பேஸ்புக் உலா

img

வள்ளுவரை கட்டாய மத மாற்றம் செய்யும் எச் ராஜா

வள்ளுவரை கட்டாய மத மாற்றம் செய்யும் எச் ராஜா

குறளில் "இந்து மத தெய்வங்கள்" வருவதாக எச் ராஜா கூறுகிறார். வள்ளுவர் காலத்தில்
இந்து மதமே கிடையாது. இருந்தது வேத மதமே. அதன் கடவுள்களை உதாரணத்திற்குத்தான்
பயன்படுத்தி யிருக்கிறாரே தவிர வழிபடும் தன்மையில் அல்ல. அவர் கூறுகிற குறள் 25ல்
இந்திரன் வருவது உண்மை. எதற்கு தெரியுமா? இந்திரன் மதயானையை வென்றவன் என்றார்
கள் வேத மதத்தவர். இவரோ ஐம்புலன்களே அந்த யானை, அதை அடக்கியவனே இந்திரன்
என்றார். அவர் கூறுகிற குறள் 610ல் "அடியளந்தான்" என வருவது உண்மை. எதற்கு
தெரியுமா? சோம்பல் இல்லாத மன்னனால் இந்த உலகையே வெல்ல முடியும் என்பதற்காக.
மாபலியின் பூமியை வாமனனாக வந்து வஞ்சகத்தால் விஷ்ணு வெல்லுவார். பூமியை
வெல்ல வஞ்சனை தேவையில்லை, சுறுசுறுப்பு போதும் என்பதற்கு. இப்படித்தான் இந்த
தெய்வங்கள் வேறு சில குறள்களிலும் வருகின்றன. எனவே இதைச் சொல்லி வள்ளுவரை
கட்டாய மத மாற்றத்திற்கு ஆளாக்குவது மாபெரும் சித்தாந்த மோசடி.

-Ramalingam Kathiresan

;