articles

img

மதச்சார்பின்மையின் சக்தி வாய்ந்த வெற்றியாளர்

சீத்தாராம் யெச்சூரி நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் மிகவும் வலுவாகப் பொதிந் துள்ள விழுமியங்களுக்கான அர்ப்பணிப்பில் சமரசம் செய்து கொள்ளாமல் இருந்த வர். இந்தியாவின் பன்முகத் தன்மையைப் பாதுகாப்பதில் அவர் கடுமையான உறுதி யுடன் இருந்தார். வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்ட் என்பது போல மதச்சார்பின் மையின் சக்திவாய்ந்த வெற் றியாளராகவும் திகழ்ந்தார்.  அவரது நம்பிக்கை ஜனநா யக விழுமியங்களில் நங் கூரமிடப்பட்டது. உண்மை யில் நாடாளுமன்றத்தில் அவ ரது பன்னிரெண்டு ஆண்டு கால பணி மறக்கமுடியாத வகையில் அழியா முத்தி ரையை பதித்தது. சீத்தாராம் யெச்சூரி ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். மேலும் சமீபத்தில் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக “இந்தியா” கூட்டணியின் தோற்றத்திற்கு மகத்தான பங்க ளிப்பை வழங்கினார். யெச்சூரியை இழப்பது வருத்தம் அளிக்கிறது.

-காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி

தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு லால் சலாம் மற்றும் எனது பணிவான அஞ்சலி. தோழரே நீங்கள் இவ்வளவு சீக்கிரம் சென்றிருக்கக் கூடாது.

-ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்

சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளராக 2 முறை தொ டர்ந்து பதவி வகிக்க அவரது அனுபவம் அவருக்கு வாய்ப்பளித்தது. அவரது மறைவு இடதுசாரிக் கருத்தியலின் மிகப்பெரிய இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும். யெச்சூரியின் மறைவால் தொழிலாளர்கள், விவ சாயிகள் உரிமைகளின் குரல் பறிபோனது. சீத்தாராம் யெச்சூரி க்கு எனக்கு ஆழ்ந்த இரங்கல்.

-தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்

மூத்த அரசியல்வாதியும், சிபிஎம் பொதுச்செயலாள ருமான சீத்தாராம் யெச்சூரி காலமானார். இந் நிகழ்வு எனக்கு மிகவும் வருத்தத்தை  ஏற்படுத்தி யுள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். துயரத்தில் இருக்கும் குடும்பத்தினர் தாங்கும் வலிமையைப் பெறட்டும்.

-சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்


சீத்தாராம் யெச்சூரி நல்ல பேச்சாளர் மட்டுமல்ல. பொருளாதாரத்தில் கைதேர்ந்த மாணவர். உயர் மதிப்புகளுடன் சமரசம் செய்யாத ஒரே தலைவர். பொறுமை மற்றும் இனிமையான நடத்தைமிக்கவர். யெச்சூரி ஒரு வெளிப்படையான பேச்சாளர் மற்றும் கட்சிகள் அனைத்தும் போற்றப்பட்டவர். அவரது திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.
-சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்
செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவு இந்திய அரசியலுக்கு பெரும் இழப்பு. யெச்சூரியின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கட்சி சகாக்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
சிபிஎம் முதுபெரும் தலைவர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. ஐந்து தசாப்தங்கள் நீடித்த அவரது அரசியல் வாழ்க்கை இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளால் குறிக்கப்பட்டுள்ளது. யெச்சூரியின் பொதுச் சேவையில் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை விட்டுச் சென்றுள்ளார்.
-துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர்

சீத்தாராம் யெச்சூரியின் மறைவு நம் அனைவருக்கும் ஆழ்ந்த இழப்பாகும். நமது நாட்டிற்கான அவரது சேவை மற்றும் பக்தி மிகுந்த மரியாதைக்குரியது. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் இயல்பாகவே ஒழுக்கமான மனிதராக இருந்தார். அவர் அரசியலின் கடுமையான உல
கில் சமநிலை மற்றும் மென்மையான உணர்வைக் கொண்டு வந்தார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும், அவரது அன்புக்குரியவர்கள் இந்த துயரத்தை எதிர்கொள்ளும் வலிமையையும் தைரியத்தையும் பெறட்டும்.
-காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

சீத்தாராம் யெச்சூரியின் மறைவுச் செய்தியைக் கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவர் ஒரு சிறந்த தலைவர், ஒரு உண்மையான சோசலிஸ்ட் மற்றும் ஒரு அசாதாரண மனிதாபிமானமிக்கவர். அவரது மறைவு நமது நாட்டு அரசியலுக்கு பேரிழப்பாகும். எனது அஞ்சலிகள் மற்றும் இரங்கல்கள் அவரது குடும்பத்தினருடனும் கட்சியு
டனும் உள்ளன.
-ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா

தோழர் சீத்தாராம் யெச்சூரி இப்போது இல்லை. இது மிகவும் சோகமான செய்தி. அரசியலின் ஒரு சகாப்தம் இப்போது முடிந்துவிட்டது. ஜேஎன்யு
வில் மாணவர் அரசியலில் இருந்து அவரது கடைசி நாட்கள்
வரை இந்தியாவின் உழைக்கும் மக்களை பிரதிநிதித்து
வப்படுத்தும் ஒரு உறுதியான தலைவராக இருந்தார். சிறந்த நாடாளுமன்றவாதிகளில் ஒருவராகவும் இருந்தார். அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகள் குறித்த அவரது கருத்துக்கள் வரும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து வழி
காட்டும். சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மைக்கான யெச்சூரி
யின் அர்ப்பணிப்பு ஒப்பிடுவதற்கு அப்பாற்பட்டது. இது கட்சி எல்
லைகளுக்கு அப்பால் ஒரு பெரிய ரசிகர்களைப் பின்பற்ற வழி
வகுத்தது. ஜேஎன்யுவில் எனது மாணவப் பருவத்தில் இருந்து
இன்றுவரை அவருடனான எனது தொடர்பு நீண்ட அன்பு மற்றும் மரியாதைக்குரியது. தோழர் சீதா கோ லால் சலாம்.
-பீகார் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி (சிஎல்பி) தலைவர் ஷகீல் அகமது கான்

இந்திய அரசியலில் நன்கு அறியப்பட்ட சிபிஎம் பொதுச் செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை எம்பி
யுமான  சீத்தாராம் யெச்சூரி சிகிச்சையின் போது கால
மானார் என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் ஒரு திறமையான  நாடாளுமன்றவாதி. அதே போல அனை
வரிடமும் நட்பு பாராட்டக்கூடியவர். யெச்சூரியின் குடும்பத்தி
னருக்கும், அவரது அன்புக்குரியவர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த துக்கத்தைத் தாங்கும் சக்தியை இயற்கை அவர்களுக்குத் தரட்டும்.
-பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி
எனது நீண்டகால நண்பரும், சக ஊழியருமான சீத்தா
ராம் யெச்சூரி காலமானார் என்பதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். எனது ஆழ்ந்த இரங்கல்கள். கட்சிக்காக அவர் செய்த அர்ப்பணிப்பு என்றும் நினைவுகூரப்படும்.
-மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் 
எச்.டி.தேவகவுடா

சிறந்த நாடாளுமன்றவாதியான சிபிஎம் பொதுச்செய
லாளர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். யெச்சூரி ஒரு மன உறுதியான மார்க்சிஸ்ட் நடைமுறைப் போக்கைக் கொண்டவர். சிபிஎம் கட்சியின் தூணாக இருந்தவர். 
-காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், சமூக நீதிக்காக குரல்கொடுத்தவருமான சீத்தாராம் யெச்சூரியின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. மக்களுக்காகவும் தேசத்துக்காகவும் அவரது அர்ப்பணிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்தியா ஒரு சிறந்த தலைவரை இழந்துவிட்டது.

-பிஆர்எஸ் மூத்த தலைவர் ஹரிஷ் ராவ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்
செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் மரணச் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. யெச்சூரி மிகவும் கடின உழைப்பாளி. அவரது சித்தாந்தத்திற்கு விசுவாசமாக இருந்தார். யெச்சூரிக்கு நாடு மற்றும் வெளிநாடுகளின் அரசியல் பிரச்சனைகள் குறித்து ஆழமான புரிதல் இருந்தது. அவரது மறைவு இந்திய அரசியலுக்கு ஒரு பெரிய இழப்பு.

-ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். யெச்சூரி பிரச்சனைகளை அறிவார்ந்த முறையில் எடுத்துக்கொள்வதற்கும், அடி மட்டத்தில் உள்ள மக்களுடன் தொடர்பு கொள்வதற்கும் பெயர் பெற்றவர். அரசியல் களத்தில் உள்ள அனைத்து தலைவர்களுடன் யெச்சூரியின் நுண்ணறிவு விவாதங்கள் அவருக்கு கட்சிக்கு அப்பாற்
பட்ட அங்கீகாரத்தை அளித்தன. இந்திய அரசியலில் மிகவும் மரியாதைக்குரிய குரல்களில் ஒருவராக உருவெடுக்க, தரவரிசையில் உயர்ந்தவர்.

-ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளார். முக்கியமான பிரச்சனைகளில் நாட்டின் கொள்கை அணுகுமுறையை மாற்றியமைக்கும் பொதுவான குறைந்தபட்ச திட்டங்களை உருவாக்கத் தலைமை வகித்தவர். அதுமட்டுமின்றி யெச்சூரி ஒரு சிறந்த மனிதர்.பன்மொழிப் புலமை மிக்கவர். தனது ஞானம், புத்திசாலித்தனம் மற்றும் அசைக்க முடியாத தன்மையால் பொது வாழ்க்கையை வளப்படுத்தியவர்.

-கர்நாடக முதல்வர் சித்தராமையா

கம்யூனிஸ்ட்  மூத்த தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான சீத்தாராம் யெச்சூரியின் மறைவால் இந்திய அரசியல் களம் ஈடுசெய்ய முடியாத இழப்பைச் சந்தித்துள்ளது. தொழிலாளி வர்க்கத்திற்காக யெச்சூரி நடத்திய போராட்டங்கள் அளப்பரியது. வருங்கால சந்ததியினருக்கு அவரது போராட்டங்கள்  தொடர்ந்து ஊக்கமளிக்கும்.

-தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

சீத்தாராம் யெச்சூரியின் மறைவைக் கேட்டு ஆழ்ந்த வருத்தமடைகிறேன். மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும்ஜனநாயகத்திற்காக அவர் தொடர்ந்து குரல் கொடுத்தார். 2016இல் காஷ்மீருக்குச் சென்ற அனைத்துக் கட்சிக்குழுவில் நாங்கள் இருவரும் அங்கம் வகித்தோம். நேர்மையான அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், சக ஊழியர்கள் மற்றும் தோழர்களுக்கு இரங்கல்.

- ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி

தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சாமானியர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த ஒரு தலைவரை நாடு இழந்துவிட்டது. சீத்தாராம் யெச்சூரியின் கட்சி மீதான அவரது பக்தியும், மதிப்புகளின் நேர்மையான அர்ப்பணிப்பும் அரசியலில் எப்போதும் சிறந்ததாகக் கருதப்படும். அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும் தனிப்பட்ட உறவுகளைத் தொடர்ந்து பேணிய யெச்சூரிக்கு எனது அஞ்சலிகள்.

-மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

சிபிஎம் பொதுச் செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை எம்.பி.,யுமான சீத்தாராம் யெச்சூரியின் மறைவு வருத்தமளிக்கிறது. இது இந்திய அரசியலுக்கும் சமூகத்துக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

சீத்தாராம் யெச்சூரி இந்தியா சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து ஆழ்ந்த புரிதல் கொண்டவர். அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே கிடையாது. முதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் பொழுது அணு ஒப்பந்தம் குறித்து விவாதங்களில் நான்/ யெச்சூரி/ பிரணாப் முகர்ஜி ஆகியோர் இருந்தோம். அத்தகைய முரண்பாடான விவாதங்களில் கூட அவர் கோபம் கொண்டு நான் பார்க்கவில்லை. நாடாளுமன்றத்தில் அவர் பேசினால் நிசப்தம் நிலவும். அனைவரும் கவனிப்பர். அவரது உரைகள் மற்றவர்களை வசியப்படுத்திவிடும். அந்த அளவுக்கு ஆழமாக பொருள் செறிந்தவையாக இருக்கும். நாடி நரம்புகளில் மதச்சார்பின்மை இரண்டறக்கலந்த அபூர்வ இந்தியர்களில் அவர் முதன்மையானவர்.

-உச்சநீதிமன்ற பார்கவுன்சில் தலைவர் கபில் சிபல் 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவு வருத்தம் அளிப்பதாக உள்ளது. யெச்சூரி அர்ப்பணிப்பும், உறுதியான, உணர்திறன் மிக்க  அரசியல் தலைவர். யெச்சூரியின் மறைவால் வாடும் அவரது கட்சியினர் மற்றும் குடும்பத்தினருக்கு ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.

-ஆர்எஸ்எஸ் அமைப்பு