திங்கள், செப்டம்பர் 28, 2020

தமிழகம்

img

எல்இடி வீடியோ மூலம் கொரோனா விழிப்புணர்வு

சென்னை:
சென்னையில் கொரோனா குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த 30 சிறிய அதிநவீன எல்.இ.டி. வீடியோ வாகனங்களின் சேவைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி சார்பில், மண்டலத்திற்கு 2 வாகனங்கள் வீதம், 15 மண்டலங்களுக்கு, எல்.இ.டி. வீடியோ வாகனங்களின் சேவைகளை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.10 லட்சம் வீடுகளுக்கு 3 கட்டங்களாக 30 லட்சம் கொரோனா, டெங்கு மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் பணியையும், நேப்பியர் பாலம் மற்றும் டாக்டர் ராதாகிருஷ் ணன் மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள மாறும் வண்ண விளக்குகள் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார்.கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பிய 1 லட்சம் பேருக்கு செல்போன் குரல் பதிவு மூலம் வாழ்த்துகள் தெரிவிக்கும் திட்டத்தையும் அவர் துவக்கி வைத்தார்.

;