articles

img

ஒடிசா, ஹரியானாவில் இளைஞர்கள் தற்கொலை! -

செகந்திராபாத்தில் நடைபெற்ற போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ராகேஷ் என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தற்போது ஒடிசா, ஹரி யானா மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் 2 பேர், அரசின் காண்ட்ராக்ட் ராணுவ வீரர்கள் திட்டத்திற்கு எதிராக பரிதாபகரமான முறையில் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். “நாடு முழுவதும் நடைபெறும் வன்முறைச் சம்ப வங்களின் பின்னணியில், எதிர்க்கட்சிகளால் தூண்டப்  படும் கூலிப்படையினர் உள்ளனர்” என்று பாஜக-வைச் சேர்ந்த பீகார் மாநிலத் துணை முதல்வர் ரேணு தேவி முன்பு குற்றம் சாட்டியிருந்தார்.  ஆனால், தெலுங்கானா மாநிலம் செகந்திர பாத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர் ராகேஷ், ஒடிசா மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர் தனஞ்சய் மொஹந்தி, ஹரியானா மாநிலத்தில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர் சச்சின் (23) ஆகிய 3 பேருமே ராணுவத்தில் சேர உடல்தகுதித் தேர்விலும், மருத்துவ பரிசோத னையிலும் தேர்ச்சி பெற்றிருந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், எழுத்துத் தேர்விற்காக கடந்த 2 ஆண்டுகளாக இவர்கள் காத்திருந்துள்ளனர்.

வாரங்கல்:  தாமோதர் ராகேஷ்

செகந்திராபாத் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞர் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தாமோதர் ராகேஷ் (23) ஆவார். இவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பெற்றோர் குமாரசாமி - பூலாம்மா. இவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். ஹனுமகொண்டாவில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு படித்து வந்துள்ளார். 6 மாதங்களுக்கு முன்பு நடந்த ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று எழுத்துத் தேர்வுக்குத் தயாராகி வந்தார். இந்த பின்னணியிலேயே ராகேஷ் துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகினார். தற்போது ராகேஷ் குடும்பத்தினருக்கு தெலுங் கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ரூ. 25 லட்சம் நிவா ரணம் மற்றும் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், ராகேஷ் உயிர்ப் பலியானதற்கு, ஒன்றிய அரசின் தவ றான கொள்கைகளே காரணம் என்றும், தெலுங் கானா மக்களை மாநில அரசு பாதுகாக்கும் என்றும் அறிவித்துள்ளார்.

ஒடிசாவில் தனஞ்சய் மொஹந்தி

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள டெண்டேய் கிராமத்தில் வசிந்து வந்த தனஞ்சய் மொஹந்தியும், ராணுவத்தில் சேர கடுமையாக உழைத்து வந்தவர். ஒன்றரை வருடங்களுக்கு முன்பு  உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர், எழுத்துத் தேர்வுக்காக காத்திருந்துள்ளார். ‘அக்னிபாத்’ திட்டத்தால் மனமுடைந்த அவர் jதற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, தனது சகோதரரிடம் “’மன் னிப்பு’ கேட்டதோடு, தனது போன்-பே அக்கவுண்ட் விபரங்களை தெரிவித்துள்ளார்.

ஹரியானாவில் சச்சின்..

ஹரியானா மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர் சச்சினுடன் (23) பிறந்தவர்கள், நான்கு சகோதரிகள், ஒரு சகோதரர். தந்தை முன்னாள் ராணுவ வீரர். தந்தையைப் போலவே ராணுவத்தில் பணியாற்றுவதை விருப்பமாக கொண்டிருந்த இளைஞர் சச்சின் அதற்காக கடுமையாக உழைத்து வந்தார். உடல், மருத்துவ பரிசோதனையில் தேர்வு பெற்று எழுத்துத் தேர்விற்காக காத்திருந்துள்ளார். இதனிடையே, அக்னிபாத் திட்ட வயதுவரம்பால் சிக்கலை எதிர்கொண்ட அவர், மனமுடைந்து தற் கொலை செய்து கொண்டுள்ளார். சச்சினின் இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கலந்து கொண்டனர். அங்கு அவர்கள் நரேந்திர மோடி அரசாங்கத்தையும் அதன் கொள்கை களையும் கடுமையாக சாடினர். “மோடியின் திட்டங்க ளில் பெரும்பாலானவை நாடு முழுவதும் பல உயிர் களைக் காவு வாங்கி வருகின்றன” என்று குற்றம் சாட்டினர்.

உயிரை மாய்க்க வேண்டாம்...

அதேநேரம் ஓய்வுபெற்ற ராணுவ வீரரான சச்சினின் தந்தை சத்யபால், பொறுமை மற்றும்  அமைதியைக் கடைப்பிடிக்குமாறு இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். “நீங்கள் இராணு வத்தில் சேரத் தவறினால், வேறு வழிகளைத் தேடுங்கள்,  ஆனால் ஒருபோதும் உங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள். இளைஞர்கள் தங்கள் அமைதியை யும் பொறுமையையும் எளிதில் இழக்கிறார்கள், ஆனால் அவர்கள் தங்கள் பெற்றோரைப் பற்றி சிந்திக்க  வேண்டும்” என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

நெகிழ வைத்த பெற்றோர்

இதேபோல ஒடிசாவில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர் தனஞ்சய் மொஹந்தியின் பெற் றோரான ரஜனிகாந்த் - சுமதி தம்பதி, தங்களின் சோகத்திற்கு இடையிலும், இறந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்துள்ளனர். தனஞ்ச யின் சிறுநீரகம் மற்றும் கண்களை தானமாக எடுத்து கொள்ளும்படி அவர்கள் அரசை வலியுறுத்தி உள்ளனர்.

 

;