விளையாட்டு உலகின் இதயங்களை வென்ற அனயா! - சி.ஸ்ரீராமுலு
“பரபரப்புக்கு எப்போதும் பஞ்சமில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் விளையாட்டு உலகில் ‘ஜெண்டில்மேன்’ விளையாட்டு என்று அழைக்கப்படுவது கிரிக்கெட். இதுவும் ஒரு பாரம்பரிய விளையாட்டு என்பதால், வீரர்களின் நல்லொழுக்கம், விளையாட்டுத்திறன் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. இந்த ஜெண்டில்மேன் விளையாட்டில் மறைக்கப்பட்ட மறுபக்கத்தையும் இருண்ட யுத்தத்தையும் துணிச்சலுடன் வெளிப்படுத்தி உள்ளார் ஒரு இளம் வீரர்” 23 வயதான அவர் தனது மாற்றப் பய ணத்தைப் பகிர்ந்து கொண்ட பிறகு சமூக ஊட கங்களில் புயலைப் கிளப்பியுள்ளார். இதில், “கிரிக்கெட் உலகம்” பற்றிய அதிர்ச்சி யூட்டும் தகவல்களையும் ஆர்யனிலிருந்து அனயா வரையிலான மாற்றத்தையும் பகிர்ந்து ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர வைத்து வருகிறார். அவர் யார்? கிரிக்கெட் மீதான அதீத ஆர்வத்தால் அதில் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட வர். தனது தந்தையைப் போலவே சிறந்த கிரிக்கெட் வீரராக புகழின் உச்சிக்கு வர வேண்டும் என்றும் விரும்பியவர். இந்திய அணிக்கு விளையாட வேண்டும் என்ற கன வில் உள்ளூர் கிளப் கிரிக்கெட்டில் இஸ்லாம் ஜிம்கானா உள்ளிட்ட சில கிளப் அணிக்கு 12 வயதில் விளையாடியவர். உள்ளூர் கிளப் கிரிக்கெட்டில் முஷீர் கான், சர்ப்ரஸ்கான், யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற பிரபல இளம் வீரர்களுடன் விளை யாடி வந்துள்ளார். தொடர்ந்து அவர்களுடன் பல போட்டிகளில் பயணித்து பயிற்சியும் பெற்று இருக்கிறார். தந்தையின் அர்ப்பணிப்பு, கிரிக்கெட் மீதான காதல் அவருக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. இதனால் கிரிக்கெட் தான் என் லட்சியம், எதிர்காலம். என் தந்தையைப் போல நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு தனக்கும் கிடைக்கும் என திறமைகளை மெருகேற்றி வந்தவர் ஆர்யன் பங்கர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து பேச்சாளர், பயிற்சியாளர், வர்ணனையாளர் சிறந்த ஆல்ரவுண்டர் சஞ்சய் பங்கர் மகன் இவர். பாதை மாறிய பயணம்... “தனக்கு எட்டு அல்லது ஒன்பது வயது இருந்த போது, பெண்ணின் குணாதிசயங்கள் ஏற்பட்டது. அப்போது பெண்ணாக மாற வேண்டும் என்ற எண்ணத்தில் அம்மாவின் துணிகளை எடுத்து அணிவேன். பின்னர், கண்ணாடியை பார்த்து ‘நான் ஒரு பெண் ணாக இருக்க விரும்பினேன்’. பிறகு, பாலின மாற்று சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தேன். அதை பெற்றோரிடம் தெரிவித்த போது மறுப்பு தெரிவிக்கவில்லை”. அதைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கு சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு தனது பெயரை அனயா பங்கர் என மாற்றிக் கொண்டார். தனது தந்தை கிரிக்கெட் உலகின் நன்கு அறி யப்பட்ட நபர் என்பதால், தனது பாலின பிரச்ச னையை மறைக்க வேண்டிய கட்டாயமும் ரகசியமாக வைத்திருக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டார். புயல் கிளப்பும் பூ... 23 வயதாகும் அனயா பங்கர், தற்போது இங்கிலாந்து நாட்டில் வசித்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக ஹார்மோன் மாற்று சிகிச்சைக்கு உட்படுத்திக் கொண்ட சிகிச்சை தொடர்பான செய்திகளை தொடர்ந்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார். “சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்து வரு கிறது. என் தந்தை நாட்டைப் பிரதிநிதித்து வப்படுத்தி பயிற்சி அளிப்பதைப் போல நானும் நாட்டிற்காக விளையாட வேண்டும் என கனவு காண ஆரம்பித்தேன். ஆனால் அதை கைவிட வேண்டும் என்று நான் ஒரு போதும் நினைத்ததில்லை. கிரிக்கெட் மீதான எனது ஆர்வம் இப்போதும் தொடர்கிறது. இருப்பினும் ஒரு திருநங்கை மகளிர் அணி யில் விளையாடுவது என்பது அவ்வளவு சுல பமல்ல. மிகவும் கடினமானதும் கூட. மறு பக்கத்தில், கிரிக்கெட் விதிகள் இடம் தர வில்லை. மகளிர் கிரிக்கெட்டில் திருநங்கை கள் பங்கேற்பதை தடுக்கும் வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்தது தனக்கு பெருத்த ஏமாற்றம் அளிப்ப தால் பெண்கள் விளையாட்டுகளில் திரு நங்கைகளின் தகுதியை தீர்மானிக்க புதிய வரம்புகளை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அனயா விடுத்த கோரிக்கை கிரிக்கெட் உல கில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. எதிர்ப்பும்-ஆதரவும்! நான் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டபோது கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் தனக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்தது. எனது அடையாளத்திற்காக மன ரீதியான சித்ரவதையை மட்டுமல்ல, பாலி யல் துன்புறுத்தலும் எதிர்கொள்ள வேண்டி யிருந்தது. எனது மாற்றுப் பாலின அடை யாளத்தை அறிந்த பெரிய பெரிய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர்கள் கூட, எனக்கு நிர்வாணப் படங்களை அனுப்பினர். அவர்களின் ஆசைக்கு நான் உடன்படு வேன் என எதிர்பார்த்தார்கள். ஆனால், நான் பாதுகாப்பாக இருக்க விரும்பினேன். என்னை கெட்ட எண்ணத்துடன் பார்ப்பதை நான் விரும்பவில்லை. இதைச் செய்தவர்கள் யார் யார் என்பதை நான் சொல்ல விரும்ப வில்லை”. சில கிரிக்கெட் வீரர்கள் அவர்களது நிர்வாண படங்களை அனுப்பி வருகின்றனர். சிலர் எனது நிர்வாண படங்களை அனுப்பி வைக்குமாறு தகவல் அனுப்பி வரு கின்றனர். ஒரு நபர் எல்லோர் முன்னிலை யிலும் என்னைத் துன்புறுத்தினார். அது மட்டுமல்ல, உங்கள் காரில் செல்லலாம். நான் உங்களுடன் தூங்க விரும்புகிறேன் என்றெல்லாம் தான் சந்தித்த சில கசப்பான, மிகவும் மோசமான, தொந்தரவு அனுப வங்களை ஒரு நேர்காணலில் வெளிப்படை யாக அறிவித்திருப்பது கிரிக்கெட் உல கத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த விளை யாட்டு உலகத்தையே அதிரச் செய்துள்ளது. “கிரிக்கெட் உலகம் பாதுகாப்பின்மை, நச்சுத்தன்மை வாய்ந்த ஆண்மையால் நிறைந்துள்ளது” என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவு கிரிக்கெட் உலகில் ஒரு தொழிலைத் தேடும் போது ஒரு திருநங்கை எதிர்கொள் ளும் சவால், திருநங்கையின் பயணம் குறித்த அனயா பங்கர் குரல், அவரது பதிவுகள் நெட்டி சன்களின் இதயங்களை வென்றது.