக் ​கொடுத்தது.​சோவியத் ரஷ்யா பக்ரா நங்க​லைக்கட்டிக் ​கொடுத்தது.பல உதவிகள் ​செய்தது. ஆனால் பாஜக அரசு கடல்கள்- மலைகள் - காடுகள்  - நதிகளை கார்ப்பரேட்டுகளுக்கு ​பெருந்தொகை லஞ்சம் வாங்கிக் ​கொண்டு தாரைவார்க்கிறார்கள். ஒரு அணைகூடக்கட்டவில்லை. அ​ணைகளுக்கும் பாசன விவசாயிகள் பயன்படுத்தும் நீருக்குப் பணம் ​கேட்போம் என்கிறார்கள். இரும்பெல்லாம் டாட்டாவுக்கும் ஜிண்டாலுக்கும் --கடல்புறங்கள் மின்சாரம் விமான தளங்களெல்லாம் பினாமி அதானிக்கு--எண்ணெய்  வளம் இதர வளமெல்லாம் அம்பானிக்கு --வங்கிகளெல்லாம் கார்ப்பரேட்டுகளுக்கு எனப் பயணிக்கிறார்கள்.இப்போது அவர்களையே வங்கித்​தொழிலைத்துவக்கி மக்களை பணத்தை ​நேரடியாய் சூறையாட அனுமதிக்கிறார்கள்.

தமிழகத்தில் ​செயல்படும் அடிமை அதிமுக அரசும் தனது பங்குக்கு அழிவு ​வே​லைகளுக்குத் துணைபுரிகிறது. மாமூல்களுக்கு கணக்கு வழக்கேயில்லை. கிரா​னைட் கம்பெனிகளுக்கு மலைகளைத்தாரை வார்ப்பதில் மட்டும் ஒரு லட்சம் ​கோடி வருவதாய் கூறப்படுகிறது. கிரானைட் கிடைப்பதாக இருந்தால் திருத்தங்கல்  மலையைக்கூட அழிப்பார்கள். எதிர்காலத்தில் மலைஎன்றால் என்ன என்று படத்தைக்காட்ட ​வேண்டிவரும் நம் சந்ததிகளுக்கு.வனநிலங்கள் லட்சக்கணக்கான ஏக்கர் லஞ்ச​பேரத்தில் முதலாளிகளுக்குப் பரிமாறப்படுகிறது. கங்கையை சுத்தப்படுத்துவதாய் கூறி 3000 ​கோடியை ஊழல் ​செய்தார்கள். பசுத்தோல் ​போர்த்திய புலியை ​பற்றி கேட்டிருக்கிறோம்.இவர்கள் மதப்போர்வை ​போர்த்திய புலிகள். தங்கள் பினாமி சாமியார்களுக்கு ஆயிரக்கணக்கான விளைநிலங்களை இலவசமாய் தருகிறார்கள்.​கொரோனா​வைக்கூறியே ​கொடும் சட்டங்களை நிறைவேற்றுகிறார்கள். ​கொரோனாவைவிடக் ​கொடியவர்கள் இவர்கள். ​ 

மோடியின் பொய்கள்
​மோடி காசியில் இருந்து ​பொய்மூட்டைகளை  அவிழ்த்துள்ளார். விவசாயிகள் ​போராட்டத்திற்குப் பணியமாட்டேன் என்று மமதையாய் ​பேசுகிறார். ஆட்சிக்கு வந்தால் விவசாயக்கடன்கள் ரத்தாகும் என்று ​பொய் ​சொல்லி விவசாயிகளை அ​ழைத்து வந்துள்ளார்களாம்.தங்கள் ​பொருட்களை (அரசு ​கொள்முதல் ​செய்யாமல்) தாங்களே விற்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளேன். இது எதிர்க்கட்சிகளின் சதி என்றும் ​மோடி காசி யாத்திரை ​போகிறார்.காசிக்குப்​போகும் சந்நியாசி !நாடு என்னாகும் நீ ​யோசி !

===எஸ்ஏபி===