கேரளத்தில் வைக்கம் சத்தியாகிரக நூற்றாண்டு விழா, இந்த ஓராண்டு காலம் நடை பெறுகிற இவ்வேளையில், தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான வைக்கம் போரை 1923ல் தொடங்கியவர்கள் கேரள காங்கிரஸ் கமிட்டியாக இருந்தாலும் அப்போரில் தமிழர்களே பெரும் பங்கு வகித்தார்கள் என்பது, தமிழ்நாட்டிற்கு பெருமை அளிக்கக்கூடியது ஆகும். போராட்டம் தளர்ந்திருந்த நேரத்தில் தலைமை ஏற்று நடத்தியது, போராட்டத்தில் பங்கேற்று சிறைப்பட்டது, சத்தியாகிரக ஆசிரமத்தை நிர்வகித்து கேரளத்தில் பல ஊர்களில் பிரச்சாரம் மூலம் மக்கள் ஆதரவை திரட்டி யது, நிதி வசூலித்தது; சமஸ்தான அரசர், திவான், வைதீயர்கள் ஆகிய தரப்பிடம் எதிர்த்து சமாதானம் பேசியது, நலிவுற்ற சத்தியாகிரகிகளுக்கு மருத்துவம் புரிந்தது, ஓய்வில் இருந்த சத்தியாகிரகிகளுக்கு கதர் வேலை கற்பித்தது என பல விதங்களில் சத்தியகிர கத்திலே தமிழர் பங்களிப்பு அமைந்தது.
வைக்கம் போராட்டத்தின் வெற்றிக்கு உதவிய ஆதிக்கசாதியினர் அடங்கிய பேரணியின் தெற்கு அணிக்கு தலைமை தாங்கியது ஒரு தமிழர்; அதற்கு நிதி கொடுத்து செயல்படுத்தியதும் தமிழர்கள். போராட் டத்திற்கு அற வலிமையும் பொருளாதார வலிமையும் சேர்க்கும் விதத்தில் தமிழ்நாட்டில் பிரச்சாரக் கூட்டங் களை ஏற்பாடு செய்தனர். சத்தியாக்கிரக போராட்டத் தில் ஈடுபட தன்னார்வலர்களை தொடர்ந்து அனுப்பிய தோடு ஆர்வமிக்கவர்களை பதிவு செய்து தயாராக வைத்திருந்தது தமிழ்நாடு. வழக்கமான நிருபர்க ளோடு, சிறப்பு பத்திரிகையாளர்களை தமிழ் பத்திரி கைகள் அனுப்பி வைத்திருந்தன. மதுரையில் ‘ரோசாப்பூதுரை’ என்றழைக்கப்பட்ட ஜார்ஜ் ஜோசப், வைக்கம் போராட்டத்திற்கு வலுவாக அடித்தளமிட்டவர்களில் ஒருவர். இவர்தான் முதலில் தமிழ்நாட்டிலிருந்து வைக்கம் சென்றவர்.
கோவை அய்யாமுத்து
ஜார்ஜ் ஜோசப்பைத் தொடர்ந்து தந்தை பெரியா ரோடும், சேலம் ராமநாதனோடும் வைக்கம் போ ராட்டத்தில் பங்கேற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் கோவை அய்யாமுத்து. ஊர் ஊராக போராட்டத்திற்கு ஆதரவாக நிதியினை பெற்றுக் கொண்டு சென்ற போது பொதுக்கூட்டங்களில் பேசக் கூடாது என திருவாங்கூர் சமஸ்தான ஆணை அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த தடையுத்தரவை யார் மீறுவதென ‘திருஉளச் சீட்டு’ போடப்பட்டபோது அய்யாமுத்து பெயரே வந்தது. எனவே, ‘சிறையின் கீழ்’ என்ற ஊரில் அரசின் பிற்போக்கு தனத்தையும் பட்டியலின மக்களின் சமஉரிமைக்கான நியாயத்தையும் கோவை அய்யாமுத்து பேசினார். இவரது பேச்சை கேட்ட காவல் துறை அதிகாரி இவரை தீப் பொறி என்று வர்ணித்தார். பறையருக்கும், இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை என்ற பாடலைப் பாடிய போது வைக்கம் வாழ் மலையாள மக்கள் வீறுகொண்டு எழுந்தனர். பின்னர் கோட்டையில் நடந்த விசாரணையில் கோவை அய்யாமுத்துவுக்கு ஒரு மாத தண்டனையும் 15 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. வைக்கம் போராட் டத்தில் முதன் முதலாக தண்டனை பெற்றவர் அய்யா முத்து. 31 நாள் சிறைவாசத்திற்கு பிறகு அய்யாமுத்து வெளியே வந்த போது வரலாறு காணாத கூட்டம் அவரை வரவேற்றது. அதில் ராஜாஜியும் ஒருவர். திரு வனந்தபுரம் கோட்டை மைதானத்தில் மாபெரும் பொ துக்கூட்டம் நடைபெற்றது. அவ்வளவு பெரிய கூட்டத்தை பார்த்தது இல்லை என ‘சமதர்ஷ்னி’ பத்திரிகை ஆசிரியர் பாலகிருஷ்ணன் பதிவு செய்துள்ளார். தொடர்ந்து, கோவை அய்யாமுத்து வைக்கத்தில் வரலாறு சிறப்பு மிக்க போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளுக்கு உதவிட தமிழகத்தில் பெரும் நிதியை திரட்டி உதவி அளித்தார்.
எம்.பெருமாள் நாயுடு
டாக்டர். மீனாட்சி எம்.பெருமாள் நாயுடு, தமிழகத் தில் இருந்து வைக்கம் போராட்டத்திற்கு சென்ற முக்கிய தலைவர். இவரது தந்தை திருவாங்கூர் மகாராஜா வின் அரசவைக் கலைஞர். எடின்பரோ, கிளஸ்கோ, அயர்லாந்து ஆகிய இடங்களில் மருத்துவம் படித்தவர் பெருமாள் நாயுடு. வைக்கத்திற்கு 1923 ஏப்ரல் 24 ல் சென்று போராடினார். ஆதிக்கச் சாதியினர் பங்கேற்ற தெற்கு பேரணிக்கு தலைமை தாங்கினார். பின்னர் 1926 ல் சுசீந்தரம் ஆலய நுழைவு போராட்டம் இவர் தலைமையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைப் போல வைக்கம் போராட்டத்தில் பங் கேற்ற எண்ணற்ற தமிழக தலைவர்களை அறியலாம். அய்யா முத்து கவுண்டர்.ஏ (பிரச்சாரம் சிறை வாசம்), அருணகிரி நாடார்.கே.எஸ்.இக்னேஷியஸ் (தன்னார்வ லர்), ராஜாஜி, சேலம் (சமாதானம், ஆசிரம மேற்பார்வை, நிதி வசூல்), எம்.பெருமாள் நாயுடு மற்றும் இணையர், நாகர்கோயில் (சிறை வாசம், ஆசிரம நிர்வாகம், தெற்குப் பேரணி தலைவர்), ஐயங்கார்.வி.என்.- சென்னை (கால்நடையாக வைக்கம் சென்றவர்), கண்ணம்மாள்.எஸ்.ஆர்- ஈரோடு, கணேசன்எஸ்.ஏ. -கோயம்புத்தூர், கந்தசாமிராஜு.வி- சென்னை (கால்நடையாகவே வைக்கம் சென்றவர்), கருப்பியம்மாள், கல்யாணி அம்மாள்.பி.கே, கறுத்த குஞ்சு.கே, காந்தி தாஸ், நாகர்கோயில், கீர்த்தி வாசன் (இந்து ஆசிரியர்).
கோவிந்தானந்தா சுவாமி- காஞ்சிபுரம் (மருத்துவ உதவி), சக்கரவர்த்தி ஐயங்கார்.ஆர் -கும்பகோணம் (பிரச்சாரம், சிறை வாசம்), சங்கர் ஐயர் மற்றும் இணை யர்- கல்லிடைக்குறிச்சி (பிரச்சாரம், சிறை வாசம்), சங்கரலிங்க நாடார்- விருதுநகர், சதானந்த முதலியார். எஸ்- அரக்கோணம், சந்தானம்.கே, சிவசைலம்- கன்னியாகுமரி (பிரச்சாரம், சிறை வாசம்), சிவகுரு நாதன்- திருப்பூர் (கதர் நிபுணர்), சிவதாணு பிள்ளை. ஏ.எம்- நாகர்கோயில் (தலைவர்), சிவராமன்- கல்லி டைக்குறிச்சி, சீனிவாசய்யங்கார்.எஸ் (சமாதானம், நிதி உதவி), சுப்பராய செட்டியார், சுப்பிரமணிய ஐயர்.என்.டி, சுப்பிரமணிய ஐயர்- கோயம்புத்தூர், சுப்பிரமணிய செட்டியார் (தாய் நாடு பத்திரிகையாளர்), சுப்பிரமணிய பிள்ளை, சுப்பையா- திருச்செங்கோடு, ஜெயவேலு.ஆர்- ஈரோடு, சொக்கலிங்கம்.டி.எஸ்- சேலம் (தமிழ்நாடு பத்திரிகையாளர், தன்னார்வலர், பதிவு), தங்கப்பெரு மாள் பிள்ளை.வா.மு- ஈரோடு. தத்துவானந்த சிவாச்சாரி- திருநெல்வேலி, தாணு மாலயப் பெருமாள் மற்றும் இணையர்- நாகர்கோயில், திருமேனிநாத நாடார்- விருதுநகர், நடராஜ செட்டி யார்.பி- பொள்ளாச்சி, நாகம்மை ஈவேரா, நாதமுனி, நாராயணன்.என்- மதுரை (ஆசிரம நிர்வாகி), பார்வதி அம்மாள்.ஏ.எம்.பெரியண்ணன்.
பெரியார், தலைவர் (பிரச்சாரம், சிறை வாசம்), மாரக்காயம்மாள், முத்துச்சாமி.சி மற்றும் இணையர்- நாகர்கோயில், மொய்தீன் கான்சாகிப்- திண்டுக்கல், ரங்கநாத நாயுடு- உடுமலைப்பேட்டை, ரத்தினம், ராமச்சந்திர ஐயர்- செங்கோட்டை, ராமநாதன்.எஸ் - மாயவரம் (ஆசிரம நிர்வாகி), லட்சுமி அம்மாள், வரத ராஜுலு நாயுடு.பி- சேலம் (நிதி உதவி, பிரச்சாரம்), வெங்கு ஐயர்- சேரன்மாதேவி, வெங்கட ரமண ஐயங் கார்.சி.வி (சமாதானம்), ஸ்ரீதரன் ஆகியோர் பங்கேற்றனர்.
பேரணி ஏற்பாடு
அய்யாவு பணிக்கர்- தக்கலை, குமார வேலு பணிக்கர்- தக்கலை, குலம் ஹைதர்- நாகர்கோயில், சிதம்பரம்.பி- நாகர்கோயில், சுவாமிநாத பிள்ளை- நாகர்கோவில், பத்மநாபம் தம்பி- புளியங்குறிச்சி, மருத நாயகன்.எஸ்- தக்கலை, ராமலிங்க பணிக்கர்- தக்கலை ஆகியோர் வைக்கம் வீதிகளில் நடந்த பேரணிகளுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர்.
நிதியுதவி
ஆஷர் சேட்- திருப்பூர், சோமசுந்தரம் செட்டியார்- மலாய், தனுஷ்கோடி நாடார்- விருதுநகர், முத்துரங்க முதலியார்.சி.என்- செங்கல்பட்டு, ராஜன்.டி.எஸ்.எஸ்- திருச்சி ஆகியோர் இப்போராட்டத்திற்கு தேவை யான நிதி திரட்டுவதில் முன்னின்றனர்.
பதிவு தன்னார்வலர்
அப்துல் அமீர்கான்- திருச்சி, கந்தசாமி ராஜா. கே -சேரன்மாதேவி, கலியபெருமாள் நாயக்கர்- சேலம், கெர்ணம் பாலு- வக்கீல், சின்னையா பிள்ளை- மாயவரம், ஸ்ரீரங்க செட்டியார்.வீ.ஆர்.சுப்பிரமணியம், சொக்கலிங்கம் பிள்ளை.பி - அம்பாசமுத்திரம், தண்ட பாணி பிள்ளை, நா.சிதம்பரம், திருமலை பிள்ளை.வி, தீர்த்தகிரி முதலியார்- சேலம், பழனியாண்டிப் பண்டாரம்- சேலம், பெரியசாமி செட்டியார், யக்ஞேசு வர சர்மா.வர, திருமதி வரதராஜுலு நாயுடு- சேலம் ஆகியோர் தன்னார்வலர்களாக பதிவு செய்து, களத்தில் நின்றனர்.
பிரச்சார குழு
இம்மாபெரும் எழுச்சிக்கு பிரச்சாரக் குழுவினராக அருணாசல நாடார், கோவிந்தசாமி நாடார் - விருது நகர், சங்கர பாண்டிய நாடார், சங்கைய நாடார்.மா. சுந்தரபாண்டிய நாடார், மாரியப்பன் நாடார், வெள்ளைச் சாமி நாடார்.எஸ். ஆகியோர் செயல்பட்டனர். இந்தப் பட்டியல் நமக்கு மகத்தான ஒரு சேதியைச் சொல்கிறது. தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக, சாதி மத வேறுபாடின்றி ஒட்டு மொத்த தமிழர்களும் திரண்டு களமிறங்கினார்கள் என்பதுதான் அது.
கட்டுரையாளர் : மாநில துணைத் தலைவர்,
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
ஆதாரம்: வைக்கம் போராட்ட வரலாறு- கி.வீரமணி;
வைக்கம் போராட்டம் - பழ.அதியமான்; ஜீவானந்தம்-டி.செல்வராஜ்