ஆப்பிரிக்காவின் இதயம் - சிதம்பரம் ரவிச்சந்திரன்
யுகே செஸ்ட்டர் (Chester) விலங்கு காட்சிச் சாலை 28 மில்லியன் பவுண்டு செலவில் ஒன்பது ஹெக்டேர்/22.5 ஏக்கர் பரப்பில் காண்டாமிருகங்கள், நெருப்புக் கோழிகள், ஒட்டகச்சிவிங்கிகள் உட்பட 57 உயிரினங்களுக்காக ஆப்பிரிக்க வசதி என்ற பெயரில் புதிய பகுதியைத் தொடங்கியுள்ளது.
மினி ஆப்பிரிக்கா
“உகாண்டா, கென்யாவைப் போல அமைக்க திட்டமிடப்பட்டா லும் உண்மையில் இந்த இடம் செஸ்ட்டர் என்பதால் இங்குள்ள காலநிலை சிறிது வேறுபட்டது” என்று மேகமூட்டத்துடன் இருந்த திட்டம் தொடங்கப்பட்ட ஒரு நாள் காலை இது பற்றி பேசிய காட்சிச் சாலை தலைவர் ஜேமி கிறிஸ்ட்டன் (Jamie Christon) கூறினார். திட்டம் நிறைவேற்றப்படும் போது இந்த இடத்தில் ஒரு நாள் ஆப்பிரிக்காவின் சவானா புல்வெளிப்பகுதிகளில் வரிக்குதி ரைகள், ஒட்டகச்சிவிங்கிகள், கலை மான்கள், நெருப்புக்கோழிகள் போன்ற பல்வேறு மகத்தான விலங்குகள் அருகருகில் உலா வரு வதைக் காணலாம். ஆப்பிரிக்கா வின் இதயம் (Heart of Africa) என்று அழைக்கப்படும் இது யு கேயில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய காட்சிச் சாலை விரிவாக்கத் திட்டம். புதிய வசதியில் வல்லூறுகள், காண்டாமிருகங்கள், ஹெட்டிரோ செபாலஸ் கிளேபர் (Heteroce phalus glaber) வகையில் உள்ள பாத்தியார்ஜிடே (Bathyergidae) என்ற கொறிக்கும் பிராணிகள் குடும் பத்தை சேர்ந்த சுருக்கங்களுடன் கூடிய பிங்க் நிறத் தோலையும் உரோமங்களற்ற தோற்றத்தையும் உடைய மோல் எலிகள் (naked mole rats), 15,000 வெட்டுக்கிளிகள், 6000க்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் பல புல்லினங்கள் உள்ளன. பல்வேறு புல்வெளி வாழிடங் களை உருவாக்குவதே இதன் நோக் கம். 3.5 ஏக்கர் பரப்பில் அமையும் மணற்பாங்கான, பாறைகளுடன் கூடிய, சவானா புல்வெளிப் பகு தியே காட்சிச் சாலையின் சிறப்பம் சமாக உருவாக்கப்படுகிறது. இங்கு வனத்தில் உலாவுவதைப் போல பல்வேறு உயிரினங்கள் சுதந்திர மாக உலாவருகின்றன. “இங்கு உள்ள ஒட்டகச்சிவிங்கி கள் அருகில் உள்ள சாலையில் நடந்துசெல்லும் காங்கோ காட்டெரு மைகளை மட்டுமே இது வரை பார்த்துள்ளன. பெரும்பாலான ஒட்டகச்சிவிங்கி களும் இங்கேயே பிறந்து வளர்ந்து வாழ்பவை. இவை இங்கு வாழ்வ தற்கேற்ற வகையில் அவை இருக்கும் இடத்தில் 23 டிகிரி செல்சி யஸ் வெப்பநிலை இருக்குமாறு அவற்றின் வாழிடம் உருவாக்கப் பட்டுள்ளது” என்று ஒட்டகச்சிவிங்கி களை பராமரிக்கும் சாம் ஹார்லி (Sam Harley) கூறுகிறார். புதிய இடத்தில் எல்லா விலங்குகளும் வசதியுடன் வாழ உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கூண்டுகளற்ற காட்சிச் சாலை
காட்சிச் சாலை பணியாளர்கள் விலங்குகளை நடைப்பயிற்சிக்கு அழைத்துச்செல்கின்றனர். எல்லா விலங்குகளும் மகிழ்ச்சியுடன் வாழ்வது உறுதி செய்யப்பட்டுள் ளது. எந்த ஒரு விலங்கும் அழுத்தத் திற்கு உள்ளாகாத வகையில் வாழி டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. “காட்சிச் சாலை விரிவாக்கம் ஒரு குழந்தை முதல்முறையாக எழுந்து நடப்பதை போல நிதானமாகவே நடைபெறுகிறது” என்று ஜேமி கிறிஸ்ட்டன் கூறுகிறார். காட்சிச் சாலையின் ஒரு பக்கம் வெள்ளைத் தலை வல்லூறு உணவு அருந்து வதைப் பார்க்கலாம். மற்றொரு பக்கம் 107 பூநாரை களின் கூட்டம், அரிய வகை காதல் பறவைகள், பாலைவனக் கீரிகள் (Meerkats), ஆப்பிரிக்க காட்டு நாய்கள், பன்றி போல இருக்கும், நிலப்பன்றி, எறும்பு தின்னி; எறும்புக் கரடி; ஆப்பிரிக்க எறும்புத் தின்னி என்று அழைக்கப்படும், பூமியில் வாழும் பாலூட்டி விலங்குகளில் ஒரு சிற்றினமான, ஆப்பிரிக்காவின் சகாராப் பாலைவனத்தில் வாழும் ஆர்ட்வார்க்ஸ் (Aardvarks) என்ற விலங்கு போன்றவை உள்ளன. இது தவிர இங்கு கீரிகள், பாலூட்டிகளில் ஒரு சிற்றினமும், சுமார்1.5 அடி/12-16 அங்குலம் அள வும் உள்ள, ஆப்பிரிக்காவின் தெற்கு, கிழக்குப் பகுதியில் காணப் படும் விலங்கான டிக் டிக் (dik-dik) என்ற உயிரினமும் உள்ளன. இந்த புதிய வசதியை தொடங்கும் எண்ணம் 2017 இல் முதல்முதலில் தோன்றியது. கட்டுமானப் பணிகள் நவம்பர் 2022 இல் தொடங்கியது. 2024 கடைசியில் நிறைவுபெற்று திறந்துவிடப்பட்டது. ஆப்பிரிக்காவில் உள்ள உயிர்ப் பன்மயத் தன்மையின் மோசமான நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுவது மற்றும் அழிந்துவரும் உயிரினங்களின் பாதுகாப்பிற்கா கவே இப்பகுதி தொடங்கப்பட்டது. இங்குள்ள சில உயிரினங்கள் காடு களில் அழிந்துவருகின்றன. இங்கு மட்டும் இல்லாமல் உகாண்டா, கென்யாவிலும் பாதுகாப்புப் பணி கள் நடைபெறுகின்றன. 1930களில் மான்செஸ்ட்டரில் ஒரு கேளிக்கை காட்சிச் சாலையில் விலங்குகள் கூண்டுகளில் அடைக் கப்பட்டு, சங்கிலியால் பிணைக்கப் பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட தைப் பார்த்த ஜார்ஜ் மோட்டர்ஸ்ஹெட் (George Motter shead) கூண்டுகள் இல்லாத ஒரு காட்சிச் சாலையை உருவாக்கும் கனவுடன் இந்த செஸ்ட்டர் வன உயி ரியல் பூங்காவைத் முதல் முதலில் தொடங்கினார். ஆண்டுதோறும் 150,000 குழந்தைகள் உட்பட பலர் வருகை தரும் இந்த இடமே யு கேயில் அதிக பார்வையாளர்கள் வருகை தரும் காட்சிச் சாலை.
விலங்குகளின் நல வாழ்வு
“சிலர் விலங்கு காட்சி சாலை என்ற கருத்தே விலங்கு நலனுக்கு எதிரானது என்று எதிர்ப்பு தெரி விக்கின்றன. ஆனால் இதை விலங்குகளின் பாதுகாப்பு என்ற கண்ணோட்டத்துடன் மட்டுமே காண வேண்டும். ஆப்பிரிக்காவின் வன உயிரினங்களை பாதுகாக்கவே இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திட்டம் முடியும்போது இங்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை ஆண்டிற்கு 2,000 பேர் என்ற அள வில் அதிகரிக்கும் என்று நம்பப்படு கிறது. இதன் மூலம் கூடுதலாக கிடைக் கும் 3 மில்லியன் பவுண்டு நிதி உயி ரினங்களின் பாதுகாப்பிற்காக செல விடப்படும்” என்று ஜேமி கிறிஸ்ட்டன் கூறுகிறார். “இந்த திட்டத்தினால் அக்கறை மற்றும் அன்புடன் பரா மரிக்கப்படும் காட்சிச் சாலையில் விலங்குகளின் வாழ்வு வளம் பெறும். பல மணி நேர திட்டமிடல் மற்றும் உழைப்பு இதற்கு முதலீ டாக இருந்தது. முழு வேலைகளும் நிறைவுபெறுவதைப் பார்க்கும் போது பரவசம் ஏற்படும்” என்று பாலூட்டிகள் பிரிவு தலைவர் மார்க் ப்ரேஷ்ஷா (Mark Brayshaw) கூறு கிறார். காட்சிசாலைகள் மற்றும் வன உயிரியல் பூங்காக்களின் வர லாற்றில் செஸ்ட்டர் காட்சிச் சாலை யின் ஆப்பிரிக்காவின் இதயம் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று விலங்குநல விஞ்ஞானிகள் கூறு கின்றனர்.