திங்கள், செப்டம்பர் 28, 2020

தமிழகம்

img

8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை:
சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒடிசா மற்றும் மேற்குவங்க கடலோரப் பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50-60 கிலோ மீட்டர் வேகத் தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுவதாகவும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

;