articles

img

நில உரிமை முறையும் குத்தகை விவசாயத்தின் வரலாறும்

அதிமுகவின் தோல்வி உடுமலையில் இருந்து தொடங்கும்  முதல்வர் ஸ்டாலின்

உடுமலை, ஆக.11 -  2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலமான உடுமலையில் இருந்து தொடங்கும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். நலத்திட்ட உதவிகள் வழங்கல் உடுமலை நேதாஜி மைதானத்தில் திங்க ளன்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் பேசுகை யில், “திருமூர்த்திமலை, அமராவதி மற்றும் சின்னாறு ஆகிய இயற்கை அழகுடன் கூடிய உடுமலை, சர்க்கரை உற்பத்தியில் மாநிலத் திற்கு முன்மாதிரியாக விளங்குகிறது. முற்போக் குக் கவிஞர் உடுமலை நாராயணகவி, முன் னாள் அமைச்சர் சாதிக்பாட்ஷா வாழ்ந்த இந்த  நகரில் திருப்பூர் மாவட்டத்திற்கான நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் அரசு பெருமை கொள்கிறது” என்றார். புதிய அரசு நலத்திட்டங்கள் உடுமலை பகுதி:   அரசு மருத்துவமனையில் கூடுதலாக 50 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மருத்து வக் கட்டிடம் ஆணைமலை - நல்லாறு அணைகள் கட்டு மானத்திற்கு விரைவான நடவடிக்கை பிபிபி பாசனக் கால்வாய்கள் பராமரிப் பிற்கு ₹10 கோடி நிதி ஒதுக்கீடு மடத்துக்குளம் அமராவதி சர்க்கரை ஆலையைத் திறக்க சிறப்பு வல்லுநர் குழு அமைப்பு உடுமலை தாஜ் தியேட்டர் சாலைக்கு “சாதிக்பாட்ஷா சாலை” எனப் பெயரிடல் ஊத்துக்குளியில் வெண்ணெய் தொழிற் சாலை அமைப்பு பிற பகுதிகள்: காங்கேயம் அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக மாற்றம் மற்றும்  கூடுதல் கட்டிடம் தாராபுரம் உப்பாறு ஆற்றுப் பகுதியில் தடுப்பணை கட்டுமானம் கூட்டுக்குடித் திட்டங்களுக்கு கூடுதல் நிதி  ஒதுக்கீடு ஆகிய திட்டங்களை முதல்வர் அறி வித்தார். அதிமுகவின் புறக்கணிப்பு குற்றச்சாட்டு  “திருப்பூர் மாவட்டம் கலைஞரால் உரு வாக்கப்பட்டது. அதிமுக ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்ட எந்தத் திட்டத்தையும் செயல்படுத் தாமல் வேலைகளை நிறுத்தியது. கடந்த 10  ஆண்டுகளில் பெயருக்கு ₹496 கோடி மட்டுமே  நிதி வழங்கப்பட்டதால் மக்களும் தொழில் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டன. நமது அரசு பத விக்கு வந்த பின் இந்த 4 ஆண்டுகளில் குடிநீர்,  பாலம், தொழில் வளர்ச்சிக்கு ₹1,176 கோடி நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து வேலை களும் முடிக்கப்பட்டுள்ளன” என்று முதல்வர் தெரிவித்தார். அதிமுக தலைமையின் மீது விமர்சனம் “மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத  பழனிசாமி, தனது கட்சிக்கும் எதுவும் செய்யா மல், தன்னை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்களாக நினைத்துக்கொண்டு எட்டாத  உயரத்தில் இருக்கிறார். சுந்தரா டிராவல்ஸ் பேருந்தில் பயணம் செய்யும்போது பொய் களைக் கத்திப் பேசுகிறார். இதை அவரது கட்சித் தொண்டர்களே ஏற்கவில்லை” என்று கடு மையாக விமர்சித்தார். “அரசின் திட்டங்களையும் என்னையும் தரம்தாழ்ந்து விமர்சனம் செய்வதைக் கண்டு, நானும் திமுகவும் கண்டுகொள்ளாமல் மக்கள் பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். இதனால் பொய்களைக் கூறும் பழனிசாமியின் அதிமுகவின் தோல்வி மேற்கு  மண்டலம் முழுவதிலும் தொடங்கும். அதன் தொடக்கம் உடுமலையிலிருந்து தான்” என்றார். “ஸ்டாலின் திட்டத்தில் குறையில்லை, பெயரில் குற்றம் உள்ளது என்று தொடரப் பட்ட வழக்கை தள்ளுபடி செய்து, முன்னாள் அமைச்சர் சண்முகத்திற்கு நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத் தக்கது” என்று தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் “நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முதல்  மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று அதிமுக  கூட்டணிக் கட்சியான ஒன்றிய பாஜக அரசே  தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. மக்களுக் கான நல்லாட்சியை விமர்சிக்க முடியாமல், தனது கட்சித் தொண்டர்களின் மதிப்பைப் பெற  முடியாமல் விரக்தியின் உச்சத்திற்குச் சென்ற பழனிசாமி தன்னைப் பற்றித் தரம்தாழ்ந்து பேசு வதை நான் கண்டுகொள்ளப் போவதில்லை” என்றார். இந்த விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர்  வரவேற்புரை ஆற்றினார். தமிழக அமைச்சர்கள்  முத்துச்சாமி, சக்கரபாணி, கயல்விழி செல்வராஜ்,  சாமிநாதன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பி னர் ஈஸ்வரசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் ஜெயராமகிருஷ்ணன், உடுமலை நகர செய லாளர் வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.