தமிழகம்

img

நீட் தேர்வில் தேனி அரசுப் பள்ளி மாணவர் இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை...

தேனி:
 நீட் தேர்வில் தேனி மாவட் டத்தில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே டி.வாடிப்பட்டியைச் சேர்ந்த மாணவர் ஜீவித்குமார். இவர் உள்ளூரில் 8-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்தார். பின்பு சில்வார்பட்டியில் உள்ள அரசுமாதிரி பள்ளியில் பிளஸ் 2 வரை படிப்பைத் தொடர்ந் துள்ளார்.

பிளஸ்-2 தேர்வில் 548 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவராக வெற்றி பெற்றார். படிப்பில் சிறந்து விளங்கியதால் இவரை நீட்தேர்வு எழுத பள்ளி தலைமையாசிரியர் மோகன் உள்ளிட்டஆசிரியர்கள் கேட்டுக்கொண்டனர். பள்ளியிலேயே பயிற்சியும் அளித்தனர். இதைத் தொடர்ந்து அவர் நீட்தேர்வு எழுதினார். தேர்வு முடிவுகள்வெள்ளிக்கிழமை வெளியானது. இதில் 720க்கு 664 மதிப்பெண் பெற்றுள்ளார். அரசுப்பள்ளிகள் பிரிவில் இவர்இந்திய அளவில் முதலிடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இவரது தந்தை நாராயணசாமி ஆடு வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். தாய் மகேஸ்வரி நூறு நாள் வேலைத்திட்டம் மற்றும் தையல் தொழிலையும் செய்து வருகிறார்.

சாதனை படைத்த மாணவர் ஜீவித்குமார் கூறுகையில், தாய் மொழி வழியிலான படிப்பு எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. பாடத்திட்டத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப் பட்டிருந்ததுதான் இதற்குக் காரணம். எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ராசிபுரத்தில் உள்ளதனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்தேன். வாரம் இரண்டுமுறை தேர்வு, தினமும் பத்துமணி நேர படிப்பு போன்றவைதேர்வை எளிதாக்கியது. சிபிஎஸ்இ.பாடப்புத்தகங்களை தமிழில் மொழி பெயர்த்து படித்தேன்.ஆரம்பத்தில் மருத்துவராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. ஆனால் நீட்தேர்வு கடினமானது, அதற்குப் பயந்து கொண்டு பலரும் தற் கொலை செய்வது எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியது. நாமே ஒரு முன்மாதிரியாக விளங்க வேண்டும். இந்தத்தேர்வு ஒன்றும் அவ்வளவு கடினமானதல்ல. முனைப்புடன் படித்தால் வெற்றி பெறலாம். என்பதை உணர்த்தும் வகையில் படித்தேன். வெற்றி பெற் றேன் என்றார்.

துணை முதல்வர்-ஆட்சியர் வாழ்த்து
சாதனை மாணவன் ஜீவித்குமாரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனிமாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் ஆகியோர் பாராட்டியுள்ளனர். தேனி ஆட்சியர் ஜீவித் குமார் தமது அலுவலகத்திற்கு அழைத்து வாழ்த்து தெரி
வித்து புத்தகம் ஒன்றை பரிசளித்தார்.

;