articles

img

எதிரியின் உடலுக்குள்ளிருந்து உயிர் தப்பும் ஈல்கள்

எதிரியின் உடலுக்குள்ளிருந்து உயிர் தப்பும் ஈல்கள்

ஒரு திகில் திரைப்படத்தில் வரும் காட்சி போல ஜப்பானிய ஈல்கள் (Eels) தன்னை விழுங்கிய எதிரியின் உடலுக்குள் இருந்து தப்பித்து வெளிவருகின்றன. விழுங்கிய இரையை ஒரு முறை தன் உடலுக்குள் நுழையவிட்டு பின் வெளியில் வரச் செய்வது போல உள்ள மீனின் இச்செயல் கற்பனையில்லை. உண்மையில் நிகழ்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

எதிரியின் வயிற்றில் இருந்து  உயிர் தப்பும் ஈல்

டார்க் ஸ்லீப்பர் மீனால் (dark sleeper fish)  விழுங்கப்பட்ட ஈல்கள் உயிர் பிழைத்து எதிரி யின் உடலில் இருந்து பாதுகாப்பாக வெளிவரு வதை ஜப்பானிய விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இது உயரம் தாண்டுவதில், பின்னோக்கி, தலையை முதலில் வைத்து குச்சி யைத் தாங்குவதைக் குறிக்கும் ஃபோஸ்பரி ஃப்ளாப் (fosbury flop) என்று அழைக்கப்படும் நுணுக்கத்தை நினைவூட்டுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மீனின் உடலிற்குள் நுழையும் ஈல்கள் அதன் உணவுக்குழாயை அடைந்து வாலை செதில்கள் வழியாக நீட்டுகின்றன. தலையை இரையின் உடலில் இருந்து விடுவித்துக் கொண்டு விடுதலை பெறுகின்றன. ஈல்கள் இரை பிடித்த மீனின் வாய் வழியாக தப்பிக்கின்றன என்று இதுவரை கருதப்பட்டது. “ஆனால் இதற்கு எதிர்மாறாக நிகழ்கிறது. எதிரியின் உடலில் இருந்து வெளியில் வர கடின மாக பாடுபடும் ஈல்களின் முயற்சியை முதல் முறையாக காணொலியில் படமெடுத்து பார்த்த போது பரவசம் ஏற்பட்டது” என்று ஆய்வுக் கட்டு ரையின் முதல் ஆசிரியரும் நாகசாகி பல்க லைக்கழக விஞ்ஞானியுமான யுஹ ஹேஸ்ஹாவா (Yuha Hasegawa) கூறுகிறார். இது பற்றிய ஆய்வுக் கட்டுரை கரண்ட் பயாலஜி (Current Biology) என்ற இதழில் வெளிவந்துள்ளது. இந்த ஆய்விற்காக 104 ஈல்கள் பயன் படுத்தப்பட்டன. சேகரிக்கப்பட்ட பதினோரு டார்க் ஸ்லீப்பர் மீன்களில் ஒரு சமயத்தில் ஒரு மீனுடன் ஒரு ஈல் தொட்டியில் விடப்பட்டு ஆராயப்பட்டது. ஈல்களின் வயிற்றுக் குழி மற்றும் வால் பகுதி யில் பேரியம் சல்ஃபேட் என்ற வேதிப்பொருள் செலுத்தப்பட்டது. விழுங்கப்பட்ட ஈல் எக்ஸ் கதிர் காணொலி தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்காணிக்கப்பட்டது. 32 ஈல்கள் இரை பிடி மீனால் பிடிக்கப்பட்டு விழுங்கப்பட்டன. சில ஈல்கள் இரை பிடி மீனின் வயிற்றுக்குள் முழுமையாக சென்றன. வெளிவர வழி தேடி அவை வட்டமடித்தன. இவற்றில் ஒன்பது ஈல்கள்  வால் முதலில் என்ற முறையில் மீனின் உட லில் இருந்து தப்பித்தன. இரை பிடி மீனுக்கு இந்த செயல்முறையில் எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. ஆனால் சில சமயங்களில் உயிர்  தப்பி வெளியில் வந்த சில ஈல்கள் சிறு காயங்  களுடன் காணப்பட்டன. உயிர் பிழைக்கும்  முயற்சியில் எல்லா ஈல்களும் வெற்றிபெற வில்லை.

ஜப்பானிய ஈல்களின் அறிவுத்திறன்

நான்கு ஈல்கள் மீனின் செதில்களில் இருந்து தங்கள் வால் பகுதியை விடுவித்துக் கொண்டன என்றாலும் அவற்றால் மீனின் உட லில் இருந்து முழுமையாக வெளிவர முடிய வில்லை. இரண்டு ஈல்கள் தங்கள் வால் பகுதி யை இரை பிடி உயிரினத்தின் உணவுக் குழா யில் நீட்டிப்பதற்கு பதில் செதிலில் உள்ள சிறு  துளையின் (vent) வழியாக நீட்டித்தன. இத னால் அவை தங்கள் முயற்சியில் தோல்வி யடைந்தன. ஈல்கள் பொதுவாக இரை பிடி உயி ரினத்தின் வயிற்றில் அகப்பட்டு உயிரிழக்கின் றன என்றே முந்தைய ஆய்வுகள் கூறின. “ஜப்பானிய ஈல்கள் எதிரியால் விழுங்கப் பட்டு அவற்றின் உடலில் இருந்து உயிர் பிழைத்து வெளியில் வருகின்றன என்று கண்டு பிடிக்கப்பட்டது இதுவே முதல்முறை. ஜப்பா னிய ஈல்கள் மட்டுமே இரை பிடி உயிரினத்தால் பிடிக்கப்பட்டு அதன் உணவுப்பாதைக்குள் சென்ற பின் மீண்டும் உயிருடன் வெளிவரும் திறன் பெற்ற ஒரே உயிரினம் என்று இந்த புதிய ஆய்வு உறுதி செய்கிறது” என்று  ஆய்வுக் கட்டுரையின் மற்றொரு ஆசிரியர் யூயுகி கவபாட்டா (Yuuki Kawabata) கூறுகிறார். இரை பிடி மீன் ஈலின் தலையை முதலில் விழுங்கும் போது அதன் வால் பகுதி விழுங்கிய மீனின் உணவுக்குழாய்க்குள் இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாகிறது. நீட்டிக்கப்பட்ட ஈலின் உடல் வடிவம் இதற்கு உதவியாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். வெற்றி கரமான ஈலின் தப்பித்தலுக்கு உதவும் குறிப்பி டத்தக்க அம்சங்களை இதே போன்ற உடல் வடி வத்துடன் உள்ள மற்ற ஈல் மற்றும் மீனி னங்களை பரிசோதிப்பதன் மூலம் ஆராய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். “காணொளி எக்ஸ் கதிர் படக்கருவி மூலம் படமெடுப்பதற்கு முன்புவரை எதிரியின் வயிற்  றில் இருந்து ஒரு ஈல் தப்பிக்கும் என்று நாங் கள் நினைக்கவில்லை” என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமியில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினமும் வாழ்க்கைச் சூழ்நிலை யை சமாளித்து வாழ்வதற்கேற்ற அறிவுத்திற னுடனேயே பிறந்துள்ளன என்பதை இந்த ஈல்கள் உணர்த்துகின்றன.