articles

img

வண்ணக்கதிர் 4

மீன்பிடித் திருவிழா! - கோவி.பால.முருகு

அப்பா நம்ம ஊரு மாரியம்மன் கோயில் குளத்தில எப்பப்பா மீன்பிடித் திருவிழா நடக்கும்?சிணுங்கிக் கொண்டே கேட்டான் எழிலன். “எழிலா .. மாரியம்மன் கோயில் குளத்தில எப்போதும் மீன்பிடித் திருவிழா நடப்பதில்லை. இந்த ஆண்டு மாரியம்மன் கோயில் குளத்தில் மீன்பிடித் திருவிழாவை நடத்துவது என்று பேரூராட்சியில் முடி வெடுத்து இருக்கிறார்களாம். எந்த தேதி  என்பதைத் தண்டோரா போட்டுச் சொல்வார்களாம்.”என்றார். “அப்பா....அன்னிக்கு நானும் மீன் பிடிக்கப் போவேன்.நீங்க தடுக்கக்கூடாது சரியா?”என்றான். “சரிப்பா...உனக்கு மகிழ்ச்சின்னா எனக்கும்தான்” என்றார். எழிலனுக்கு குளத்தில் இறங்கித் தானும் மீன் பிடிக்க இருப்பதை எண்ணி அப்போதே மகிழ்ச்சி கொண்டான்.மீன் பிடிக்கப் பழக வேண்டுமே!என்ன செய்வது? யாரிடம் கேட்பது? என்று யோசித்துக் கொண்டிருந்தான்.அப்போது தான் அவர்கள் வீட்டில்  வேலை செய்து வரும் கதிர்வேலு நினைவுக்கு வந்தான். கதிர்வேலுவிடம்  மறுநாள் கேட்டான். ”அண்ணா எனக்கு மீன் பிடிக்கக் கத்துக்  கொடுப்பீங்களா?” “ஐயா…கண்டிப்பா கத்துக் கொடுக்கிறேன்.எங்க ஐயாவோட பிள்ளைக்குக் கத்துக் கொடுக்காம வேற  யாருக்குக் கத்துக் கொடுக்கப் போகி றேன்” என்றவன், மறுநாள் மாரியம்மன்  கோயில் குளத்திற்கு அழைத்துச் சென்றான்.தான் கையோடு கொண்டு வந்திருந்த மரத்தாலான கைப்பிடி உள்ள  வளையத்தில் வலை மாட்டப்பட்டிருந்தது.வலையை எடுத்துக் கொண்டு குளத்தில் இறங்கினார்கள் இருவரும். தம்பீ..நல்லா பாத்துக்கோங்க.இப்ப இருக்கிற அளவு தண்ணி அன்னைக்கு இருக்காது.தண்ணியை மோட்டார் வைத்து இறைத்துவிடுவார்கள்.அதனால் முட்டியளவு தண்ணிதான் இருக்கும்.ஏராளமானவர் இறங்கிக் குழப்புவதால் மீன்கள் மேலேவந்து அங்குமிங்கும் அலை யும்.அப்போது நாம் மீனைப் பார்த்தவுடன் இந்த வட்டத்தில் சுற்றப்பட்டிருக்கும் வலை யை மீன் மீது வைத்து வளையத்தைத் தரையோடு அழுத்த வேண்டும்.பிறகு  வலைக்கு மேலே தடவிப் பார்த்தால் மீன் மாட்டியிருந்தால் கையில் தட்டுப்படும்.அப்போது மீனை வழுக்காதாவாறு அதன் செவில்களைப் அழுத்திப் பிடித்துக்  கொண்டு மேலே தூக்கி வலையைப் புரட்டினால் அதில் விழுந்துவிடும் அப்புறம் அது தப்பிக்க முடியாது.”என்று சொன்னதோடு அதைச் செயல் முறையிலும் செய்து காண்பித்தான். அப்பா சொன்னது போலவே  தண்டோரா போட்டுச் சொன்னார்கள். ”வருகிற செவ்வாய்க் கிழமை நம்ம ஊரு  மாரியம்மன் கோயில் குளத்தில மீன்பிடித்  திருவிழா நடக்க இருக்கிறது.கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் குளத்திற்குக் காலை பத்துமணிக்கு வந்து விடவேண்டும். அதுபோல ஊராட்சி மன்றத் தலைவர் கொடி அசைத்த பிறகு தான் குளத்தில் இறங்க வேண்டும்” என்று  சொல்லிவிட்டு தண்டோராவை மீண்டும் ஒருமுறை அடித்தான். அன்று காலை ஒன்பது மணிக்கே குளத்திற்குச் சென்றுவிட்டான்.சரியாக ஊராட்சிமன்றத் தலைவர் பத்து மணிக்கு வந்தார்.கையில் வைத்திருந்த சிவப்புக் கொடியை அசைத்தார்.அவ்வளவுதான் ஆண் பெண் சிறுவர்கள்,இளைஞர்கள் என்று அனைவரும் ஒரே நேரத்தில் குளத்  தில் இறங்கினார்கள், அவரவர் வைத்தி ருந்த மீன் பிடிக் கருவிகள் மூலம் மீன் பிடிக்கும் முயற்சியில் இறங்கினார்கள். எழிலனும் தான் கற்று வைத்திருந்த முறை யில் மீன் கண்ணில் படுகிறதா என்று பார்த்துக் கொண்டே நகர்ந்தான். அப்போது ஒரு வகையான் மீன் செல்வதைப் பார்த்துவிட்ட எழிலன் பாய்ந்துபோய் அதை உள்ளே வைத்து வளையத்தை தரையோடு அழுத்தினான்.கண்டிப்பாக மீன் சிக்கியிருக்கும் என்ற நம்பிக்கையோடு தரையில் பதிந்தி ருக்கும் வலையின் மேல் தடவிப் பார்த்தான்.அப்போதுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது,கையில் எதோ குத்தியது போன்ற உணர்வு.ஆஅஅ...…என்ற சத்தத்தோடு கையை அவசரமாக வெளியே எடுத்தான்.வலது கையின் நடு விரலில் முள் குத்தியதுபோல சிறிதாக இரத்தம் கசிந்தது. பொறுக்க முடியாத வலி. தேள் கொட்டியதைப் போல கடுப்பு.அய்யோ..இங்க வாங்களேன்..என் கையில எதோ கடித்துவிட்டது.வலி தாங்க முடியவில்லை”என்றவன் ஓவென்று அழ ஆரம்பித்து விட்டான். எல்லோரும் அவனருகே கூடிவிட்ட னர். உடனடியாகக் கரைக்கு அழைத்து வந்தனர் .இரத்தம் வந்த இடத்தைப் பார்த்த  கூட்டத்திலிருந்த ஒருவர் தேளிமீன் கொட்டி யிருக்கு.அது தேளைவிடக் கொடுமை யான விஷம் உடையது.பெரி யவர்களுக்கே தாங்காது.சின்னப் பையன்  வலி பொருக்க மாட்டான்.உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று சொல்ல.எழிலன் வலி  பொறுக்க முடியாமல் துடித்துக் கொண்டி ருந்தான்.அங்கிருந்த அவன் வீட்டு வேலை யாள் கதிர்வேலு அவனைத் தூக்கி மிதி வண்டியில் உட்கார வைத்து வேகமாக மிதிக்க ஆரம்பித்தான்.கதிர்வேலு கடைத்தெருவில் இருக்கும் வேணு டாக்டரிடம் அழைத்துச் சென்றான்.என்ன  நடந்தது என்பதை டாக்டர் கேட்க நடந்த தைச் சொன்னான். அதற்குள் வீட்டிற்கு செய்தி போய்விட்டது.எழிலனின் அப்பாவும் அம்மாவும் அடித்துப் பிடித்து பதற் றத்துடன் வேணு மருத்துவ மனைக்கு வந்து சேர்ந்தர்கள்.அதற்குள் டாக்டர் வலி தெரியாமல் இருக்க மறத்துப் போகும்  ஊசியை அவ்விடத்தில் போட்டார்.மேலும்  விஷ முறிவிற்கான மருந்தையும் கொடுத்து போட்டுக் கொள்ளச் சொன்னார். வலி ஓரளவு குறைந்தது என்றாலும்.இரண்டு நாள்கள் வரை அந்த இடம் வலித்துக் கொண்டே இருந்தது.அப்போது தான் எழிலனுக்கு ஒரு உண்மை புரிந்தது.  இன்பத்திலும் துன்பம் இருப்பது.