பேஸ்புக் உலா

img

குடியுரிமைச் சட்ட திருத்த மசோதா: அன்று இலங்கையில் இன்று இந்தியாவில்...

தற்போதைய இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட குடியுரிமை சட்டத்தின் CBA , NRC பின்னணியில் அன்றைய இலங்கை .
இலங்கைக் குடியுரிமைச் சட்டம், 1948 என்பது 1948 ஆம் ஆண்டில் இலங்கை பிரித்தானியரிடமிருந்து விடுதலை பெற்றதும், அதன் குடிமக்கள் யாரென வரையறுப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டமாகும். இது 1948 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இது புதிதாக விடுதலை பெற்ற நாடொன்றிற்குத் தேவையான ஒரு நடவடிக்கையாகவே தோன்றினாலும் சிங்களத் தேசிய வாதிகள் இந்தச் சட்டத்தின் மூலம் இன்னொரு நோக்கத்தையும் நிறைவேற்றினார்கள். அதாவது இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில், இந்தியாவின் தமிழ் நாட்டிலிருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களாகக் கொண்டுவரப்பட்டுக் குடியேற்றப்பட்ட இலட்சக் கணக்கான தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்கள் ஆக்குவதில் அவர்கள் வெற்றிபெற்றார்கள். நாடு விடுதலை பெற்றதிலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்றுவந்த இன முரண்பாடுகளின் தொடக்க வெளிப்பாடுகளில் ஒன்றாக இந்தச் சட்டம் அமைந்தது எனலாம். இச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து இடதுசாரிக் கட்சியினரும் எதிர்த்தனர்.

-Sugan Paris

;