கனமழை எச்சரிக்கை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கு செல்லத் தடை
ஸ்ரீவில்லிபுத்தூர், மே 24- சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள மழை முன்னெச்சரிக்கை செய்தி குறிப்பின் படி ஞாயிறு, திங்களன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் எல்லைக்கு உட்பட்ட தாணிப்பாறை, அய்யனார் கோவில், சாஸ்தா கோவில், செண்பகத்தோப்பு, ராக்காச்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள் ளது. எனவே பொதுமக்கள் யாரும் இரு நாட்கள் செல்ல அனுமதி இல்லை என்று மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.