அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவுக்கு நெருக்கடி எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தில் ஒரு பங்கை அரசு எடுக்க வேண்டும்
ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து புதுதில்லி, ஆக. 28- டிரம்பின் வர்த்தக வரி நெருக்கடியைச் சமாளிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிறு வனங்களின் லாபத்தில் அரசு ஒரு பகுதி பங்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். ‘டிரம்ப் எனது நண்பர்’ என்ற மோடி யின் பிரச்சாரம் இந்தியா மீதான அமெரிக்கா வின் வர்த்தகப்போரை தடுக்க எந்த விதத்தி லும் உதவவில்லை எனவும் அவர் பாஜக அரசை சாடியுள்ளார். அவர் அளித்த பேட்டியின் போது, அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள வர்த்தக வரிகளை பற்றி கேள்வி எழுப்பப் பட்டது. வரி விதிப்பு தொடர்பான விசயத்தில் பிற ஆசிய நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா மிகத்தீவிரமாக குறிவைக்கப் பட்டுள்ளதா? இந்தியா தனிமைப்படுத்தப் படுகிறதா? எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. இக்கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசுகை யிலேயே ரகுராம் ராஜன் இந்த விமர்சனங் களை முன்வைத்தார். அவர் பேசியதாவது: முதலில் பிற ஆசிய நாடுகள் போல் இந்தியா மீதும் அமெரிக்கா 20 சதவீத வரிகளையே விதிக்கும் என்ற கணிப்பில் இருந்துதான் இந்தியா அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை முன் னெடுத்தது. மோடி-டிரம்ப் நட்பு அதற்கு கைகொடுக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் வரிகளை குறைக்க அது உதவவில்லை. மேலும் இந்தியாவுக்கு அடிப்படை வரியே 25 சதவீதமாக விதிக்கப்பட்டது. ரஷ்யாவுடன் மிக நெருக்கமாக உள்ள துருக்கி, சீனாவுக்கு கூட இந்த அள வுக்கு அதிகமான அடிப்படை வரி விதிக்கப் படவில்லை. நிச்சயமாக ஆசிய நாடு களுடன் ஒப்பிடும் போது இந்த வரி விதிப்பு இந்தியாவுக்கு ஒரு பின்னடைவு தான். மேலும் இது இந்தியாவை தனிமைப் படுத்தக்கூடிய செயல் தான். இவையெல் லாம் இந்தியா - அமெரிக்கா உறவு சிதைந்துவிட்டதையே உணர்த்துகிறது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்பட்ட விஷயத்தில் நியாயம், இறையாண்மை என்பவற்றை எல்லாம் தாண்டி அதிகாரப் போட்டி தான் இப்போது பெரும் பங்கு வகிக்கிறது. டிரம்ப்பை பொறுத்தவரை இந்தியா சட்ட விதிகளை பின்பற்றவில்லை. அதனால் இந்தியா தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் நினைக்கிறார். அதனால் தான் நம் மீது வரி விதித்துள்ளார். இந்தச் சூழலில் ரஷ்ய எண்ணெய்யால் கிடைக்கும் லாபத்தைவிட அதிக வரிகளால் ஏற்படும் பாதிப்பை தான் முதலில் இந்தியா கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வ தற்கு இந்தியா ஒரு சமநிலை உத்தியைக் கடைப்பிடிக்க வேண்டும். எண்ணெய் இறக்குமதிக்கு ரஷ்யாவை மட்டுமே முழு மையாக நம்பக்கூடாது. பல நாடுகளி லிருந்து இறக்குமதி செய்யும் திட்டத்தை யும் வைத்திருக்க வேண்டும். அது எதிர்காலத்தில் எந்தவொரு சர்வதேச அரசியல் பொருளாதார நெருக்கடியையும் இந்தியா எதிர்கொள்ள உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக அதிக லாபம் ஈட்டும் பல எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் நம் நாட்டில் உள்ளன. அவர்கள் அதிகப்படியான லாபத்தை ஈட்டு கிறார்களா என்பதைக் கண்டறிய வேண்டும். அப்படி அவர்கள் லாபத்தை ஈட்டி வந்தால் அந்த லாபத்தில் ஒரு பங்கை அரசு எடுத்து கொள்ள வேண்டும். இதன் மூலம் ரஷ்யா விலிருந்து எண்ணெய் வாங்குவதால் நம்மீது விதிக்கப்பட்டுள்ள அதிக வரியின் காரணமாக பாதிக்கப்படும் இந்திய ஏற்றுமதியாளர்கள் பாதிக்காத வண்ணம் பாதுகாக்கலாம். இவ்வாறு ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.