articles

img

காந்தியின் கனவுகளை காணாத பட்ஜெட்

“காந்தியின் கிராம ராஜ்யக் கனவுகளை காணமுடியாத பட்ஜெட் இது” என மாநிலங்கள வையில் மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி உறுப்பினர் டாக்டர் வி. சிவதாசன் உணர்ச்சிப்பூர்வமாக விமர்சித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் திங்கள் அன்று நடை பெற்ற விவாதத்தில் அவர் முன் வைத்த கருத்துக்கள்:

காந்தியின் கனவுகளும் நடைமுறையும் “

காந்திஜியின் நினைவு தினத் தை ஜனவரி 30 அன்று கொண்டா டினோம். அவர் நம் இதயங்களில் வாழ்வதாக கூறுகிறோம். ஆனால் இந்த பட்ஜெட் ஆவணங்களில் காந்திஜியை காண முடிகிறதா? ‘ஏழைகளின் முகங்களைப் பாருங் கள், இந்த பட்ஜெட் அவர்களுக்குப் பயன்படுமா என்று உங்களையே கேட்டுப்பாருங்கள்’ என்று காந்திஜி சொன்னார். ஆனால் இந்த பட் ஜெட்டில் கிராமப்புற இந்தியா முற்றி லுமாக புறக்கணிக்கப் பட்டுள்ளது.”
குறைந்த பட்ஜெட் ஒதுக்கீடு


விளிம்புநிலை மக்கள் புறக்கணிப்பு “

பழங்குடியினர், தலித் மாண வர்களின் கல்வி உதவித்தொகை குறைக்கப்பட்டுள்ளது. அங்கன் வாடி, ஆஷா, மதிய உணவு ஊழியர்களுக்கு ஒரு பைசா கூட உயர்வு இல்லை. கிராமப்புற மக்க ளும் விளிம்புநிலை மக்களும் முற்றிலும் புறக்கணிக்கப் பட்டுள்ளனர்.

வயநாடு குறித்த வேதனை

“வயநாடு மக்களின் கண்ணீ ரைத் துடைக்க இந்த அரசு மறுக்கி றது. வயநாடு என்பது இந்தியக் குடி யரசின் ஒரு பகுதி என்பதை இந்த அரசுக்கு நினைவூட்ட விரும்பு கிறேன்.”

அரசின் தவறான கொள்கைகள்

  - மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் வெறும் 14.2% மட்டுமே பட்ஜெட் ஒதுக்கீடு - அமெரிக்காவில் இது 23% ஆக உள்ளது -மக்கள் நலனுக்கான வளங்க ளை திரட்டுவதற்கு இந்த அரசுக்கு தொலைநோக்குப் பார்வை யே இல்லை” நலத்திட்டங்களில் வெட்டு

- மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் - 2020-21-ல் ரூ.1.1 லட்சம் கோடியிலிருந்து தற்போது ரூ.86,000 கோடி யாக குறைப்பு - “ஏராளமான திட்டங்களை அறி வித்து விட்டு, அவற்றுக்கு செலவே செய்யவில்லை”\

- மதிய உணவு திட்டத்திற்கு வெறும் ரூ.12,500 கோடி ஒதுக்கீடு

- பாசன திட்டங்களுக்கான நிதி ரூ.11,840 கோடியிலிருந்து ரூ.10,764 கோடியாக குறைப்பு
இந்தியாவின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ரூபாய் மதிப்பு வேகமாக சரிந்து வரு கிறது”

-“பொதுத்துறை நிறுவனங்களை விற்று ரூ.47,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளனர்”

- நாட்டின் சொத்துக்களை விற்கா தீர்கள். நாட்டின் பாரம்பரியத்தை வெளிநாடுகளுக்கு விற்காதீர் கள். மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுங்கள்” என வேண்டுகோள் விடுத்தார்.