சித்திரமும் கைப்பழக்கம் - பெரணமல்லூர் சேகரன்
சிறுமி வரையும் பறவை-அழகு அமைய நாளும் பழகு சிறுவன் வரையும் பந்து-நல்ல ஓவியம் அமைய உந்தும் பார்க்கும் யாவும் வரைதல் -நல்ல பழக்கம் சிறுவர் ஏற்றல் கோட்டு ஓவியம் எளிது-பயிற்சி ஊட்டும் சிறப்பு அறிக வண்ண வண்ண ஓவியம்-என்றும் திண்ண மாகும் நம்பிக்கை இயற்கைக் காட்சி யாவுமே-வரைய இயல்பாய்க் கூடி வந்திடும் சித்திரமும் கைப் பழக்கம்-நல்ல முத்திரை நாளும் பதிக்குமே ஆணும் பெண்ணும் வரையலாம்-வரையும் அழகு ஓவியம் மகிழலாம்.