பேஸ்புக் உலா

img

வள்ளுவர்: பாஜகவின் படத்தை அமைச்சர் ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா?

"கடவுள் வாழ்த்து படைத்த தெய்வப்புலவர்(வள்ளுவர்) நாத்திகராக இருக்க வாய்ப்பே
இல்லை" என்று தமிழ் வளர்ச்சி துறை அமைச்ர் பாண்டியராஜன் ஒரு பதிவு போட்டிரு
க்கிறார். அவரே வள்ளுவர் சமணராகவும் இருக்கலாம் என்று ஒப்புக் கொள்கிறார்.
சமணம் பரமாத்மா எனும் கடவுளை ஏற்ற மதம் அல்ல என்பதை அவர் அறியவில்லை.
குறளில் உள்ள "கடவுள் வாழ்த்து" என பின்னாளில் தலைப்பிடப்பட்டுள்ள பத்து குறள்க
ளிலும் கடவுள் எனும் சொல் இல்லை. சமணத்தின் அருகரையே விதவிதமான வாத்தைக
ளில் அது அழைக்கிறது. இந்தச் சொற்கள் அருகரை விளிக்க சிலப்பதிகாரத்திலும் பயன்
படுத்தப் பட்டுள்ளன. நிற்க. வள்ளுவருக்கு சைவமதச்சாயம் பூசும் வகையில் பாஜக
அடையாளங்கள் போட்டிருப்பதை அமைச்சர் பெருமான் ஆதரிக்கிறாரா, எதிர்க்கிறாரா?

-Ramalingam Kathiresan

 

;