articles

img

மீண்டும் ஐ.எம்.எப். வலையில் விழப் போகிறதா இலங்கை? - பேரா.சி.பி.சந்திரசேகர்

இலங்கையின் பொருளாதாரம் பலமுனை நெருக் கடிகளால் உந்தப்பட்டு, பெருங் குழப்பத்தை நோக்கி சரிந்திருக்கிறது. கோவிட் பெருந் தொற்றுக் காலத்து அந்நியச் செலாவணி வருவாய் சரிவு, அந்நியக் கடன் தீர்வு வழிகளில் நிர்வாகச் சிக்கல், அந்நியச் செலாவணிக் கையிருப்பின் வீழ்ச்சி மற்றும் உக்ரைன் போரின் சங்கிலித் தொடர் விளைவு கள், இவையெல்லாம் காரணிகள். 

சுற்றுலா வருவாய் சரிவு

2020-ல், ஜனவரி முதல் மார்ச்சுக்குள், அந்நியச் செலாவணி கையிருப்பு 70 சதவீதம் சரிந்து, 2.4 பில்லி யன் டாலருக்கு வந்தது. இக்குழப்பத்தை நீட்டிக்கும் இணையான போக்காக, இலங்கை ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டது. மார்ச் முதல் வார இறுதிக்குள், இலங்கை மத்திய வங்கி பண மதிப்பிழப்பைத் தவிர்த்து, டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பை 200 ஆக வைத்திருந்தது. அதுவும் தாக்குப் பிடிக்காமல் பணத்தின் மதிப்பு 15 சதவீதம்  வீழ்ந்தது. பின்னரும் நிலைத் தன்மையின்றி ரூபாய் 300 க்கு வீழ்ந்தது. பெருந்தொற்றால், எதிர்மறை விளைவுகளைச் சந்தித்த இலங்கையின் சுற்றுலாத்துறை போன்ற  அடுக்கடுக்கான பலவீனங்களும் இந்த நெருக்கடியின் பின்னணியில் இருக்கின்றன.  டாலர்  மதிப்பிலான சுற்றுலா வருவாய் 2018இல்  4.4 பில்லியன், 2019இல், 3.6 பில்லியன், 2020 இல் 682 மில்லியன், 2022இல் 584 மில்லியன் என சரிவு கண்டது. டாலர் மதிப்பிலான ஏற்று மதி வருவாய் 2019 முதல் 2021 வரை 11.9 மில்லியன், 10 பில்லியன், 12.5 பில்லியன் எனத் தடுமாற்றம் கண்டது.

அந்நியக் கடன் சுமை

இலங்கையின் அந்நியச் செலாவணி ஈட்டல் தொ டர்ந்து பாதிப்புக்கு உள்ளானது. 35 பில்லியன் டாலர் அளவிலான அதன் அந்நியக் கடன் சுமை முக்கியக் காரணம். 2004- 2015 மகிந்த ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் கடன் சுமை 14.06 பில்லியன் டாலர் வரை ஏறியது. 2022-ஆம் ஆண்டில் மட்டும் இலங்கையின் கடன் தீர்வுச் செலவு 6.9 மில்லியன் டாலர்கள். வருவாய் இழப்பு மட்டுமன்றி அந்நியக் கடன்க ளுக்கு சீரான இடைவெளியில் திருப்பிச் செலுத்த வேண்டிய வட்டியும் முதலும் சேர்ந்து இலங்கையின் அந்நியச் செலாவணிக் கையிருப்பை விழுங்கி, ஜூலை 2021-ல், 2.8 பில்லியன் டாலரில் கொண்டு வந்து நிறுத்தியது. ஐ.எம்.எப் அளித்த 780 மில்லியன் டாலர்  கடன், இந்தியா மற்றும் சீனாவின் உதவிகள், வங்கதே சத்துடனான கரன்சி பரிமாற்ற ஒப்பந்தம் ஆகிய எவை யும் உதவாமல் போயின. ஜூன் 2016-ல் ஐ.எம். எப் உடன் மேற்கொள்ள இருந்த கடன் நிபந்தனை ஒப்பந்த முயற்சி யும் கை நழுவியது. விளைவாக, இலங்கையின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு 2022-இல் 1.6 பில்லியன் டாலராகத் தேய்ந்து போயிற்று.

மேலும் அந்நியக் கடனைத் திருப்பிச்செலுத்துவ தில் தவறுதல் நேரவில்லை என்ற தோற்றத்தை நிலை நிறுத்திக் கொள்ள இலங்கை அரசு முனைந்தது. விளைவு இறக்குமதிகள் மீதான தடை அதன் தொடர்ச்சி யாக, அந்நியச் செலாவணி வெளியே செல்வதைத் தடுக்கும் முயற்சி, மோட்டார் வாகனங்கள், உரங்கள், சர்க்கரை, மஞ்சள் என்று அனைத்துக்கும் நீண்டது தடை. முக்கியமாக உரங்கள் மீதான இறக்குமதித் தடை இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக என்று சொல்லப்பட்டது. பின்னாளில் இத்தடை விலக்கிக் கொள்ளப் பட்டது. என்றாலும் அரிசி மற்றும் தேயிலை உற்பத்தி யில் ஏற்பட்ட பாதிப்பு இன்னமும் தொடர்கிறது.

உணவுக் கிளர்ச்சி

மூலதனம் முதல் நுகர்வுப் பொருள் வரை இறக்கு மதியை நம்பியிருக்கும் இலங்கை இத்தடைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, எரிவாயு இறக்கு மதிக் கட்டுப்பாடுகள் எரிவாயு நிரப்ப வாகன ஓட்டிகளின் நீள்வரிசை, மின்வெட்டு, மருத்துவமனைகளில் அவசர கால மருந்துகளின் தட்டுப்பாடு, பாய், உணவுப் பொருள், சமையல் எரிவாயு இவற்றின் பற்றாக்குறை என நீள்கின்றன பாதிப்புகள். காகிதத் தட்டுப்பாடு மாண வர்களுக்கான தேர்வுகள் முதல் செய்தித்தாள் அச்சிடல் வரை முடக்கியுள்ளது. உரம் மற்றும் பூச்சி மருந்துத் தடைகள் விவசாய உற்பத்தியைக் குறைத்து, மீண்டும் இறக்குமதியை எதிர்நோக்கும் நிலைக்குத் தள்ளி விட்டது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்கள். இந்த எதிர்விளைவுகள் ஒன்றோடொன்று தொடர்பில் இருப்பதால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. 

ரூபாயின் வீழ்ச்சி இறக்குமதி விலையை அதிகரித்து  பஞ்சத்தை நோக்கி நகர்த்தியுள்ளது. ஏற்றுமதியாளர் கள், நிதியைப் பின்னோக்கித் தங்கள் இடங்களுக்குத் திருப்ப முறையற்ற கள்ளச்சந்தைப் பரிமாற்றங்களில் லாபம் காண வேண்டிய நிலையில் உள்ளனர். இலங்கை அரசு அந்நியச் செலாவணிக் கையிருப்பைக் கொண்டு கட்டுப்பாடுகளைக் குறைக்க வக்கற்று அந்நியக் கடன் தரும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்து முகம் காத்துக் கொள்ள முனைந்தது. ஜனவரி 2022-இல், இலங்கை மத்திய வங்கி 500 பில்லியன் டாலர் கடனைத் திருப்பிச் செலுத்த முனைந்த போது, முன்னணிப் பொருளாதார நிபுணர்கள் அதனைத் தவிர்க்கும் படியும் ஒதுக்கீட்டை இன்றியமையாத இறக்குமதிகளுக்குத் திருப்பி விடவும் அறிவுறுத்தினர்.

திவால் நிலையில் நிறுவனங்கள்

உற்பத்திக் குறைவு, விவசாயத்தின் கையறு நிலை, தொழிற்சாலைகள் முழுத்திறனின்றி இயங்கல் (இடுபொ ருள் மற்றும் வாங்கும் திறன் பிரச்சனைகள் காரணமாக) மற்றும் சுற்றுலாத் துறையின் வீழ்ச்சி- இவை பொருளா தார நெருக்கடியை அதிகரித்துள்ளன. இறக்குமதி செய்யப்படும் எரிவாயு சம்பந்தப்பட்ட விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம். இவை இடுபொருட்களின் விலை யை எகிறச் செய்கின்றன. இவ்வகையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்துவதன் மூலம் இந்த ஏற்றத்தாழ்வை ஈடு கட்ட இயலவில்லை. உள்ளூர்ப் பணத்தை வைத்து வெளிநாட்டுக் கடனைக் கட்ட நிறுவனங்கள் திணறுவதுடன் திவாலா கும் நிலைக்கு நகர்கின்றன. இந்தநிலை, உக்ரைன் -ரஷ்யா போருக்கு முன்பே ஏற்பட்டுவிட்டது. உக்ரை னும், ரஷ்யாவும் இலங்கையின் முதன்மையான சுற்றுலாக் கூட்டாளிகள் என்பதும், நிலைமையை மேலும் மோசமாக்கிவிட்டது.  இக்குழப்பத்தின் ஊடாக இலங்கை அரசு இந்தியா, சீனா - இவற்றின் உதவியுடன் பொரு ளாதாரத்தைத் தூக்கிப் பிடிக்க இலக்கின்றிப் போராடு கிறது. மேலும் ஐஎம்எப் உடன் அதன் கடும் நிபந்த னைகள் காரணமாகவே ஊடல் கொண்டிருப்பது போல் காட்டிக் கொள்ளவும் முனைகிறது.

மீனுக்குத் தலை... பாம்புக்கு வால்

இலங்கை தன் அண்டை நாடுகளான சீனா மற்றும் இந்தியா இவைகளுக்கிடையே எதிர்ப்பு உணர்வை வளர்த்து, இருதரப்பில் இருந்தும் ஆதரவைப் பெறவும் தயங்கவில்லை. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்துக்கான ஒப்பந்தம் சீனாவுடன் சாலை மற்றும் எல்லைப்புறக் கூட்டுத் திட்டம், அந்நியச் செலா வணி மாற்று போன்ற சலுகைகளைப் பெற்றது. அதற்குக் கைமாறாக இந்தியா மற்றும் ஜப்பான் உடனான முத்தரப்பு உடன் படிக்கையைக் கைவிட்டது. அதன் மூலம் ஒப்பந்தத்தை சீனாவின் ‘ஹார்பர் இஞ்சினியரிங்’ கம்பெனிக்கு அளித்தது. இதனால் இந்தியாவின் அதிருப்தியை சம்பாதித்தது.  இதை சமாளிக்க  அருகிலுள்ள இரண் டாவது முனையத்தை இந்தியாவின் கார்ப்பரேட் பெரும் முதலாளி அதானிக்கு ஒதுக்கியும்   பயனில்லை. முந்தைய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே 2017-இல் தனது தில்லி வருகையின் போது அப்போதைய முத லாம் மோடி அரசுடன் செய்து கொண்ட ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் இன்றைய இலங்கை அரசு கிடப்பில் போட்டது.  ஆனால் தற்போது பெய்ஜிங்- கொழும்பு இடையே இறுக்கம் நிலவுகிறது. சீனாவின் குவிங்டாவோ சீவின் பயோடெக் கம்பெனியால் அனுப்பப்பட்ட 20000 டன் எடையுள்ள இயற்கை உரங்களில் பயிரைப் பாழாக்கக் கூடிய ‘எர்வீனியா பாக்டீரியா’ இருப்பதாகக்கூறி, அதை இறக்கவும் பணம் செலுத்தவும் இலங்கை மறுத்து விட்டது. சந்தர்ப்பம் பார்த்துக் களமிறங்கிய  இந்தியா, இலங்கைக்கு நானோ நைட்ரஜன் உரத்தினை அவசர காலத் தேவைக்காக அனுப்பியது. இலங்கை சைனோ சோலார்ஹைபிரிட் டெக்னாலஜி நிறுவனம் மூலமாக  தீவின் மூன்று வடக்கு எல்லைகளில் மேற்கொள்ள விருந்த பணிகளை நிறுத்தியது.தனது கடல் எல்லையை ஒட்டியதான சீனாவின் நடமாட்டத்தை இந்தியா ஆட்சே பித்ததே இதற்கு காரணம். சீனாவும் மூன்றாவது நாட்டின் தலையீட்டால் திட்டங்கள் கைவிடப்படுவதாக அறிவித்தது.

மீண்டும் ஐ.எம்.எப் வலையிலா?

முரண்பாடுகள் இருந்தாலும் இந்தியா மற்றும் சீனாவி டம் இருந்து கிடைத்த உதவியைக் கொண்டு, உள்நாட்டுத் தட்டுப்பாடு, பணவீக்கம் இவற்றைச் சமாளித்து அந்நியச் செலாவணிக் கையிருப்பு வீழ்ச்சிக்கு முட்டுக் கொடுத்து டாலர் வருவாய் புதுப்பிக்கப்படும் வரை தாக்குப் பிடிக் குமா என்பது உறுதியில்லை. இது நேராத பட்சத்தில் இலங்கை மீண்டும் ஐ.எம்.எப் நிறுவனத்தை தஞ்ச மடைய வேண்டியதுதான். பல்வேறு எச்சரிக்கைகளை யும் மீறி இதுதான் இறுதிப் புகலிடம் எனில் ஐ.எம்.எப் விதிக்கப் போகும் கட்டுப்பாடுகள், இலங்கையின் இருக் கிற வலிகளை மேலும் பெருக்குவதாகவேஅமையும். நிதிநிலைமை இழுபறியானதால் இலங்கையால் தற்போதைய நெருக்கடியை சமாளிக்க இயலவில்லை. வெளிநாட்டுக் கடன்சுமை தலைக்கு மேலே சென்ற போதும், 2019-இல் ராஜபக்சே அரசு வாட் வரியை 15இல் இருந்து 8 சதவீதமாகக் குறைத்தது. தேச நிர்மாணத்துக் கான 2 சதவீத வரியை  நுகர்பொருள் மற்றும் சேவை மீதிருந்து நீக்கியது. 

பங்குச் சந்தை ஈட்டும் மூலதன லாபவரி, ஊழியர்களின் சம்பளப் பிடித்த வரி எல்லாம் நீக்கப்பட்டன. இந்த வரிக்குறைப்புக் கொண்டாட்டங்கள் நாட்டின் மொத்த ஜி.டி.பி வருவாயில் 4 சதவீதத்தை ஏப்பம் விட்டது. இந் நிலை கோவிட் பெருந்தொற்றுக்குப் பிந்தய  நிதிச்சரிவைத் தீவிரப்படுத்தியது. இதைச் சரிக்கட்ட 2022 பட்ஜெட் டில் விதிக்கப்பட்ட செல்வந்தர்கள் மீதான சர்சார்ஜ் மற்றும் சில வரிகள் மிகுந்த தாமதமானவை. தேவை யுடன் ஒப்பிடுகையில், மிகவும் அற்பமானவை. தற்போதும், இலங்கை அந்நியச் செலாவணி நெருக் கடிக்கே கவனம் தருகிறது. இந்தியா, சீனா மற்றும் உலக நாடுகள் கடன் நீட்டிப்பு, உதவிகளைக் கூட்டுதல்  என்ற வகைகளில் கை கொடுக்காவிட்டால் இலங்கை கடனில் மூழ்குவதை யாராலும் தடுக்க முடியாது.

(“மேக்ரோ ஸ்கேன்” இணைய இதழ் கட்டுரை),
கட்டுரையாளர் : பொருளாதார அறிஞர்,
தமிழில்: ஆர்.விஜயலட்சுமி


 

;