tamilnadu

img

நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கக் கோரி வாலிபர் சங்கம் போராட்டம்....

சென்னை:
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு ஒன்றிய மோடி அரசு உடனடியாக ஒப்புதல் வழங்கக்கோரி போராட்டம் நடத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை பிளஸ்-2 மதிப்பெண்அடிப்படையிலேயே நடைபெற வேண்டுமென்றும், அகில இந்திய அளவில் நடைபெறும் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும்  தமிழ்நாடுசட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட் டது. இம்மசோதாவிற்கு குடியரசுத் தலைவர்உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பிற்கு 2017 ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டுவருகிறது. இந்த தேர்வு ஏழை, எளிய மாணவர்களின் நலன்களுக்கு விரோதமாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் மருத்துவக்கனவோடு இருந்த மாணவி அரியலூர் அனிதா தொடங்கி அரியலூர் கனிமொழி வரை16 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

தற்சமயம் கல்வியானது பொது பட்டியலில் உள்ளது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு மாநிலங்களை  கலந்தாலோசிக்காமல் எதேச்சதிகாரமாக சட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில்  மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இம் மசோதாவிற்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்து மாணவர்களின் உயிரிழப்பை தடுத்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்திட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.