ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மிகவும் குறிப்பிடத்தக்க வைகளாகும். தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையிலான கூட்டணி, மொத்தம் உள்ள 90 இடங்களில் 49இல் வெற்றி பெற்றி ருப்பது, மோடி அரசாங்கத்திற்கு எதிராக வும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப் பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தைப் பறித்து, அம்மாநிலத்தையும் பல கூறுகளாகப் பிரித்திட்ட பாஜக-வின் எதேச்சதிகார நட வடிக்கைகளுக்கு எதிராகவும் அளிக்கப் பட்டுள்ள வலுவான தீர்ப்பாகும்.
நிராகரிப்பும் சவாலும்
காஷ்மீர் பள்ளத்தாக்கின் மக்கள், வாக்கு களைப் பிரிப்பதற்காக, பாஜக-வினால் களமிறக்கிவிடப்பட்ட பினாமிகளையும், பிரிவினைவாத சக்திகளையும் முற்றிலுமாகத் தோல்வியுறச் செய்திருப்பதன் மூலம் பாஜக-வின் பிரச்சாரத்தையும் முறியடித் துள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் பதிவான வாக்குகளில் பாஜக வெறும் 2.2 விழுக்காடு அளவிற்கே வாக்குகளைப் பெற முடிந்தி ருக்கிறது என்பதிலிருந்து, காஷ்மீரிகளின் அடையாளத்தை அழிக்கும் இந்துத்துவா சக்தி களின் சூழ்ச்சித் திட்டத்தை காஷ்மீர் மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரித்திருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
அதே சமயத்தில், ஜம்மு பகுதியில் பாஜக 29 இடங்களை வென்றும் (கடந்த முறை இருந்ததைக் காட்டிலும் 3 அதிகம்), காங்கி ரஸ் கட்சி ஓர் இடத்தில் மட்டுமே வென்றி ருப்பது என்பதும் அந்தப் பிராந்தியத்திற்கும், காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும் இடையே வகுப்புவாத பிளவு மிகவும் ஆழமடைந்திருப்ப தைக் காட்டுகிறது. புதிதாக அமையவிருக்கும் அரசாங்கத்திற்கு இது ஒரு மிகப்பெரிய சவாலாக அமைந்திடும்.
மாநில அந்தஸ்து பெற முதல்படி
உமர் அப்துல்லா தலைமையிலான அரசு கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டி இருக்கும். இது ஒரு யூனியன் பிரதேசத்தின் அரசாங்கம் மற்றும் சட்டமன்றம் ஆகும். ஜம்மு-காஷ்மீர் மறு சீரமைப்புச் சட்டத்தின் கீழ் விதிகளில் திருத்தங்கள் மூலம் வலுப்படுத்தப்பட்ட முக்கியமான அதிகாரங்களை துணை ஆளுநர் கொண்டிருக்கப் போகிறார். தில்லி மாநில அரசு எதிர்கொள்ளும் அதே நிலைமைகளை ஜம்மு-காஷ்மீர் அரசும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் பெறுவதற்கான போராட்டத்தின் முதல் படியாக அமையவிருக்கும் மாநில அர சாங்கம் பார்க்கப்பட வேண்டும். முழு அளவிலான அந்தஸ்துடன் கூடிய மாநிலத்தை மீண்டும் மீட்டெடுப்பது மட்டுமே துணை நிலை ஆளுநர் மூலம் ஒன்றிய அரசாங்கத் தின் கட்டுப்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைப்ப தற்கு வழிவகுத்திடும்.
தொகுதி ஒதுக்கீட்டில் தோல்வி
அரியானாவில் பாஜகவின் வெற்றி எதிர்பாராதது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று பரவலாகக் கருதப் பட்டது. எல்லாக் கருத்துக் கணிப்புகளும் காங்கிரசின் வெற்றியை முன்னறிவித்தன. ஆனால், காங்கிரஸ் 37 இடங்களைப் பெற்ற நிலையில், பாஜக 48 இடங்களைப் பெற்று பெரும்பான்மையைப் பெற முடிந்தி ருக்கிறது. பாஜகவின் வாக்குகள் 39.9 விழுக்காடாக உள்ளது. காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவாளர்களின் வாக்குகள் 39.3 விழுக்காடாக உள்ளது. இது 0.6 விழுக்காடு வித்தியாசம் மட்டுமே. ஆம் ஆத்மி கட்சி 1.8 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள் ளது. ஆம் ஆத்மி மற்றும் சமாஜ்வாதி கட்சி களுடன் தொகுதி ஒதுக்கீட்டுப் பங்கீட்டில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை, இந்தச் சூழலில் பார்க்க வேண்டியிருக்கிறது.
காங்.தோல்விக்கு காரணம்
பாஜக, ஜாட் அல்லாத இதர சாதியினரின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ள முடிந்தி ருக்கிறது. பூபிந்தர் சிங் ஹூடா, தன் ஜாட் பிம்பத்தை உயர்த்திப்பிடிக்க முயற்சித் ததால், காங்கிரஸ் கட்சியால் தன் செல் வாக்கை இதர சாதியினர் மத்தியில் விரிவு படுத்த முடியவில்லை. மேலும் காங்கிரஸ் கட்சியில் தலைவிரித்தாடிய கோஷ்டி பூசல்க ளும் காங்கிரஸ் தோல்விக்குக் காரண மாகும். ஆர்எஸ்எஸ்/பாஜக-வினர் மதச் சிறுபான்மையினருக்கு எதிராகக் கட்ட விழ்த்துவிட்ட மதவெறிப் பிரச்சாரத்தினை முறியடித்திடும் விதத்தில் காங்கிரஸ் எவ்வித மான பிரச்சாரத்தையும் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ மேற்கொள்ள வில்லை.
குறைத்து மதிப்பிடக்கூடாது
ஹரியானாவில் பாஜக-வின் வெற்றி, இந்துத்துவா சக்திகளுக்கு ஊக்கத்தை அளித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பெரும்பான்மையைப் பெற முடியாமல் பாஜக பின்னடைவைச் சந்தித்திருந்தாலும், இந்துத்துவா, தொகுதி வாக்காளர்களின் அடிப்படையில் பாஜகவின் பலத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்து வந்தி ருக்கிறது. ஹரியானா தேர்தல் முடிவுகள் ஆர்எஸ்எஸ்/பாஜக-வினரின் சித்தாந்தம் மற்றும் அரசியலுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டத்தை இடதுசாரி, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் நடத்திட வேண்டும் என்ற உறுதியை மேலும் வலுப்படுத்தி இருக்கிறது.
அக்டோபர் 9, 2024,
தமிழில்: ச.வீரமணி