இஸ்லாமிய சமூகத்தின் உரிமைகளைப் பறிக்கும் முயற்சி! - கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
வேலூரில் தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை, வேலூர் மாவட்ட மஸ்ஜித்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றினார். மஸ்ஜித் அசோசியேஷன் தலைவர் வி.கே. அப்துல் அலீம் சாஹேப் தலைமை தாங்கினார். வேலூர் அல் பாகியாத் சாலீஹாத் அரபிக் கல்லூரி முதல்வர் அப்துல் ஹமீத் சாகிப் பாஜில் பாகவி, ரஷீதிய்யா அரபிக் கல்லூரி முதல்வர், ஜமாஅத்துல் உலமா பொதுச் செயலாளர் காரி இம்தியாஸ் அகமது சாஹிப் ரஷாதி, மக்களவை உறுப்பினர் து.மு. கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர் ப. கார்த்திகேயன், விசிக மாநிலத் துணைப்பொதுச்செயலாளர் ரஜினிகாந்த், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் டீக்காராமன் ஆகியோரும் பேசினர். ஜமாஅத்துல் உலமா துணை செயலாளர் மௌலானா அபுபக்கர் சித்திக் நன்றி கூறினார்.
பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு- குறிப்பாக, இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் அதிகரித் துள்ளது. அந்த ஆட்சியை அகற்றினால் தான், அனைத்துத் தரப்பு மக்களும் நிம் மதிப் பெருமூச்சு விட முடியும். பல்வேறு மோசமான சட்டங்களை கொண்டு வந் துள்ள மோடி அரசு, கடந்த ஏப்ரல் 2 அன்று வக்பு திருத்தச் சட்டத்தை நிறை வேற்றி நாடாளுமன்றத்தில் கருப்பு வர லாற்றை உருவாக்கியிருக்கிறது. நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ள சூழ்நிலையில், நள்ளிரவு 2 மணிக்கு அந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய தேவை என்ன வந்தது? எனவே, பாஜக அரசை சவக்குழிக்கு அனுப்பும் வரை ஓயா மல் நமது போராட்டத்தை தொடர்ந்து முன் னெடுக்க வேண்டும்.
மக்கள் பிரச்சனைகளைக் கவனிக்காத ஆட்சி
மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தை முடி வுக்குக் கொண்டுவர எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அங்கு நூற்றுக்க ணக்கானோர் கொன்று குவிக்கப்பட் டுள்ளனர். நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை; நாளுக்கு நாள் விலைவாசி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு காணாத மோடி அரசு, அவ சரமாக வக்பு திருத்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதனால், அடித்தட்டு மக்க ளின் தேவைகள் தீரப்போகிறதா என்றால் இல்லை. இஸ்லாமிய மக்களை ஒடுக்க வேண்டும் என்ற பாசிச ஆர்எஸ்எஸ் கும்ப லின் மதவெறி காரணமாகவே இந்தச் சட் டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
நள்ளிரவில் கொண்டுவரப்பட்ட சட்டம்
வக்பு திருத்தச் சட்டம், நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. அங்கு பலரும் சட்டத்திருத்தத்திற்கு எதி ராக தங்கள் கருத்துக்களை தெரி வித்துள்ளனர். சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி 5 கோடி மனுக்க ளும், இ-மெயில்கள் மூலம் அனுப்பப் பட்டுள்ளன. ஆனால் அந்தக் கருத்துக்கள், மனுக் கள் குறித்து எந்த விவாதமும் நடத்தாமல், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே தெரி யப்படுத்தாமல் நாடாளுமன்றத்தில் தாக் கல் செய்யப்பட்டு நள்ளிரவு 2 மணிக்கு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 288 பேரும், மதச்சார்பின்மை யை ஆதரிக்கும் எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் 232 பேரும் இதற்கு எதிராக வாக்க ளித்தனர். பாஜக கூட்டணியில் உள்ள வர்கள் 5 பேர் இதற்கு எதிராக வாக்க ளித்துள்ளனர். முரண்பாடு நிறைந்த சட்டத்திருத்தம் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் நல்லெண்ணத்தின் அடிப்படையில் வக்பு கொடுக்கக் கூடாது என்று தடைபோடும் ஒன்றிய அரசு, வக்பு வாரியத்தில் இஸ் லாமியர் அல்லாதவர்களை உறுப்பின ராக சேர்ப்பது என்ன நியாயம்? வக்பு வாரியத்தில் 23 உறுப்பினர்கள் இருந்தால் அதில் 13 பேர் வரை இதர மதத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கலாம் என்றால், இஸ்லாமியர் அல்லாதவர்களை பெரும் பான்மையாக்கி அவர்களின் உரிமை களை பறிக்கத்தான் இந்த சட்டத் திருத்தத் தையே பாஜக கொண்டு வந்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை புறக்கணிக்கும் நடவடிக்கை
மத அடிப்படையிலான நிறுவனங்க ளில், அமைப்புகளில் யாரை பணிய மர்த்துவதாக இருந்தாலும், அந்த மதத் தைச் சார்ந்தவர்களை மட்டுமே பணிய மர்த்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவாகக் கூறியுள்ளது. இந்து அறநிலையத்துறையில் இஸ்லாமி யர் ஒருவர் கூட உறுப்பினராகவோ, அதி காரியாகவோ ஆக முடியாது. அறநிலை யத்துறை நடத்தும் கல்லூரியில் கூட மற்ற மதத்தைச் சார்ந்தவர்களை தமிழ்நாட்டில் பணியமர்த்த முடிவதில்லை. ஏனென் றால் அது இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமானது. அப்படி இருக்கும் போது, இஸ்லாமியர்களுக்கு சொந்தமான வக்பு வாரியங்களில் இஸ்லாமியர் அல்லாத வர்களை நியமிப்பது சட்ட விரோதம் மற்றும் அரசியல் சாசனத்திற்கு விரோத மாகும்.
வரலாற்று சொத்துக்களை பறிக்கும் முயற்சி
வக்பு என்பது ஆயிரம் ஆண்டுகளுக் கும் மேலாக உள்ளது. தலைமுறை தலை முறையாக வக்பு வழங்கி வருகின்றனர். 500 ஆண்டுகளுக்கு முன்னால் கொடுத்த சொத்துக்கள், நம்பிக்கை அடிப்படை யில் கொடுத்த சொத்துக்கள் இனி வக்பு சொத்தாக ஏற்கப்படாது என்று சட்டத்தை திருத்தி உள்ளனர். இதன்மூலம் வக்பு வாரியத்தில் உள்ள சரி பாதிக்கும் மேலான சொத்துக்களைப் பறிப்பதுதான் அவர்களின் நோக்கமாகும்.
மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமை அவசியம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமி யர்கள் மட்டுமல்ல அனைத்து மதத்தை சார்ந்த மக்களும் ஒன்றிணைந்து இதற்கு எதிராக போராட வேண்டும் என்று தீர்மா னம் நிறைவேற்றியுள்ளோம். அந்த வகை யில், இந்தியா கூட்டணியும், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள அனைத்து
கட்சிகளும் சிறுபான்மை மக்களின் கேடயமாக இருக்கும். அதனடிப்படையில்தான், மசோதா சட்டமாவதற்கு முன்பே, கடந்த மார்ச் 27 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், வக்பு திருத்தச் சட்ட மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றி, ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத் தோம். சட்டம் வந்த பிறகும் அனை வரும் ஒன்றிணைந்து குரலெழுப்பி வருகிறோம்.
ஆர்எஸ்எஸ்-சின் வெறுப்பு அரசியல்
அநீதிகளுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் போராடுவதில்லை. சாதி மத அமைப்பு களுக்கு எதிராக போராடுவதில்லை. மாறாக சாதிவெறியையும் மதவெறி யையும் தூக்கி பிடிக்கும் அமைப்பே ஆர்எஸ்எஸ் தான், என்பதை மறந்து விடக்கூடாது. தங்கள் எதிரிகளாக முதலில் இஸ்லாமியர்கள், இரண்டாவது கிறிஸ்தவர்கள், மூன்றாவது கம்யூ னிஸ்டுகள் என்று ஆர்எஸ்எஸ் நிறு வனர் கோல்வால்கர் தனது ‘பஞ்ச் ஆப் தாட்ஸ்’ என்ற புத்தகத்தில் குறிப் பிட்டுள்ளார். அதனடிப்படையிலேயே மனிதாபிமானமற்ற முறையில் ஆர்எஸ்எஸ்-சின் செயல்பாடு உள்ளது.
அனைவரும் ஒன்றிணைவோம்
அனைத்து சமூக மக்களின் ஒற்று மையைப் பிளவுபடுத்த, பாகுபடுத்த, கலவரத்தை உண்டாக்க பாஜக - ஆர்எஸ்எஸ் முயற்சிக்கலாம். ஆனால், அந்த முயற்சிகளுக்கு இடம ளிக்காமல், சாதி, மதம் கடந்து அனைவரும் மனிதர்கள் என்ற அடிப்படையில் ஒன்றாக கரம்கோர்த்து பாசிச பாஜகவை வீழ்த்துவோம். (இஸ்லாமிய மக்களின் உரிமை களை பறிக்கும் வக்பு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, வேலூர் அண்ணா கலையரங்கில் ஏப்ரல் 15 அன்று, தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை, வேலூர் மாவட்ட மஸ்ஜித்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கே. பாலகிருஷ்ணன் ஆற்றிய உரையின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது.)