articles

img

செங்கொடியின் விடாப்பிடியான போராட்டத்தால் விளைந்த வெற்றி! - ஜி.செல்வா

நவீன தாராளமயமாக்கல் கொள்கையின் வெளிப் பாடாக வாழ்விட உரிமையை பறிக்க கடந்த அதிமுக அரசாங்கம் எடுத்த முயற்சிகளை மக்கள் சக்தியை முன்வைத்து நடத்தப்பட்ட போராட்டங்களால், பழைய அரசாணைகள் திரும்பப் பெற்று திருத்தப் பட்டு,  மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய அரசாணை களை திமுக அரசு வெளியிட்டுள்ளது.  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஒரு சில கிலோ மீட்டருக்கு அருகாமையிலிருந்த பரந்து விரிந்த  கேசவ பிள்ளை பூங்கா(கே.பி.பார்க்)  மைதா னத்தை ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமைக்காக 1983இல் 35 பிளாக் கொண்ட  தமிழ்நாடு குடிசை மாற்று  வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றி யது தமிழக அரசு. கால ஓட்டத்தில் கட்டிடங்கள் பழு தடைய ஒன்று முதல் பதினான்கு பிளாக்குகள் 2008ஆம் ஆண்டு இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் எழுப்பப் பட்டு சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு ஒப்படைக்கப் பட்டது.

அடுத்த கட்டமாக 15 முதல் 35 பிளாக்குகள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு குடிசை மாற்று வாரியம் திட்டமிட்டது. இதற்கு ஏற்றாற்போல ஏற்கனவே குடியிருப்பில் குடியிருந்த  864 குடும்பங்க ளுக்கு 18 மாதத்தில் புதிய குடியிருப்புகளை கட்டித் தருவதாக 2016ஆம் ஆண்டு உறுதியளித்த குடிசை  மாற்று வாரியம் அதுவரை தற்காலிக குடியிருப்பில் குடியிருப்பதற்கு ஏதுவாக 8000 ரூபாய் மட்டும் வாடகை பணமாக கொடுத்தது. இப்படி ஒரு தவணை யாக கொடுத்த எட்டாயிரம் ரூபாயில் 18 மாதங்களுக்கு சென்னை மாநகரத்தில் வாடகை வீடு எப்படி கிடைக்கும். எனவே சொந்தமாக பணம் செலவழித்து வாடகை வீடுகளில் இருப்பதற்கு வாய்ப்பற்ற வழி தெரி யாத சுமார் 200 குடும்பங்களுக்கு புதிய குடியிருப்பு கட்டப்படும் இடத்தின்  கட்டிடம் எட்டுக்கு எட்டு சதுர அளவில் தகரக் கொட்டகையில் தற்காலிக குடியி ருப்பை குடிசை மாற்று வாரியம் செய்து கொடுத்தது. அரசு அறிவித்தப்படி பழைய பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்படுவதை மக்கள் பார்த்துக் கொண்டேயி ருந்தனர். மூன்றடுக்கு கட்டிடங்கள் எட்டடுக்கு கட்டி டங்களாக மாறின.  மீதியிருந்த இடங்களில் தனியாக 11 அடுக்கு மாடிகளை கொண்ட  1056 குடியிருப்புகள் உருவானது. கட்டிடங்கள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டன. ஆனால் சம்பந்தப்பட்ட மக்களிடம் ஒப்படைக்கவில்லை. இழுத்தடித்த குடிசை மாற்று வாரியம் இறுதியாக 2020 ஜனவரி 26 ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மக்களுக்கு வீடுகளை முழுமையாக ஒப்படைத்து விடுவோமென வாய்மொழி உத்தரவு அளித்தது. ஆனால் நடை முறைப்படுத்தப்படவில்லை.

கொரோனா பரவிய நேரத்தில் இந்த மக்களுக்காக கட்டப்பட்ட குடிசை மாற்று வாரியத்தின் புதிய குடியி ருப்புகளை கொரோனா தொற்று சிகிச்சை மையமாக மாற்றப் போவதாக அரசு அறிவித்தது. துடிதுடித்துப் போயினர் சம்பந்தப்பட்ட மக்கள்.என்றேனும் புதிய இடத்தில தாங்கள் குடி வைக்கப்படுவோம் என்ற நம்பிக்கையோடு எல்லாக் கஷ்டங்களையும் சகித்துக் கொண்டு வாழ்ந்துவந்த மக்களுக்கு இச்செய்தி பேரி டியாக  இறங்கியது; கொரோனா கொடுமை போதாது  என்று, அவர்களுக்கான குடியிருப்பும் இப்போது பறிக்கப்படும் ஆபத்து வந்தது.  கோரிக்கை மனுக்கள் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டன. பயன் ஏதும் கிடைக்கவில்லை. ஊரடங்கு காலம். பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலை, என்னதான் செய்ய முடியும்.? ஒரே வாய்ப்பு நீதிமன்றம்தான். நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா பெயரில்  வழக்கு  தொடரப்பட்டது.  “கே.பி பார்க் குடிசை மாற்று வாரிய குடி யிருப்பு பகுதியை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும். தற்காலிக குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை ஆய்வு செய்து அரசு அறிக்கை சமர்ப்பிக்க  வேண்டுமென” நீதிமன்றம் மே 21 ல் உத்தரவிட்டது. ஆனால்  அரசின் நிர்வாக அமைப்புகள் கொரோனா தொற்று குறைந்த பிறகு செப்டம்பர் மாதத்தில்தான் ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பித்தனர்.   நீதிமன்றமும் அதிகாரி களைப் பார்த்து எளிய மக்களின் பக்கம் நின்று எந்த கேள்வியும் கேட்கவில்லை..

இதே காலகட்டத்தில், சென்னை மருத்துவக் கல்லூரி பின்புறம் கூவம் கரையோரம் பல்லாண்டு களாக குடியிருந்து வந்த மக்களை, ஆக்கிரமிப்புகள் என்ற பெயரில் டிசம்பர் 29, 2019-இல் நூற்றுக்கணக் கான காவல்துறையினர் தலைமையில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் வீடுகளை இடிக்கத் தொடங்கினர். எதிர்த்து கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் ஆசைத் தம்பி காவல்துறையி னரால் தாக்கப்பட்டார். அடுத்த நாள் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நேரடியாக களத்திற்கு வந்தார்.  அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை தொடர்ந்தது. கல்வியாண்டு நிலுவையில் இருப்பதால் வீடுகள் இருப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்த னர். ஆனால் மக்களின் அச்சத்தை நிராயுதபாணியான அவர்களின் சூழலை தனக்கு மூலதனமாக்கி காவல் துறையின் மிரட்டல்களுடன் சிறிது சிறிதாக மக்களை சென்னை மாநகரை விட்டு வெளியேற்ற தொடங்கியது. இவ்வாறு வெளியேற்றப்படும் மக்களுக் காக சென்னையிலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் தனியாக கட்டப்பட்ட குடியிருப்பு பகுதியில் குடியேற்ற நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள ஆரம்பித்தது. அரசுக்கு அனுப்பப்பட்ட மனுக்கள், அதிகாரிகளை சந்தித்த முறையீடுகள் அத்தனையும் கண்டுகொள்ளப்படவில்லை. 2020 டிசம்பர் 4 அன்று ஒவ்வொரு குடும்பமும் தனித்தனியே தங்களது வசிப்பிட ஆதாரங்களுக்கான ஆவணங்களை உள்ள டக்கி சென்னை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. சரியான புள்ளியில் மக்கள் போராட்டம் நகர்வதை கவனித்து அதிகாரவர்க்கம் அடுத்த சில தினங்களிலேயே புல்டோசர்களுடன் குடி யிருப்புகளை இடிக்க தொடங்கினர். என்ன செய்வது, ஏது செய்வது என தெரியாது, திகைத்த மக்கள், அடுத்த கணமே சென்னை மாநகரின் ஒட்டு மொத்த கழிவுகளும் சுமந்துகொண்டு நகரும் கூவம் ஆற்றில் இறங்கி, போர்க்குரலை எழுப்பத் தொடங்கினர். 

ஊடகங்கள் நேரடி ஒலிபரப்பு செய்தும் எந்த பொறுப்புமிக்க உயர் அதிகாரியும் நேரில் வந்து மக்களோடு உரையாடவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களின் நம்பிக்கை வார்த்தைகள் அவர்களை கரையேற வைத்தது. தொடர்ந்து திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித், கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள் ளிட்டோர் அப்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களை நேரில் சந்தித்து வலுக்கட்டாய மறு குடியமர்வு தவிர்க்க வலியுறுத்தினர். ஓபிஎஸ் உறுதி யளித்த அடுத்த சில நிமிடங்களில், நூற்றுக்க ணக்கான போலீசார் துணையுடன் வீடுகளை அதிகாரி கள் இடிக்கத் தொடங்கினர். தடுக்க முயன்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் முரளி, எஸ்.கே.முருகேஷ், ஈ.சர்வேசன், எம்.பி.கிருஷ்ணன், ஆர். குமார் உள்ளிட்டு ஆதரவு தெரிவிக்க வந்திருந்த திரைப்பட இயக்குனர் கோபி நயினார் போன்றோரை காவல்துறை கைது செய்து, அப்பாவி மக்களை நிராயு தபாணியாய் குடியிருப்புகளை தரைமட்டமாக்கினர்.  சுமார் 2000 குடும்பங்கள் 40 கிலோ மீட்டருக்கு அப்பால் பெரும்பாக்கம் பகுதியில் குடியமர்த்தப் பட்டனர். சென்னை மாநகரத்திற்கு உள்ளே வீடு  வேண்டும் என உரிமை முழக்கமிட்டு அதே பகுதியிலேயே தங்கி 178 குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழிகாட்டுதலில் போராடத் தொடங்கினர்.

இந்த சூழலில்தான் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி புளியந்தோப்பு கே.பி. பார்க் குடிசை மாற்று வாரிய பழைய குடியிருப்புகளை இடித்து விட்டு புதிதாக கட்டப்பட்டுள்ள 864 குடியிருப்புகளில் சம்பந்தப்பட்ட மக்களை ஒதுக்கீடு செய்யாமல், அதே இடத்தில் புதிதாக கட்டப்பட்ட 1056 குடியிருப்புக ளிலும் மக்களை குடியமர்த்தாமல் இருப்பது ஏன்?  அரசின் திட்டம்தான் என்ன? என கே.பி.பார்க் கட்சி கிளைச் செயலாளர் அன்பு பெயரில் கேள்வி எழுப்பப்பட்டது. “864 குடியிருப்புகளை சம்பந்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு செய்ய இருப்பதாகவும், புதிதாக கட்டப் பட்டுள்ள 1056 குடியிருப்புகளை கூவம் பக்கிங்காம் மற்றும் அடையாறு கால்வாய் ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்து வசித்து வருபவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக” அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக் கப்பட்ட மேற்கண்ட தகவலிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி இரண்டு  கோரிக்கைகளை முன்வைத்து இயக்கங்களுக்கு திட்டமிட ஆரம்பித்தது. ஒன்று, கே.பி. பார்க் குடிசை மாற்று வாரிய பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிதாக கட்டப் பட்டுள்ள 864 குடியிருப்புகளில் சம்பந்தப்பட்ட மக்கள் குடியமர்த்தப்பட வேண்டும்.  இரண்டு, சத்தியவாணி முத்து நகரிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டாலும், தொடர்ந்து அப்பகுதியிலேயே தற்காலிக குடிசைகளை உருவாக்கி தங்கியிருக்கும் மக்களுக்கு கே.பி. பார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள 1056 குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளின் அடிப்படையில் இரண்டு பகுதியிலும் உள்ள மக்களை அவரவர்களின் தன்மைக்கும் அங்குள்ள சூழல்களுக்கும் ஏற்ப போராட்ட இயக்கங்களும் கோரிக்கைகளும்  முன்னெ டுக்கப்பட்டது. அன்றைய துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களை நேரடியாக சந்தித்து அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா ஆகியோர் மனு அளித்தனர். சத்தியவாணி முத்து நகர் மக்களுக்கு 2 கிலோ மீட்டர் அருகாமையில் கே.பி. பார்க் பகுதியில் கட்டப் பட்டுள்ள 1056 குடியிருப்புகளில் குடியமர்த்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. சத்தியவாணி முத்து நகர் மக்களின் கோரிக்கையை முன்வைத்து 2021 பிப்ரவரி 17ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் வாழ்விட உரிமைக்கான போராட்டம் நடை பெற்றது. மறுபுறம், தகர கொட்டகையில் வசித்துவரும் கே.பி. பார்க் மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து  கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்த அ. சவுந்தரராசன் தலைமையில் 864 குடியிருப்புகளில் சம்பந்தப்பட்ட மக்களை குடியமர்த்த வலியுறுத்தி போராட்டம், அதில் அரசு அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி உயர் அதிகாரி களை சந்தித்து மனு கொடுப்பது என நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு கட்டத்தில் அதிகாரிகள் மேம்போக்காக பிரச்சனையை அணுகுவது காலம் கடத்துவது என்ற நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கிய  “குடிமனையில் குடியேறும் போராட் டத்தை” மார்க்சிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. கோரிக்கை களின் பின்னால் திரண்ட மக்களைக் கண்டு குவிந்தி ருந்த காவல்துறை திகைத்தது. எழுத்துப்பூர்வமாக ஒரு  மாதத்தில் குடியமர்த்துவதாக உறுதியளித்தனர்.

இத்தனை போராட்டங்களுக்குப் பிறகு 2021 பிப்ரவரி 5ஆம் தேதி அப்போதைய திமுக சட்டமன்ற உறுப்பினர், அதிகாரிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழும்பூர் பகுதிச் செயலாளர் கே. முருகன் முன்னிலையில் குலுக்கல் மூலம் 864 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டது. வீடுகள் கிடைத்துவிட்டதே என்ற மகிழ்ச்சி கணநேரத்தில் பொய்த்துப் போனது.ஒவ்வொரு குடும்பமும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கட்ட வேண்டுமென குடிசை மாற்று வாரியம் துண்டு சீட்டில் அறிவித்தது.சட்டமன்ற தேர்தல் முடிந்து புதிய ஆட்சி பொறுப்பேற்றவுடன் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். குடிசை மாற்று வாரிய மேலாண்மை இணை இயக்குனர் நேரில் சந்தித்து ஒரு லட்சத்து ஐம்பதா யிரம் கட்ட சொல்லி வற்புறுத்துவது நியாயம் அல்ல அது ரத்து செய்யப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி யின் சார்பில் வற்புறுத்தப் பட்டது. துறை செயலாளர் உடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.ஆனால், புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக அரசோ வாழ்விடம் சார்ந்த பிரச்சனைகளில் கடந்த அதிமுக அரசு ஒன்றிய பாஜக அரசோடு இணைந்து எடுக்கப்பட்ட முடிவுகளை அமலாக்க தொடங்கியது.  குடிசை மாற்று வாரிய குடியிருப்பு களில் குடியேற ஒன்றரை லட்சம் அவசியம் கட்ட  வேண்டும். பணம் கட்டுவதற்கு வாய்ப்பு இல்லாதவர்க ளுக்கு தனியார் நிதி நிறுவனங்களில் வட்டிக்கு பணம் வாங்கி தருவதாக பேச ஆரம்பித்தனர். 

உடனே மார்க்சிஸ்ட் கட்சி தனது எதிர்ப்பை மக்களைத் திரட்டி வெளிக்காட்டத் தொடங்கியது. குடிசை மாற்று வாரிய பழுதடைந்த குடியிருப்பு களை இடித்து புதிதாக கட்டப்படும் வீடுகளில் சம்பந்தப்பட்ட மக்கள் குடியேற ஒன்னரை லட்சம் பணம் கேட்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெ டுத்து இயக்கங்கள் நடத்தப்பட்டன. மத்திய சென்னை மாவட்டத்திலுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஜி. ராமகிருஷ்ணன், உ.வாசுகி, பி.சண்முகம், கே.சாமுவேல்ராஜ், எஸ்.வாலண்டினா, தீபா ஆகியோர் தலைமையில் கோரிக்கைகளை முன்வைத்து கிளர்ச்சி பிரச்சாரத்தில் கட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்ற முழக்கத்தோடு 1972ல் உழைக்கும் மக்களுக்காக அவர்தம் வசிப்பிடப் பகுதியிலேயே கட்டப்பட்டு வாழ்விட உரிமை உறுதி செய்த குடிசை மாற்று வாரிய திட்டத்தை, உலக வங்கி நிபந்தனைகளைச் சொல்லி கலைஞர் கரு ணாநிதியின் கனவு திட்டத்தை சிதைக்கலாமா? என்கின்ற பிரச்சாரம் மக்கள் மத்தியில் கவ்வி பிடிக்க ஆரம்பித்தது. அடுத்த ஒரு சில தினங்களில் தகர கொட்டகையில் தவிக்கும் மக்கள் உடனடியாக அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 864 அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியேற உத்தரவிடப்பட்டது.ஒன்றரை லட்சம் கட்டும் அரசாணையை ரத்து  செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலுவாக குரலெழுப்பியது. தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட இயக்கங்களும், பாதிக்கப்பட்ட மக்களின் வீரியமிக்க போராட்ட பங்கேற்பும், இந்த அரசாணை அடுத்தடுத்து குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளையும் பாதிக்கும் என மார்க்சிஸ்ட் கட்சி எடுத்த கிளர்ச்சி பிரச்சார நடவடிக்கைகளும் ஒன்னரை லட்சம் கேட்டு அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட அரசாணையை ரத்து செய்யும் நடவடிக்கையை நோக்கி திமுக அரசை நகர்த்தியது. அவ்வாறு வெளியிடப்பட்ட  அரசாணை யில் “மக்களின் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்க ளாலும் பணத்தை வசூலிக்க இயலவில்லை” என  அரசா ணையின் ஓரிடத்தில் வெளிப்படையாக குறிப்பிடப்பட்டி ருந்தது. திமுக அரசின் இத்தகைய ஜனநாயகப் பண்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெகுவாக பாராட்டியது. மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் தலைமையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின்  நேரடியாக சந்தித்து நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதே காலகட்டத்தில், கூவம் கரையோரம் தார்ப்பாய், டிஜிட்டல் பேனர்கள் ஆகியவற்றை கூரையாக கொண்டு தங்கியிருந்த மக்கள் கொரோ னா பேரிடர், சுட்டெரிக்கும் வெயில், திடீரென பெய்த  அடர் மழை என தொடர் இடர்களை எதிர்கொண்டு கே.பி. பார்க் பகுதியில் குடியமர்த்துவதற்கான கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். ஆட்சிப் பொறுப்புக்கு வந்த திமுக அரசிடம், சம்மந்தப்பட்ட தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு அவர்களிடமும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை முறையீடுகளும், மனுக்களும் கொடுக்கப் பட்டன. மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனக ராஜ், மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா ஆகியோர் முதல்வரின் முதன்மைச் செயலாளர்  உதயச்சந்தி ரன் ஐஏஎஸ் அவர்களை சந்தித்து மனு வழங்கினர். தொடர்ந்து வாழ்விட மேம்பாட்டு வாரியம் இயக்குனர் துறை சார்ந்த அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து மனுக்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டி ருந்தன. 2022 ஏப்ரல் 29 நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை சத்தியவாணி முத்து நகர் மக்கள் பங்கேற்புடன் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. 

தொடர்ந்து மேலாண்மை இயக்குனருடன் கோரிக்கையின் நியாயங்களை வலியுறுத்தி ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அரசு ஆவ ணத்தின் படி 178 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்குவ தில் என்ன தயக்கம் இருக்கிறது? அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் என அனைத்துத் தரப்பினரும் உறுதி யளித்து விட்டபின் ஏன் கே.பி. பார்க் பகுதியில் வீடு களை ஒதுக்க மறுப்பது நியாயம்தானா? கேள்விகளின் நியாயங்களும், தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சித் தரப்பில் நடத்தப்பட்டு வந்த போராட்டங்களும் இயக்கங்களும் கோரிக்கையின் நியாயத்தை நிறை வேற்ற வேண்டிய நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்ட னர்.  அதனடிப்படையில் 2022 ஜூன் 7 அன்று 40 கிலோ மீட்டர் தொலைவில் பெரும்பாக்கம் பகுதியில் இப்பகுதி மக்களை குடியமர்த்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட அரசாணையை ரத்து செய்து, இரண்டு கிலோமீட்டர் அருகாமையில் கட்டப் பட்டிருந்த 1056 குடியிருப்புகளில் 178 குடும்பங்களுக்கு வீடுகளை ஒதுக்குவதாக புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. 

இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற வாழ்விட உரிமைக்கான தொடர் போராட்டம் அதுவும் மார்க்சிஸ்ட் கட்சி முன்வைத்த இடத்தில் வீடுகளை ஒதுக்கீடு செய்து கண்ணியமான முறையில் மறுகுடிய மர்வை உருவாக்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.  மேற்கண்ட பிரச்சனைகள் கோரிக்கைக்காக போராட்டங்களை தொடங்கும்போது “இதெல்லாம் வெற்றிபெறக்கூடிய கோரிக்கைகளா?”,  “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவர்கள் விளம்பரத்துக்காக நடத்தக்கூடிய போராட்டம்”, “அரசாணை வெளியிட்டு விட்டபிறகு இதையெல்லாம் மாற்ற முடியாது  நடக்கும் போராட்டம் சாகச போராட்டம் தான்” என பல அவதூறுகளும், எள்ளல் வார்த்தைகளையும் போராடிக்கொண்டிருந்த தோழர்கள் மீது ஏவப்பட்டன.  ஆனால் இதற்கெல்லாம் துவண்டு போகாமல் பிரச்சனையின் முழு தன்மையை உள்வாங்கி, அரசியல் புரிதலோடு சரியான கோரிக்கையை முன்வைத்து, முன்னெடுத்த போராட்டம் முழுமையாக வெற்றி பெற்றுள்ளது.  நவீன தாராளமயமாக்கல் கொள்கையை எதிர்கொண்டு போராடி மக்கள் நலன் சார்ந்து அரசின் கொள்கைகளை மாற்ற முடியும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக் காட்டும் அரசியல் பாதைக்கு கிடைத்த வெற்றி.

கட்டுரையாளர் : மத்திய சென்னை 
மாவட்டச் செயலாளர் சிபிஐ(எம்)

;