திருப்பத்தூர், மே 31- கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங் கரை தாலுகா மொசலிக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி ஷரீப். இவரது மனைவி ரோஸ்லின் சுல்தானா (27). இவர் பிரசவத் திற்காக கடந்த வெள்ளிக்கிழமை திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (மே 31) காலை 9 மணியளவில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர், தான் உன்னுடன் படித்தவள் என்னைத் தெரியவில்லையா எனக் கேட்டு, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். பின்னர் தன்னுடைய தங்கையும் இங்கு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவ ருக்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தனது தங்கையின் மன நிலை சற்று நிதானத்துடன் இல்லை என்றும், உங்களுடைய குழந்தையை கொடுத்தால் காட்டி விட்டு வருகிறேன் என்று கூறி குழந்தையை எடுத்துச் சென் றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகி யும் அவர் திரும்பி வரவில்லை. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திருப்பத்தூர் நக ரம் தேவங்கர் தெருவை சேர்ந்த நஹினா (25) என்பவர் குழந்தையை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் நஹினாவை கைது செய்து, குழந் தையை மீட்டனர்.