tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பிறந்த நாள் வாழ்த்து

திமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமியின் பிறந்த நாளையொட்டி அவரது இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மக்களவை உறுப்பினர் கலாநிதிவீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன் மற்றும் குடும்பத்தினர் உடனிருந்தனர்.

போக்குவரத்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்  

15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க வேண்டும், சென்னையில் அரசே இ-பேருந்து, மினி பேருந்துகளை இயக்க வேண்டும், வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும், ஓய்வுபெற்றோரின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று (ஏப்.21) பல்லவன் இல்லம் முன்பு அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர்‌.துரை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கே.ஆறுமுகநயினார், சசிகுமார், வி.தயானந்தம், ஏ.ஆர்.பாலாஜி (சிஐடியு), நந்தா சிங் (ஏஐடியுசி), நாகராஜ் (டிடிஎஸ்எப்) உள்ளிட்டோர் பேசினர்.

மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும், 40 ஆயிரம் ஆரம்பகட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை அடையாளங்கண்டு வாரியமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும், கேங்மேன் பணியாளர்களுக்கு ஊர் மாற்றம், கள உதவியாளர் பதவி மாற்றம் வழங்குவதோடு 1.12.2019 முதல் வழங்க வேண்டிய 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றிட வலியுறுத்தி திங்களன்று (ஏப்.21) மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் தர்ணா நடத்தினர். சென்னை மண்டல செயலாளன் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மத்திய அமைப்பின் தலைவர் தி.ஜெய்சங்கர், பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், துணைப் பொதுச் செயலாளர்கள் ரவிக்குமார், ரவிச்சந்திரன், மாநிலச் செயலாளர்கள் அருட் செல்வன், எஸ்.கண்ணன், துணைத் தலைவர் சாலட் உள்ளிட்டோர் பேசினர்.

மின் ஊழியர்கள் மக்கள் சந்திப்பு இயக்கம்

தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சென்னை மேற்கு செயலாளர் எஸ்.எஸ்.கணேஷ்ராவ் தலைமையில் அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகே மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் கே.ரவிச்சந்திரன், கே.அருள்செல்வன், பி.எஸ்.முனியாண்டி, கே.ராஜேந்திரன், ஜி.குப்பன், என்.செல்லன், டி.கார்த்திகேயன், இ.பாலசுப்பிரமணியன், பி.பன்னீர்செல்வம், கே.ஜோதிபாசு  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.