செவ்வாய், டிசம்பர் 1, 2020

tamilnadu

​​​​​​​இடஒதுக்கீடு வழங்கக்கூடாது: ஆளுநருக்கு பாஜக கடிதம்

சென்னை:
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என ஆளுநருக்கு பாஜக கடிதம் அனுப்பியுள்ளது.பாஜகவின் கல்வி பிரிவு மாநிலச் செயலாளர் நந்தகுமார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடிதம் எழுதியுள்ளார். நந்தகுமார் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேசன் சங்க பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

சமீபத்தில் பாஜகவில் ஐக்கியமாகிய அண்ணாமலை, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக சட்டப்பேரவையின் மசோதாவுக்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று தெரிவித்திருக்கிறார். பாஜக மாநில தலைவர் வேல்முருகன் இதே கோரிக்கையை வலியுறுத்தியிருக்கிறார்‌ ஆனால், அந்தக் கட்சியின் கல்விப்பிரிவு தலைவர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று கடிதம் எழுதியிருப்பது பாஜக தலைவர்களின் இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டியுள்ளது.

;