பேஸ்புக் உலா

img

வெற்றி மீது வெற்றி வந்து... வந்து... வந்து......

சமீபத்தில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்று திரும்பிய போது ஊடகங்களும், மோடி பக்தர்களும் வெற்றிகரமான அமெரிக்க விஜயம் என்று கொண்டாடினார். நேற்று அமெரிக்க செனட் உறுப்பினர் அளித்திருக்கும் ஒரு அறிக்கை காஷ்மீர் நிலை குறித்து கவலை தெரிவித்தது மட்டுமின்றி அங்கு தொலை தொடர்பு மற்றும் இணைய சேவைகளைத் திரும்ப வழங்குமாறும், மாநிலத்தில் அமுலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவைத் திரும்பப் பெறுமாறும், காவலில் வைக்கப் பட்டிருப்பவர்களை விடுவிக்குமாறும் இந்திய அரசினை வலியுறுத்தியிருக்கிறது. இந்த அறிக்கை அமெரிக்க செனட்டர் கிறிஸ் வான் ஹோல்லன் சமீபத்தில் நடத்திய இந்திய விஜயத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.
இதில் வேடிக்கை என்னவென்றால் மோடி அமெரிக்காவில் இருந்த போதுதான் செனட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஹூஸ்டனில் அதிபர் டிரம்புடன் ‘ஹவ்டீ மோடி’ என்ற நிகழ்வில் அவர் பங்கேற்ற சில நாட்களுக்குள் வெளியிடப்பட்டது. “அமெரிக்காவின் கவலைகளை இந்திய அரசு அக்கறையுடன் பார்கக்கும்” என் நம்புவதாக இந்து பத்திரிக்கை நிருபரிடம் கூறிய ஹோல்லன் பிரதமர் மோடியுடனும் பகிர்ந்து கொள்வேன் என்றும் கூறியிருக்கிறார். அமெரிக்காவின் மனித மீறல் உரிமை குறித்த ‘கவலைகளுக்குப்’ பின்னால் இருக்கும் அரசியல் பொருளாதரம் என்ன என்பது உலகறிந்த ரகசியம்.
அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தம் மோடி விஜயத்தின் போது கையெழுத்தாகும் என்ற எதிர்பார்ப்பும் இது வரை நிறைவேற வில்லை. அதாவது, இன்னும் பேரம் படியவில்லை என்று அர்த்தம்.

வெற்றி என்பதற்கு பக்தர்கள் இனி எப்படி விளக்கம் கொடுக்கப் போகிறார்கள் என்பதை நினைக்கும் போதுதான்..... ஸ்... அப்பா.....

-Vijayasankar Ramachandran

;