articles

img

‘மம்தா பானர்ஜியின் புதிர் முடிவுகள்’ -

மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, சமீபத்தில் சில புதிய கண்டுபிடிப்பு களைக் கண்டறிந்திருக்கிறார். முதலா வது, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவர், ஆர்எஸ்எஸ் மோசமான ஒன்று அல்ல என்று கூறி யிருக்கிறார். இதனைத் தொடர்ந்து மற்றொரு கண்டு பிடிப்பையும் அவர் செய்திருக்கிறார். அதாவது, மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் மற்றும் அம லாக்கத் துறையினரின் துஷ்பிரயோக நடவடிக்கைக ளுக்குப் பின்னால் பிரதமர் நரேந்திர மோடி இருப்ப தாகக் கூறப்படுவதைத் தான் நம்பவில்லை என்றும் கூறியிருக்கிறார். 

உண்மையைத்  திரித்துக் கூறுதல்

சட்டமன்றப் பேரவையில் அவர் பேசும்போது, “இந்த முகமைகள் பிரதமர் அலுவலகத்தின் கீழ் வரவில்லை என்பதை நீங்கள் அநேகமாக அறிந்திருக்க மாட்டீர்கள்,” என்று கூறியிருக்கிறார். அவை இப்போது ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனவாம். மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) பிரதமர் அலுவலகத்தின் கீழ் இப்போது  இல்லை என்று எப்படி அவர் முடிவுக்கு வந்தார் என்பது தெரியவில்லை. ஏனெனில் மத்தியக் குற்றப் புல னாய்வுக் கழகம் என்பது பிரதமர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் பணியாளர் மற்றும் பயிற்சித்துறையின் கீழ் அதிகாரப்பூர்வமாகச் செயல்படும் ஒன்றாகும்.  மம்தா பானர்ஜி இவ்வாறு உண்மையைத் திரித்துக்கூறி பிரத மரைக் குற்றப் பொறுப்புகளிலிருந்து முழுமையாக விடுவித்திருக்கிறார்.

ஆதரவாளர்களால்  கூட விளக்க முடியாத முடிவு

குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலின்போது பாஜக-விற்கு உதவியதன் மூலம் ஒரு துல்லியமான அரசியல் நடவடிக்கையை எடுத்தபின்னர் இப்போது இதுபோன்று பாஜக-வை தாஜா செய்யும் அறிக்கை கள் வெளிவந்திருக்கின்றன. குடியரசுத் துணைத் தலை வர் தேர்தலின்போது, எதிர்க்கட்சிகள் ஒரு பொது  வேட்பாளரை நிறுத்தத் தீர்மானித்தபோது, திரிணாமுல் காங்கிரஸ் வாக்கெடுப்பிலிருந்து ஒதுங்கிக்கொள்வ தென முடிவு செய்தது. இதற்கு அது, தாங்கள் முறையாகக் கலந்தாலோசிக்கப்படவில்லை என்று ஒரு சாக்குப் போக்கு சமாதானத்தைக் கூறியது. 

பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் அப்போது மேற்கு வங்க ஆளுநராக இருந்த, ஜக்தீப் தங்கர், என்பவர். அவர் நிறுத்தப்பட்ட சமயத்தில் திரிணாமுல் காங்கிரஸ் இவ்வாறு வாக்களிக்காமல் ஒதுங்கிக் கொள்வது என முடிவெடுத்ததென்பது மிகவும் வழக்க மற்ற ஒன்றாகும். சுமார் மூன்றாண்டு காலம் மம்தா பானர்ஜிக்கும் அவருடைய அரசாங்கத்திற்கும் சிம்ம சொப்பனமாக இருந்து தொந்தரவுகளைக் கொடுத்து வந்த ஒரு நபருக்கு எதிராக நிறுத்தப்பட்ட எதிர்க்கட்சி வேட்பாளரை அவர் ஏன் ஆதரிக்கவில்லை என்பதை அவருடைய ஆதரவாளர்களால்கூட விளக்க முடிய வில்லை.

அமலாக்கத்துறை விசாரணையும் திடீர் மென்மைப்போக்கும்

மம்தா பானர்ஜிக்கும், அவருடைய திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்திற்கும் இப்போது ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடிநிலையின் காரணமாகவே அவர் இப்போது ஆர்எஸ்எஸ் குறித்தும் பிரதமர் குறித்தும் திடீரென்று மென்மையான போக்கை வெளிப்படுத்திடத் தொடங்கியிருக்கிறார் என்றே தெரிகிறது.   அவருடைய அரசாங்கத்தில் ஆழமாக இருந்து வரும் ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தி ருக்கும் பார்த்தா சாட்டர்ஜி விவகாரம், மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீது கடும் வெறுப்பையும் கோபத்தை யும் ஏற்படுத்தி இருக்கிறது.  மக்கள் மத்தியில் நீண்ட காலமாகவே இருந்து வந்த சந்தேகம் இப்போது அப்பட்டமாக வெளியே வந்திருக்கிறது. 

இதுபோன்று இன்னும் பல ஊழல் விவகாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவர இருக்கின்றன. நிலக்க ரிச் சுரங்க ஊழல் தொடர்பாக, மம்தா பானர்ஜியின் அண்ணன் மகனும் அவருடைய அரசியல் வாரிசாக அறியப்பட்டவருமான அபிஷேக் பானர்ஜியும் அவரு டைய குடும்பத்தினரும் அமலாக்கத்துறையினரால் துருவித்துருவி விசாரிக்கப்பட்டு வருவதால் அவர் ஆடிப்போயிருக்கிறார்.

வெளிச்சத்துக்கு வரும்  கள்ளப் பிணைப்பு

ஆர்எஸ்எஸ்-இடமும், நரேந்திரமோடியிடமும் இவ்வாறு நல்ல அம்சங்களைக் கண்டறிந்திருப்பதா னது, திரிணாமுல் காங்கிரசில் ஊழல் பேர்வழி களுக்கும் கிரிமினல்களுக்கும் இடையேயுள்ள கள்ளப் பிணைப்பு இப்போது வெளிச்சத்திற்கு வந்துகொண்டி ருப்பதிலிருந்து, மம்தா பானர்ஜி, தன்னைப் பாது காத்துக்கொள்ள உதவிடும் என்பதன் அடையாளமே யாகும். எனினும், இவ்வாறு இவர் ஆர்எஸ்எஸ்/பாஜக-வுடன் கூடிக்குலாவுவதில் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை. மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு சக்தியாக திரிணாமுல் தலைதூக்கியபோது பாஜக-வுடன் அது கூட்டணி அமைத்துக்கொண்டதுதான். ஏன், ஒன்றிய வாஜ்பாய் அரசாங்கத்தில் மம்தா பானர்ஜி  ஒரு கேபினட் அமைச்சராகவும்கூட இருந்தார்.

மம்தா பானர்ஜி, ஆர்எஸ்எஸ் குறித்தும் நரேந்திர மோடி குறித்தும் கொடுத்துள்ள சமீபத்திய சான்றிதழ் கள் இடதுசாரிகளில் சிலர் உட்பட பலருக்கு சங்க டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் இவர்கள் எல்லாம் இவரை இதுநாள்வரையிலும் ஓர் உறுதியான பாசிஸ்ட் எதிர்ப்பு வீராங்கனை என்று போற்றி துதி பாடிக் கொண்டிருந்தவர்கள். ஆனாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கோ இடது முன்னணிக்கோ அத்த கைய மாயைகள் எதுவும் கிடையாது. பெருமளவில் ஊழல் சேற்றில் உழன்றுகொண்டிருக்கும் கயவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், கிரி மினல்கள்-ஊழல்பேர்வழிகளின் கள்ளப்பிணைப்பு க்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்றும் கோரி கிளர்ந்து எழுந்து வரும் வெகுஜனக் கிளர்ச்சிப் போராட்டங்களுக்கு அவர்கள் தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.   

செப்டம்பர் 21,2022, 
தமிழில்: ச.வீரமணி

 

;