மல்டிப்பிள் ஸ்கிளெரோசிஸ் நோயும் குடல் நுண்ணுயிரிகளும்
நமது நோய் தடுப்பு அமைப்பு, தவறுதலாக மூளையையும் தண்டுவடத்தையும் தாக்குவதால் மல்ட்டிப்பிள் ஸ்கிளெரோசிஸ்(Multiple sclerosis) எனும் நோய் உண்டாகிறது. உலகளவில் கிட்டத்தட்ட 30இலட்சம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு மரபணு ஒரு காரணம் என்றாலும் உணவு, தொற்று நோய், குடல் ஆரோக்கியம் ஆகியவை முக்கியக் காரணிகளாகும். இந்த நோய் உண்டாகும் அபாயத்திற்கு குடலிலுள்ள பேக்டீரியாக்கள் காரணமாக இருக்கலாம் என்று நீண்ட காலமாக அறிவியலாளர்கள் சந்தேகித்து வந்தனர். ஆனால் உறுதியான முடிவுகள் இதுவரை கிடைக்கவில்லை. இப்போது ஐயோவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த நோயியல் பேராசிரியர் அசுதோஷ் மங்களம் குழுவினர் இது குறித்து ஆய்வு செய்துள்ளனர். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களின் குடலின் வேதிப்பொருள் மற்றும் பேக்டீரியா சேர்மானங்களை பகுப்பாய்வு செய்து அந்த தரவுகளை பாதிக்கப்படாதவர்களின் தரவுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தனர். முதல்வகையினரினில் குடல் வீக்கம் காணப்பட்டது. மேலும் பேக்டீரியாக்களின் வகைகளும் வேறுபட்டிருந்தன. எம் எஸ் (multiple sclerosis ) நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆரோக்கியமனவர்களின் குடலில் காணப்படும் பேக்டீரியாக்களையும் இரண்டு தரப்பினரின் குடலில் பொதுவாகக் காணப்படும் பேக்டீரியாக்களையும் எலிகளில் செலுத்தி செய்யப்பட்ட சோதனைகளில் முதல் வகை பேக்டீரியாக்கள் செலுத்திய எலிகளில் குடல் வீக்கமும் எம் எஸ் நோயின் கடுமையான அறிகுறிகளும் உண்டாயின. அதற்கு முன்பாகவே ‘நன்மை’ செய்யும் வகையிலான பிஃபிடோபேக்டீரியம் குறைவாகவும் ‘தீமை’ செய்யும் அக்கர்மேன்சியா அதிகமாகவும் ஆனது. இதில் வேடிக்கை என்னவென்றால் நன்மை செய்யும் பேக்டீரியாக்களே சமயத்தில் தீமை செய்வதாக மாறுவதே. குடல் சுவரிலுள்ள மைசின் எனும் பொருளை இரண்டு வகை பேக்டீரியாக்களுமே உட்கொள்கின்றன. ஆனால் பிஃபிடோபேக்டீரியம் அதை சுரக்கவும் செய்கிறது. இது குறையும்போது அக்கர்மேன்சியா மைசினை அதிகம் உட்கொண்டுவிடுகிறது. இதே போன்ற அசமத்துவமான விகிதம் மனிதர்களிடமும் காணப்பட்டது. இந்த ஆய்வாளர்கள் அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் நடத்திய மாதிரி சோதனைகளில் ஒரே விதமான முடிவு தெரிந்தது. குடலில் உள்ள நுண்ணுயிரிகளுக்கும் எம் எஸ் நோய்க்கும் உள்ள தொடர்பு மேலும் செய்யப்படும் ஆய்வின் மூலமே தெளிவாகும். இந்த ஆய்வு தி கான்வர்சேசன் (The Conversation) எனும் இதழில் வெளிவந்துள்ளது.
திபெத் மக்களுக்கு மூச்சு திணறல் ஏன் ஏற்படுவதில்லை?
மலை ஏற்றத்தின்போது வளிமண்டலத்தின் அழுத்தம் குறைவதால் நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் குறைகிறது. மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஹைபோக்சியா எனப்படும் நிலை உண்டாகிறது. ஆனால் அதிக உயரத்தில் இருக்கும் திபெத்தில் வசிக்கும் மக்கள் எந்தப் பிரச்சனையும் எதிர்கொள்வதில்லை. 10,000 ஆண்டுகளுக்கு முன் நிலைப்படுத்தப்பட்ட இந்த பிரதேசத்தில் வசிக்கும் மக்களின் உடல் இதற்குத் தகுந்தாற்போல் மாறியுள்ளது என்கிறார் அமெரிக்க கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மனிதவியலாளர் சிந்தியா பீல். இவர் ஹைபாக்சியா நிலைகளில் வாழும் மனிதர்களின் எதிர்வினையை ஆய்வு செய்து வருகிறார். பரிணாம வளர்ச்சியில் ஒரு இனம் தகுந்ததாக இருப்பதற்கு அதன் இன விருத்தி ஒரு குறியீடாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனவே இந்த ஆய்வில் தங்கள் முழு வாழ்க்கையையும் 3500 மீட்டர் உயரத்தில் நேபாளத்தில் கழித்த 417 பெண்கள் எடுத்துக் கொள்ளப்பட்டனர். இவர்கள் 46வயதிலிருந்து 86 வயதுக்குட்ட்பட்டவர்கள். இவர்கள் 0இலிருந்து 14 குழந்தைகள் வரை பெற்றுள்ளனர். சராசரியாக 5.2 பிள்ளைகள். இவர்களுடய ஆரோக்கியம், உடல் அளவுகள் தரவுகள் ஆகியவையும் எடுத்துக் கொள்ளப்பட்டன. குறிப்பாக இரத்திலுள்ள ஹீமோகுளோபின், திசுக்களுக்கு ஆக்சிஜனைக் கொடுக்கும் புரோட்டீன், ஹீமோகுளோபின் எடுத்து செல்லும் ஆக்சிஜன் அளவு ஆகியவை கணக்கிடப்பட்டன. அதிக பிள்ளைகள் பெற்றவர்களின் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு மற்றவர்களைப் போல சராசரியாகவே இருந்தது. ஆனால் ஹீமோகுளோபினில் கரைந்துள்ள ஆக்சிஜன் அளவு அதிகமாக இருந்தது. அதாவது இரத்தத்தை அடர்த்தியானதாக ஆக்காமலேயே அதிக அளவு ஆக்சிஜனை கொடுக்க் முடிந்தது. இரத்தம் அதிக பிசுபிசுப்புத் தன்மையாக இருந்தால் அதை செலுத்துவதற்கு இதயம் அதிக அளவு அழுத்தம் கொடுக்க வேண்டியதிருக்கும். அதிக பிரசவ எண்ணிக்கைகளைக் கொண்ட பெண்களின் நுரையீரலுக்கு அதிக இரத்தம் பாய்வதும் உடலின் பாகங்களுக்கு இரத்தத்தை பாய்ச்சும் இடது வென்ட்ரிக்கிள் பெரியதாக இருப்பதும் காணப்பட்டது. இவை எல்லாவற்றையும் சேர்த்துப் பார்க்கும்போது காற்றில் குறைந்த அளவு இருக்கும் நிலைமையை இந்த பரிணாமக் கூறுகள் எதிர்கொள்ள இயலுகின்றன. இந்த ஆய்வு புரோசீடிங்ஸ் ஆப் தி நேசனல் அகாடமி ஆப் சயீன்ஸ் (Proceedings of the National Academy of Sciences) என்கிற இதழில் வந்துள்ளது.
மற்றவர்களின் மனநிலையை அறியும் திறன் மனிதர்களுக்கு மட்டும்தானா?
மற்றவர்களிடம் உள்ள அறிவு இடைவெளியை புரிந்துகொள்ளும் திறன் மனிதர்களின் நுட்பமான சமூக செயல்பாட்டின் கேந்திர மாக உள்ளது; இதுவே நாம் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பதற் கும் தகவல் தெரிவிப்பதற்கும் வியூக முறையில் ஒன்றாக பணி புரி வதற்கும் மய்யமாக உள்ளது என்கிறார் உளவியலாளர் கிரிஸ் குரு பென்யே. இந்த திறன் நம்முடய பொதுவான மூதாதையர்களிடமும் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்பது அறியப்படாமல் இருந்தது. மேரிலாந்திலுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சோதனையில் போனோபாஸ் எனப்படும் மனிதக் குரங்குகள் ஆய்வாளர்களுடன் ஒரு விளையாட்டு நடத்தப்பட்டது. சில சமயம் ஆய்வாளருக்கு தெரிந்தும் சில சமயம் தெரியாமலும் கப்புகளில் தின் பண்டங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். அதைக் கண்டுபிடித்த குரங்கு அதை உண்ணலாம். ஆய்வாளருக்கு தெரியாத நேரங்களில் போனோபாஸ் அதை விரைவாக சுட்டிக்காட்டும் சாத்தியம் அதிக மாகக் காணப்பட்டது. இது ஒரு சாதாரண விசயமாக தோன்றலாம். ஆனால் நமக்கு நெருக்கமான விலங்கு உறவுகள், மற்றவர்களுடைய கண்ணோட்டம் குறித்து சிந்திக்கின்றன; மதிப்பிடுகின்றன என்பது குறித்து ஆழமான பார்வையைக் கொடுக்கிறது. இதற்கு முன் நடத்தப் பட்ட சோதனைகளில் மனிதக் குரங்குகள் தங்கள் உடனிருப்பவர்களுக்கு அபாயம் குறித்து எச்சரிப்பது அவதானிக்கப்பட்டது. ஆனால் இந்த அண்மைக்கால சோதனைகள், குழு மனப்பான்மை மற்றும் பிழைத்தி ருப்பது குறித்த உணர்வுகளை நீக்கி தனிநபரின் அறிதிறன் செயல்பாடு கள் பற்றி ஆய்வு செய்கின்றன. ‘இந்த சோதனையில் மனிதக் குரங்குகள் தன்னுடன் கூட இருப்பவ ரின் நடத்தையை மாற்றுவதற்காக தொடர்பு கொள்கின்றன என்பது காட்டப்பட்டுள்ளது. ஆனால் அவை மற்றவர்களின் மனநிலையை அல்லது நம்பிக்கையை மாற்றுவதையும் காட்டுகிறதா என்பது மேலும் ஆய்வுகள் மூலமே பதிலளிக்க முடியும்’ என்கிறார் உளவியலாளர் லூக் டவுன்ரோ. நம்முடய கண்ணோட்டம் அல்லது நம்பிக்கையிலிருந்து மாறுபட்ட நிலைகளை மற்றவர்கள் கொண்டிருப்பார்கள் என்பதை அறியும் திறன் மனிதர்களை மற்ற விலங்குகளின் திறனிலிருந்து வேறுபடுத்திக் காட்டு கிறது என்று கருதப்பட்டு வந்தது. அது இப்போது தவறு என்று காட்டப் பட்டுள்ளது என்கிறார் குருபென்யே. இந்த ஆய்வு பிஎன்ஏஎஸ் (PNAS) எனும் இதழில் வெளிவந்துள்ளது.