articles

img

அவர்கள் ஒன்றிணைகிறார்கள்... நூறாய் ஆயிரமாயிரமாய்...! - பவுலா சக்ரவர்த்தி, வாசுகி நேசய்யா

அமெரிக்கா உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நாடு. ஆனால் இந்த பூமியில் நடைபெற்ற ஒவ்வொரு விடுதலைப் போராட்டங்களின் போதும் தவறான பக்கத்தில் தான் அது நின்றுள்ளது என ஆப்பிரிக்க அமெரிக்க பெண்ணிய கவிஞர் தத்துவ ஞானி ஆட்ரே  லார்ட், நிறவெறி தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக வளாகங்களில் 1985இல் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது கூறி னார். அச்சத்தையும் அவசர உணர்வையும் தனக்கு உண்டாக்கியது என்றும் அதை குறிப்பிட்டார்.  காசாவில் தற்போது ஏற்பட்டுள்ள பேரழிவிற்கு எதி ராக அந்த அச்சமும் அவசரமும் தான் அமெரிக்கா முழு வதிலும் மாணவர்களை போராட்டத்தில் தள்ளி உள்ளது. 1980களில் நடந்த போராட்டத்தில், எங்கள் மாணவப் பருவத்தில் அன்றைய பல்கலைக்கழக நிர்வாகிகள் வெள்ளை இனவெறி பிடித்த தென்னாப்பி ரிக்க அரசுடன் நின்றதில் மிகவும் சங்கடப்பட்டனர். ஆனால்  இன்று இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் பாலஸ்தீன எதிர்ப்பு, இன வெறி இரண்டும் மிகவும் இயல்பாக்கப் பட்டுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகிகள் இன்று இனப் படுகொலைக்கு ஆதரவாக மிகவும் பெருமையோடு நிற்கின்றனர். நூலகம், வளாகம், வகுப்பறை என கல்லூரி முழுவதும் அமெரிக்க காவல்துறை முற்றுகை  இட்டுள்ளது. இனவெறி சக்திகளுக்கு பாதுகாப்பு அளிப் பது இன்று அமெரிக்காவின் நவீன பல்கலைக்கழகங்க ளில் ஒரு புதிய இயல்பான தன்மை என மாறிவிட்டது.

போராட்டங்களிலிருந்து  பாடம் கற்கும் மாணவர்கள்

அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வைத்துள்ள கோரிக்கைகள் மூன்று: 1. பாலஸ்தீனத்தில் நடைபெறும் இஸ்ரேல் ஆக்கிர மிப்பிற்கு உதவும் ஆயுதங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனங்களை மக்களிடையே அம்பலப் படுத்துவது, அவர்களை சமூகரீதியாக விலக்குவது ஒதுக்கி வைப்பது. (Boycott,Divest, Sanction ) 2. காவல்துறையை வளாகங்களில் இருந்து வெளி யேற்றுவது. (Cops off Campus) 3. பாலஸ்தீனர்களுடன்  ஒருமைப்பாட்டு சொற்பொ ழிவு மற்றும் நடவடிக்கைகள். 2008இல் ஆட்ரே லார்ட் அவர்களால் நடத்தப்பட்ட இனவெறி எதிர்ப்பு நிறவெறி எதிர்ப்பு நடவடிக்கைக ளிலும் அவருடைய சொற்பொழிவுகளிலும், தற்போதைய பிடிஎஸ் (BDS- பாய்காட், டைவெஸ்ட், சாங்க்சன்) போராட்டத்தின் கருவை காணலாம். இன்றைய பல் கலைக்கழகத்தின் மாணவர்கள் 2020 ஆம் ஆண்டில் ஜார்ஜ் பிளாயிட் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட இன வெறி தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தையும் காவல் துறையை வளாகங்களில் இருந்து வெளியேற்றுவோம் என்ற மாணவர்களின் உணர்வுக்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

பல இனங்களைச் சேர்ந்த மாணவர்கள்

ஆப்பிரிக்க- அமெரிக்கன், அரபு அமெரிக்கன், தெற்காசிய மற்றும் சியோனிய எதிர்ப்பு யூத இனங்க ளை உள்ளடக்கிய பல வகை  மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் கல்வி கற்பிக்கிறார்கள். கிழக்கு மத்திய தரைக் கடலில் லெபனான், சிரியா, இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் நடைபெறும் பல்வேறு போராட்டங்களை பற்றி அறிந்து கொள்கின்றனர். பால் போருக்கு பிந்தைய, யூத இனப் படுகொலைக்கு பிந்தைய, நக்பாவுக்கு பிந்தைய மற்றும் ஓஸ்லோ  (OSLO) ஒப்பந்தத்திற்குப் பிறகு நடைபெற்று வரும் காலனித்துவம் மற்றும் இனவெறி வன்முறை மரபுகள் குறித்தும் அவர்கள் அறிகின்றனர். நிறவெறி தென்னாப்பிரிக்காவில் இருந்து அமெரிக்கா வின் ஜிம் க்ரோ வரை பாலஸ்தீனத்தில் இருந்து காஷ்மீர் வரை காலனித்துவ ஆட்சியை குடியேற்றுவதற்கு நிற வெறி எவ்வாறு உதவுகிறது எனவும் பயின்று வருகின்ற னர். யூத மக்களுக்கு எதிரான இனவெறி விமர்சனத் திற்கும், இஸ்ரேலின் இனவெறி அரசின் விமர்சனத் திற்கும் இடையேயான வேறுபாடு, யூத எதிர்ப்பு மற்றும் சியோனிச  எதிர்ப்பு ஆகியவற்றுக்கு இடையே தேவை யான வேறுபாடுகளை அவர்கள் பகுப்பாய்வு செய் கின்றனர். பிடிஎஸ் (BDS), காசாவின் எல்லைக்கு திரும்பும் போ ராட்டம் (The Great March Of Return) போன்ற அர சியல் பிரச்சாரங்கள் நிறைந்த பாலஸ்தீன எதிர்ப்பின் வரலாறு, முகமது தர்வேஷ், மொசாய்அபு தோகா ஆகி யோரின் போர்ப் பயணிகள், ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றை படம் பிடித்து காட்டும் ஜெனினின் அகதிகள் அரங்கம் வரை எல்லாவற்றையும் தெரிந்து கொள்கின்றனர்.

பரந்து விரியும் பண சாம்ராஜ்யம்

ஜோர்டான்  நதிக்கும் மத்திய தரைக் கடலுக்கும் இடைப்பட்ட பகுதியான பாலஸ்தீன நாட்டின் எழுச்சி மற்றும் “நதியில் இருந்து கடல் வரை” சுதந்திர நாடு கேட்டு அது நடத்திய போராட்டம் எனஎல்லாவற்றை யுமே அமெரிக்கா இன்றைக்கு கொச்சைப்படுத்திச் சித்தரிக்கிறது. அரசியல் ஆக்கிரமிப்புக்கு பின்னால் உள்ள பொருளாதாரம், வாஷிங்டனில் இருந்து டெல் அவிவ்  வழியாக ரியாத் வரை பரந்து விரியும் பண சாம் ராஜ்யம், கார்ப்பரேட்டுகளின் லாபத்தில் இருந்தும் இஸ்ரேலின் குடியேற்றத்தில் இருந்தும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் பெரும் நன்கொடைகள், முத லீடுகள், அறக்கட்டளைகள் என பல வடிவங்களில் நடக்கும் இந்த ஆதிக்கம் பற்றியும்,புவியின் மறுபக்கத்தில் நடத்தப் படும் போர் வரை எல்லாவற்றைப் பற்றியும் மாணவர் கள் கற்கின்றனர்.  அடக்குமுறைக்கு எதிராக நடைபெறும் பாலஸ்தீன ஒற்றுமைப் போராட்ட வரலாற்றில் இருந்து கருத்து வேறுபாடுகளைக் கடந்து மாணவர்கள் தங்கள் கல்வி உரிமையை திரும்பப் பெறுவதற்கான போராட்டங்களை நடத்துவதற்கும் அவருடைய செயல்பாடுகள் இன்று பேருதவி புரிகின்றன.

பொறுமையை இழந்த மாணவர்கள்

போர் தொடங்கியதில் இருந்தே பல பல்கலைக் கழக நிர்வாகிகள் பாலஸ்தீன சார்பு ஒற்றுமை மற்றும் இஸ்ரேல் அரசுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு எதி ராக ஒழுங்கு நடைமுறைகளை எடுக்கத் தொடங்கி னர். அதே நேரத்தில் சியோனிச எதிர்ப்பு யூதக் குழு,  அமைதிக்கான யூத குரல் போன்ற தேசிய அமைப்புக ளின் உள்ளூர் இயக்கங்களை தடை செய்தனர். போர்தீவிர மடைந்ததால் மாணவர்கள் எதிர்ப்புகள் பெருகியது. காவல்துறை கண்காணிப்பும் போராட்டங்களை ஒடுக்குவதும் மேலும் தீவிரமாகியது. இதற்கிடையில் ஜோபைடன்  நிர்வாகம் இஸ்ரேலின் போர் முயற்சிகளு க்கு அதன் ஆதரவை இரட்டிப்பாக்கியது.  வலதுசாரி அரசியல்வாதிகள் பல்கலைக்கழக தலை வர்களை காங்கிரசுக்கு அழைத்து விசாரித்தனர். உயி ரிழப்புகள்  33,000 க்கு மேல் உயரும்பொழுதுதான் திகைத்துப் போன மாணவர்கள் பல்கலைக்கழகங்க ளுக்குள் அமைதியான ஆக்கிரமிப்பு அழிப்பு முகாம் களை நிறுவினர். அடக்குமுறை தீவிரமடைந்த போதும் இந்த முகாம்கள் நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழக வளாகங்களிலும் அமைக்கப்பட்டது.

ஆக்கிரமிப்பு அகற்றம்

காலனித்துவ ஏகாதிபத்திய மற்றும் கார்ப்பரேட்டு களின் நடவடிக்கைகளில் பல்கலைக்கழகங்களின்  பங்கை பற்றி இந்த இயக்கம் பேசுகிறது. அமெரிக்க இந்திய போர்கள்,ஹவாய், போர்டாரிகோ, பிலிப்பை ன்ஸ், ஹைத்தி,வியட்நாம், ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் போர் வரை அமெரிக்கா தலையிட்டது குறித்தும் அமெ ரிக்க ராணுவ வரலாறுகள் குறித்தும் பேசுகிறது.  2011 இல் அமெரிக்க சமூகத்தின் சமத்துவமின்மை க்கு எதிரான வால் ஸ்ட்ரீட் போராட்டத்தை எதிரொலிக்கி றது. பொருளாதாரத்திற்கும் இராணுவத்திற்கும், யுத் தத்திற்கும் முற்றுகைக்கும், போர்களுக்கும் பஞ்சத்திற் கும் இடையே ஓடும் ரத்த நாளங்களின் தொடர்ச்சியை இந்த மாணவர்கள் அறிந்துள்ளார்கள். இது ஒரு நியூயார்க் தருணம் மட்டுமல்ல. ப்ளோரிடா டெக்ஸாஸ் பல்கலைக்கழகம் முதல் ஸ்டேட் சக்கரமெண்டோ வரை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் துஷ்பிரயோ கத்திற்கு எதிராக கோஷம் எழுப்புவதுடன் அந்த கொடூர மிருகத்தனமான வரலாறு குறித்த ஆழமான புரிதலோடு போராட்டங்களில் இன்று அணிவகுத்துள்ளனர்.  கருப்பு மற்றும் செவ்விந்திய சமூகங்களை கண்காணித்து சிறையில் அடைக்க முற்படும் அமெ ரிக்க காவல் இயந்திரத்தை சிதைப்பதற்காக புறப்பட்டு உள்ள “Black Lives Matter” போராட்டமும் இந்த  இயக்கத்திற்கு உரமேற்றியுள்ளது. பெரு ஊடகங்க ளின் பொய்ப் பிரச்சாரங்களை இவர்கள் மறுக்கிறார் கள். சமூக ஊடகங்களின் துணையோடு ஜார்ஜியாவி லிருந்து காஸா  வரை, ஹேர்லம் முதல் ஹெப்ரோன் வரை போராடும் மக்களிடையே போர் எதிர்ப்புக்கான ஒற்றுமையை உருவாக்குகின்றனர்.

நல்ல எதிர்காலத்தை உருவாக்குவோம்

மெக்கார்த்திச காலத்தின் கண்காணிப்பு வெறி யுடன்  வளாகங்களில் பேச்சுரிமையை முடக்க மாண வர்கள் மீது அடக்கு முறையை நியூயார்க் காவல் துறை ஏவியுள்ள பின்னணியில் இதை எழுதுகிறோம்.இந்த அராஜக வன்முறையை வெளிச்சம் போட்டு காட்டு வதற்குப் பதிலாக, பழமைவாத ஊடகங்கள் ராணுவ மயமாக்கலை மேற்பார்வையிடும் பல்கலைக்கழக நிர்வாகிகள் பக்கம் நிற்கின்றன. ஒரு கரையில் இருந்து மறு கரை வரை அமெரிக்க நிலப்பரப்பு முழுவதும் காசா  மக்களுடன் ஒருமைப் பாட்டை வெளிப்படுத்தி நிற்கும் எங்கள் மாணவர்கள் தங்கள் இன்னுயிரை பணயம் வைத்துள்ளனர். அமெ ரிக்க பல்கலைக்கழகங்களை இனப்படுகொலை சக்தி களுடன் பிணைக்கும் கருத்தியல் மற்றும் பொருளா தார உறவுகளை இந்த மாணவர்கள் அம்பலப்படுத்தி யுள்ளனர். காசாவில் குண்டு வீச்சுகளால் அழிக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படித்த வர்கள் இன்று மக்களின் நினைவுகளிலும் சுதந்திர பாலஸ்தீனத்திற்கான போராட்டங்களிலும் கரைந்து போய் உள்ளனர். அவர்களின் தியாகங்களால் ஈர்க்கப் பட்ட அமெரிக்க மாணவர்கள் இன்று ஆரம்பத்தில் நாம் சுட்டிக் காட்டிய ஆர்டே லார்டின் தீவிரமான நம்பிக்கைக் குரிய  பார்வையில் இணைந்து நிற்கிறார்கள். அவர்க ளின் சூளுரை இதோ: பார்த்தது ஒருபுறம் இருக்கட்டும். உலகம் இதுவரை உருவாகாத ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்க நாம் ஒன்றிணையலாம்.

நன்றி : தி இந்து 10/5/23, 
தமிழில் : கடலூர் சுகுமாரன்
 

;