வெள்ளி, ஆகஸ்ட் 7, 2020

தமிழகம்

img

நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்காது... 

சென்னை
மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக ஜூலை மாதம் முழுவதும் சில கட்டுப்பாடுகளுடன், தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்காது  என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து அச்சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,"தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது என்பதால் இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை பெட்ரோல் பங்க்குகள் இயங்காது. மேலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெட்ரோல் பங்க்குகள் இயங்காது. பால், ஆம்புலன்ஸ் மற்றும் அவசர மருத்துவ வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் வழங்கப்படும். குறிப்பாக திங்கட்கிழமை முதல் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே  பெட்ரோல், டீசல் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;