சாலை விபத்துக்களை குறைக்க - நீடாமங்கலம் சுப்பையா
கேரளத்தின் முன்மாதிரித் திட்டம்
தகவல் தொடர்பிற்காக மொபைல் போன்களை பயன்படுத்துவதும் வாழ்வின் அனைத்து தேவைகளுக்கும் அதையே சார்ந்திருப்பதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் நெருக்கடி மிகுந்த போக்குவரத்தில்கூட மொபைலில் அலட்சியமாக பேசிக்கொண்டே பைக் ஓட்டும் பொறுப்பற்ற நடத்தையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதில் பெண்களும் விதிவிலக்கல்ல. தொலைபேசியைப் பயன்படுத்தும்போது ஏற்படும் கவனச்சிதறல் நீங்க 27 வினாடிகள் வரை ஆகலாம் எனவும் இதனால் விபத்தில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் நான்கு மடங்கு அதிகம் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சென்னையில் மட்டும் மொபைலில் பேசிக்கொண்டே செல்வதால் ஏற்படும் விபத்துகள் ஆண்டுக்கு சராசரியாக 200 என்று தகவல்கள் கூறுகின்றன.
விபத்துகளுக்கான அடிப்படை
சாலையில் செல்லும் இதர மக்களைப்பற்றி கருத்தில் கொள்ளாமல் வாகனங்களை ஓட்டினால் மோட்டார் வாகனச் சட்டம், 1988 பிரிவு 177 மற்றும் பிரிவு 184 இன் கீழ் தண்டிக்கத் தக்க குற்றமாகும். அதிக எண்ணிக்கையிலான விபத்துகள், உயிரிழப்புகளுக்கு அதிவேகம், குடிபோதை, கவனக் குறைவு, அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் மோசமான சாலை ஆகியவை காரணமாகின்றன. ஆனால் அடிப்படையில் மூன்று காரணங்களே விபத்து களுக்கு முதன்மையாக இருக்க முடியும். ஒன்று தான் பயன்படுத்தும் சாலை மற்றும் தனது வாக னத்தைப் பற்றிய தொழில்நுட்ப அறிவின்மை. இரண்டாவது வாகனம் ஓட்டும் தனிநபரின் சமூகப் பொறுப்பில்லாத அலட்சி யமான நடத்தை. மூன்றாவதாக போக்குவரத்து சட்டங்களை அமுல்படுத்த வேண்டிய காவல்துறையினரின் அலட்சியம் மற்றும் பொறுப்பற்ற நடத்தை . இதன் பொருள் தனி நபரின் ஆபத்தான நடத்தை மட்டுமல்ல போக்குவரத்து விதி களை கட்டாயமாக்கி கண்காணித்து மீறுபவர்களை தண்ட னைக்கு உள்ளாக்குவதன் மூலம் விபத்துகளை குறைக்கும் பொறுப்பாகும். இதிலிருந்து தவறும் காவல்துறையின் அலட்சியம்தான் விபத்துகளுக்கு முக்கிய காரணமாகும். தமிழ்நாடு முழுவதும் ஒப்பீட்டளவில் மாநகராட்சிகளை விட முனிசிபல் நகரங்களில்தான் மொபைலில் பேசிக் கொண்டே வாகனத்தை ஓட்டுவது, ஹெல்மெட் அணியாதது போன்ற ஆபத்தான விதிமீறல்கள் அதிகமாக உள்ளன. விவ சாயம், முறைசாரா தொழிலாளர்கள், சிறு குறு வியாபா ரத்தில் உள்ளவர்கள் புறநகர்களை ஒட்டி அடுத்தடுத்து ஏரா ளமான கிராமங்களை அதிகமாகக் கொண்ட நகரங்களில் தான் ஆபத்தான இப்போக்கு அதிகமாக இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர்களில் ஒருவரான பி.கந்தசாமி கூறும்போது, எங்கள் மாவட்டத்தில் போக்குவரத்து காவலர்கள் முன்பே விதி மீறல்கள் சர்வசாதாரணமாக நடைபெறுகின்றன. இடது தோளுக்கும் காதுக்கும் இடையில் மொபைலை இடுக்கிய வாறு நாகை சாலையிலிருந்து பேசிக்கொண்டே வந்த ஒரு வாலிபர் நீடாமங்கலம் வெண்ணாற்றுப் பாலத்திற்குள் நுழைய எதிரே வந்த ஒரு லாரியை கண்டவுடன் தடுமாறி பேலன்ஸ் இழந்தார். இடது பக்க பாலக்கட்டையை பிடிக்க முயற்சித்து அப்படியே சரிந்து ஆற்றிற்குள்ளும் விழுந்தார். மன்னார்குடி 3-ஆம் தெருவில் தன் மனைவியை பின்னால் வைத்துக்கொண்டு பைக் ஓட்டிச் சென்ற ஒருவர் மொபை லில் பேசிக்கொண்டே வந்தார். தெருவின் மத்தியில் நடு வாணியத் தெருவில் இருந்து திடீரென குறுக்கே ஒரு பைக் வந்ததால் பிரேக்கை அழுத்த அவரது மனைவி தடுமாறி நடுரோட்டில் விழுந்தார். அவர்கள் இருவரும் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. தலையில் பலத்த காயம்பட்ட அந்தப் பெண்மணியை தூக்கிக்கொண்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
விபத்துகளின் மாநிலமாக தமிழ்நாடு
பொறுப்பற்ற முறையில் விபத்துகளில் சிக்கி காயமடை வதுடன் எதிரே வருபவர்களை காயப்படுத்தியும் பார்ப்ப வர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவங்கள் தினம் தினம் எல்லா நகரங்களிலும் நடைபெற்று வருகின்றன. 2018-2022 ஐந்து ஆண்டுகளில் உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, மகா ராஷ்டிரா ஆகிய மாநிலங்களில்தான் அதிக எண்ணிக்கை யில் சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இக்காலகட்டத்தில் இந்தியா முழுவதும் 7.77 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரி ழந்துள்ளனர் என்றும் அதிக விபத்து இறப்புகளைக் கொண்ட முதல் 10 மாநிலங்களில் முதலிடத்தில் உத்தரப்பிரதேசமும் (1,08,882 இறப்புகள்) இரண்டாம் இடத்தில் தமிழ்நாடும் (84,316 இறப்புகள்) உள்ளன. காப்பீடு இல்லாத இரு சக்கர வாகனங்கள் தமிழகத்தில் முக்கிய பிரச்சனையாக மாறி வருகிறது. மூன்றாம் தரப்பு பொறுப்பு (3rd party liability) காப்பீடு சட்டப்படி கட்டாய மாக இருந்தபோதிலும், பெரும்பாலும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து காப்பீட்டை புதிப்பிப்பதில்லை. இதை காவல் துறையினரும் போக்குவரத்துத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பதுமில்லை. உரிய காப்பீடு இல்லாததால் பத்தா யிரக்கணக்கான குடும்பங்கள் இன்று உரிய இழப்பீடு பெற முடியாமல் நிர்க்கதியாய் நிற்கின்றன. உடல் உறுப்புகளை பறிகொடுத்து மூளைக் காயங்கள் ஏற்பட்டு வாழ்நாள் முழு வதும் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் பாரமாய் வார்த்தை களால் வர்ணிக்க முடியாத சோகத்துடன் வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். குடிமக்கள் நுகர்வோர் மற்றும் குடிமை நடவடிக்கைக் குழு (CAG) என்ற அமைப்பு இவ்வாண்டின் துவக்கத்தில் சாலைப் பாதுகாப்பு உணர்வுகள் கருத்துக்கள் மற்றும் நடத்தைகள் என்ற தலைப்பில் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்க ளில் ஆய்வு நடத்தியது. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்றவை விபத்துகளுக்கு முக்கிய காரணங்கள் இருந்தா லும் , மொபைலில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுவது உள்பட கவனத்தை சிதறடித்து வாகனம் ஓட்டுதல் மற்றும் போக்குவரத்து விதி மீறல்களின் கண்காணிப்பின்மை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தன என அந்த ஆய்வு தெரிவித்தது. 2007-இல், இந்தியாவில் சாலைப் பாது காப்புக் கொள்கையை அறிமுகப்படுத்திய முதல் மாநில மாக தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருந்தது. ஆனால் இன்று தமிழகத்தில் நடைபெறும் சாலை விபத்து மரணங்கள் கவலை தருபவைகளாக மாறி வரு கின்றன.
பொறுப்பினை உணராத....
விபத்துக்கள், மரணங்கள், காரணங்கள், காப்பீடு மக்க ளின் அறியாமை ஆகியவற்றில் உள்ள அபாயங்களைப் பற்றி தங்கள் சேனல்கள் மூலம் மக்களுக்கு சொல்ல வேண்டிய பொறுப்பை மீடியாக்களும் உணர்வதில்லை. அங்கொன் றும் இங்கொன்றுமாய் சில நடவடிக்கைகள் எடுக்கப்படு கிறதே தவிர, காவல்துறையும் இதை சீரியஸாக பார்ப்ப தில்லை. ஹெல்மெட் அணியாமல் பைக்குகளை ஓட்டிக் கொண்டே செல்லும் காவல்துறையினரை தமிழ்நாட்டின் சாலைகளில் இன்று சர்வசாதாரணமாக பார்க்க முடியும். இதன் பொருள் அந்த காவலரின் தனிநபர் பொறுப்பு மட்டு மல்ல போக்குவரத்து விதி மீறல்களை காவல்துறைக் குள்ளும் அனுமதிக்கும் காவல்துறை தலைமையின் ஏற்றுக் கொள்ள முடியா சமரசப் போக்காகும்.
இதற்கான தீர்வுகள்தான் என்ன
கேரளத்தின் முன்மாதிரியான பாதுகாப்பான கேரளா ( Safe Kerala) திட்டம் மிகச்சிறந்த தீர்வாக நிச்சயம் இருக்கும். இத்திட்டத்தில் கேரளா முழுமையிலும் போக்குவரத்து விதி மீறல்களைக் கண்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ஹைடெக் கண்காணிப்பு கேமராக்கள், மிகத்துல்லிய தானி யங்கி நம்பர் பிளேட் கண்டறி மற்றும் செயற்கை நுண்ணறிவு காமிராக்கள் (ANPR Artificial intelligence Camera) எல்லா மாவட்ட மற்றும் தாலுக்கா நகரங்களிலும் பொருத்த மான சாலை சந்திப்புகளில் பொருத்தப்பட்டுள்ளன. கேரள அரசிற்கு சொந்தமான கெல்ட்ரான் மின்னணு நிறுவனத்தின் உதவியோடு இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும் பரவலாக்கப்பட்டும் வருகிறது. ஹெல்மெட், ட்ரிபிள் ரைடிங், மொபைல் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு மற்றும் உலக ளாவிய நவீன கேமராக்களை இடதுசாரிகள் ஆளும் கேரளா பயன்படுத்துகிறது. கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும். இத்திட்டம் அமலாக்கப்பட்ட இன்றைய கேரளாவில் ஒரு வர் ஹெல்மெட் அணியாமல் நகருக்குள் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பினார் என்றால் அபராதத் தொகையோடு குறுஞ்செய்தி அவரது மெபைலில் காத்திருக்கும். சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி 98 லட்சம் பேர் இக்கேமிரா கண்களுக்குள் சிக்கியதாகவும் ஜூன் 2023 இலிருந்து ரூ.631 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாகவும் இதில் சுமார் ரூ.400 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் 2024-2025 நிதி யாண்டில் மட்டும் கேமரா மூலம் கண்டறியப்பட்ட விதி மீறல் களுக்கு இ-சலான்கள் மூலம் ரூ.273 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநில குற்றப் பதிவுப் பணியகத்தின் (SCRB) புள்ளி விவரங்களின்படி, 2024 இல் கேரள சாலைகளில் மொத்தம் 3,714 உயிர்கள் பலியாகியுள்ளன. இது முந்தைய 2023-இன் எண்ணிக்கையான 4,080-விடவும் 2022 இன் 4,317 விடவும் குறைவாகும். சாலை விபத்து மரணங்கள் குறைந்ததற்கு கேரளா முழுவதும் செயற்கை நுண்ணறிவு கேமராக்களின் பயன்பாடு மற்றும் சர்வதேச தர மின்னணுச் சாதனங்கள் பொருத்தப்பட்ட பறக்கும் படைகளின் ( Enforcement Squard ) ரோந்துப் பணிகள்தான் காரணம். தமிழக அரசு இப்படி முடிவெடுக்கலாம். தமிழகத்தின் போக்குவரத்து மற்றும் காவல்துறையின் அதிகாரிகளை கொண்ட அணி ஒன்றை கேரளத்திற்கு அனுப்பலாம். நேரிடை யாக கள ஆய்வு செய்து அதன் அனுபவங்களை அறிந்து தமிழ்நாட்டிலும் நமக்கேற்ற மாறுதல்களுடன் அமல்படுத்த லாம். செலவில்லா இத்திட்டத்தால் தமிழ்நாட்டின் விபத்து மர ணங்களும் சோகங்களும் நிச்சயம் குறையும்.